
பரபரப்பான இந்த அவசர உலகில் பயண நேரத்தை குறைப்பதில் ரயில்கள் மிகவும் முக்கிய பங்காற்றுகின்றன. பயண நேரத்தை குறைப்பதற்காக வந்தே பாரத் மற்றும் விமான பயணங்களை பொதுமக்கள் விரும்பி மேற்கொள்கின்றனர். ஆனால் 46 கிலோ மீட்டர் தூரத்தை 5 மணி நேரம் கடந்து செல்லும் ஊட்டி மலை ரயில் சேவை குறித்து இப்பதிவில் காண்போம்.
ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆயிரக் கணக்கான மக்களை கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொதுவாக 130 முதல் 150 km வேகம் வரை இயங்கக் கூடியதாக இருக்கின்றன போக்குவரத்தின் புரட்சியாக புல்லட் ரயில்கள் பார்க்கப்படுகின்றன. ஆனால் மிக மெதுவாக தமிழ்நாட்டில் இயங்கும் ஊட்டி மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகளும் அதீத ஆர்வம் காட்டுகின்றனர். யுனெஸ்கோவின் உலக அந்தஸ்து பெற்ற ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் ஊட்டி மலை ரயிலில் பயணிப்பது மிகவும் சுகமான அனுபவமாக இருக்கும்.
ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ஊட்டி மலை ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 9 கிலோமீட்டர் தூரம் மலைகளையும் இயற்கை வளங்களையும் ரசித்தபடி பயணம் செய்யலாம் அதனால் 46 கிலோமீட்டர் தூரத்தை இந்த ஊட்டி மலை ரயில் 5 மணி நேரம் செல்கிறது. இந்திய நாட்டில் இயக்கப்படும் அதிவேக ரயில்களை விட 16 மடங்கு குறைவான வேகத்தில் செல்லும் இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து முக்கிய ரயில் நிறுத்தங்களாக கெல்லர், குன்னூர், வெலிங்டன், லவ்டேல் ,ஃபெர்ன்ஹில் போன்ற அழகிய மலை வாசஸ்தலங்கள் வாயிலாக நின்று செல்கிறது.
1854 ஆம் ஆண்டு ஊட்டி மலை ரயிலுக்கான முதற் கட்ட பணி தொடங்கினாலும் மலை பாதையை உருவாக்குவதில் பல பிரச்னைகள் வந்ததால் 1891 ஆம் ஆண்டு இந்த பணி உருவாக்கப்பட்டு 1908 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1 மீட்டர் கேஜ் பாதையில், 16க்கும் மேற்பட்ட சுரங்கங்கள், 250 பாலங்கள், 200க்கும் மேற்பட்ட கூர்மையான வளைவுகளையும் கொண்டதால் இந்த யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற மலை ரயில் மெதுவாகவும், கவனமாகவும் இயக்கப்படுகிறது.
இயற்கை அழகை கண்டு ரசித்தபடியும் இறங்கி பார்க்கும் படியும் இந்த ரயில் பயணம் உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை இன்றளவும் பெற்றுள்ளது . மரத்தினால் ஆங்கிலேயர் காலத்தில் இந்த ரயில் பெட்டிகள் செய்யப்பட்டிருந்தது .முதல் வகுப்பில் 72 பயணிகளும் இரண்டாம் வகுப்பில் 100 பயணிகளும் இந்த ரயிலில் பயணிக்கமுடியும்.
4 கோச்சுகள் 2016 ஆம் ஆண்டு முதல் இந்த ரயிலில் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி தளத்தில் இந்த ரயிலுக்காக புக்கிங் செய்யலாம். சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை கண்டு ரசித்தாலும் இந்த மலை ரயிலில் பயணம் செய்யாமல் அவர்களது சுற்றுலா முடிவடைவதில்லை. இந்த ஊர்ந்து செல்லும் மலை ரயிலில் செல்லும் அனுபவத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது
சுரங்கம் போன்ற பகுதிகளில் இருட்டில் செல்லும் இந்த மலை ரயிலின் அனுபவத்தை கண்டுதான் ரசிக்க வேண்டும்.