
மனிதர்கள் வாழ தண்ணீர் மிக முக்கியமானது. அந்த தண்ணீரை பெற மழைதான் முதன்மையான வழியாக எப்போதும் உள்ளது. உலகில் ஆண்டு முழுவதும் அதிக மழை பெய்யும் இடங்களைத்தான் நாம் அறிவோம். உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மாசின்ராம் கிராமம் உள்ளது. ஆனால் மழையே பெய்யாத ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
ஒரு ஊரில் மழையே பெய்யாவிட்டால் அந்த ஊர் எப்படி இருக்கும்? பாலைவனமாகத்தான் இருக்கும். ஆனால், இந்த கிராமம் பாலைவனத்தில் இல்லை. இந்த கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாது. அதற்குக் காரணம். இந்தக் கிராமம் மேகங்களுக்கு மேலே அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் கீழ் மேகங்கள் உருவாகி மழை பெய்கிறது. இந்த அபூர்வ இயற்கை சூழல் வேறு எங்கும் கிடையாது.
அரபு நாடுகளில் ஒன்றான யேமன் நாட்டின் தலைநகர் சனாவில் இருந்து சற்று தொலைவில் மன்கா ஹர்ஜ் பகுதியில் அமைந்துள்ளது இந்த மழை பொழியாத கிராமம். அந்த கிராமத்தின் பெயர் அல்-ஹுதைப். இந்த கிராமம் மலை உச்சியில் அமைந்துள்ளது.
இந்த கிராமம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 3200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உருவாகும் மேகங்கள் எப்போதும் மலைகளுக்கு கிழேதான் செல்கின்றன. மேகங்களுக்கு மேலே அல்-ஹுதைப் கிராமம் அமைந்துள்ளதால், ஒருபோதும் அங்கு மழை பெய்யாது.
இந்த கிராமத்தின் மேற்பகுதியில் மழை மேகங்கள் ஒருபோதும் உருவாகாது. கிராமத்திற்குக் கீழே எப்போதும் மேகமூட்டமான வானம் இருக்கும், அதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெய்யும், ஆனால் கிராமத்தில் மழை பெய்யாது. இந்த அற்புதமான காட்சியை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் இங்கு வருகிறார்கள்.
கிராமத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலை மிகவும் சூடாக இருக்கும், குளிர்காலத்தில் காலையில் வானிலை மிகவும் குளிராக இருந்தாலும், சூரியன் உதித்தவுடன் மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
குளிர்காலத்தில், காலைக் காற்று மிகவும் குளிராக இருக்கும், ஆனால் சூரியன் உதிக்கும்போது வெப்பம் உடனே அதிகரிக்கும். இந்த கிராமம் 'அல்-போஹ்ரா அல்லது அல்-முகராமா' சமூக மக்களின் கோட்டையாகும். இந்த மக்கள் 'யேமன் சமூகம்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
மலை உச்சியில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற அம்சங்களுடன் கூடிய பண்டைய மற்றும் நவீன கட்டிடக்கலையை சேர்த்து கட்டப்பட்ட அழகான வீடுகள் ஏராளமாக இருப்பதால், அவற்றைப் பார்க்க ரசிக்க சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மழை பொழியா விட்டாலும் கூட இந்தக் கிராமம் முற்றிலும் காய்ந்த பூமியாக இல்லாமல் கொஞ்சம் பசுமையாகவும் உள்ளது.