பூமியின் கடைசி நாடு எங்க இருக்கு தெரியுமா?


Do you know where the last country on earth is?
world country
Published on

பூமி உருண்டை என்பதை நாம் பள்ளிப் பருவத்திலேயே அறிந்திருக்கிறோம். பூமியின் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு நாடு உள்ளது. அந்த வகையில் பூமியின் கடைசி நாட்டை பற்றி தெரிந்து கொள்வோம்.

பூமியின் கடைசி நாடு மற்றும் அழகான நாடு நார்வே ஆகும். பூமி தனது அச்சில் சுழலும் வட துருவத்திற்கு அருகில் இந்த நாடு அமைந்துள்ளது. வடக்கு நார்வேயில் உள்ள ஹேவர்பெஸ்ட் நகரில் ஒரு நாளான 24 மணி நேரத்தில் சூரியன் 40 நிமிடங்கள் மட்டுமே மறைவதால் இது நள்ளிரவில் சூரியன் உதிக்கும் நாடு என பெயர் வருகிறது.

கோடையிலும் பனி உறையும். இங்கு கடுமையான குளிர்காலத்தில் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரிக்கு குறைகிறது . இந்த நாடு வட துருவத்திற்கு அருகில் இருப்பதால் கோடைகாலத்தில் இரவு பொழுதே இல்லாமல் மற்ற நாடுகளைப்போல பகல் இரவும் இல்லை. அதற்கு பதிலாக இங்கு ஆறு மாதங்கள் பகலும், ஆறு மாதங்கள் இரவு இருக்கும். குளிர்காலத்தில் சூரியன் தெரிவதில்லை. ஆனால் கோடையில் சூரியன் மறைவதில்லை.

எனினும் இங்கு தனியாகச் செல்வது தடைசெய்யப் பட்டுள்ளது. E-69 எனப்படும் உலகின் கடைசி நெடுஞ்சாலை பூமியின் முனைகளை நார்வேயுடன் இணைக்கிறது. இந்த சாலைதான் உலகின் கடைசி சாலையாகும். நீங்கள் அங்கு சென்றடையும்போது, எங்கு செல்வது என்று உங்களுக்குத் தெரியாது,.

இதையும் படியுங்கள்:
சிறுமலை: ஓரு பசுமையான பயண அனுபவம்!

Do you know where the last country on earth is?

இங்கே, ஒரு பெரிய குழு மக்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இங்கு எல்லா இடங்களிலும் பனி உள்ளதால் தனியாகப் பயணம் செய்தால் தொலைந்துபோகும் வாய்ப்பு இருப்பதால் தனிப்பயணம் தடைசெய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் சூரிய அஸ்தமனம் மற்றும் துருவ ஒளியைப் பார்ப்பது வேடிக்கையானது. பல ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மீன் வர்த்தகம் இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் படிப்படியாக நாடு வளர்ச்சியடைந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு வரத் தொடங்கியுள்ளனர் ஆதலால் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான ஹோட்டல்கள் உணவகங்களின் வசதிகளும் இருக்கின்றன. இந்த அதிசய நாட்டை சுற்றிப்பார்க்க எண்ணம் வருகிறதுதானே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com