
முதுமலை தெப்பக்காடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் மைசூர் செல்லும் சாலையில் இயற்கையான வனப்பகுதியில் அமைந்துள்ளது. முதுமலை தேசிய பூங்காவை ஒட்டி உள்ளது. யானைகள் வளர்ப்பு மற்றும் யானைகள் பராமரிப்பு இவை வனத்துறை மூலம் நடைபெறுகிறது. பார்வையாளர்கள் இந்த இடத்திற்கு சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் யானைகளுக்கு உணவு வழங்கலாம். யானைகள் பராமரிப்பு கண்காணிப்பு ஆரோக்கியம் இவை உறுதி செய்யப்படுகிறது. பார்வையாளர்கள் சில கட்டுப் பாடுகளுடன் உள்ளே செல்ல வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது.
1940 இல் இது தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் உள்ள முதல் யானை காப்பகம். இதன் பரப்பளவு சுமார் 321 கிலோமீட்டர். 800 முதல் 4100 அடி அடி உயரம் கொண்டதாகும். 1956 ஆம் ஆண்டு 295 கிலோமீட்டர் பரப்பிலிருந்து தற்போது 321 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டதாக இந்த வனப்பகுதிஅமைந்துள்ளது. யுனெஸ்கோ மூலம் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
யானை காட்டெருமை சிறுத்தை புலி கரடி மான்கள் காட்டுப்பன்றி நரி முதலை பாம்புகள் போன்றவைகள் உள்ளன. இந்த இடத்தை சபாரி மூலம் சுற்றி பார்க்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது. யானைகள் குளிப்பதை பார்க்கலாம். யானைகள் மீது சவாரி செய்யலாம்.
காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6:00 மணி வரை யானைகளுக்கு உணவு வழங்கும். நேரம். சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். இங்கு தினசரி 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நுழைவு கட்டணம் 30 ரூபாய் கேமரா கொண்டு செல்ல 50 ரூபாய். சபாரி செல்ல 340 ரூபாய் ஜீப் சவாரி மூலம் சுற்றி பார்க்க 4200 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. யானை மீது அமர்ந்து சுற்றி பார்க்க 1120 ரூபாய் வசூலிக்கப் படுகிறது. இங்கு பாமா காமாட்சி என்ற இரண்டு யானைகள் இணைபிரியாமல் சுமார் 55 ஆண்டுகள் இந்த வனத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வனப்பகுதியில் 55 வகையான பாலூட்டி இனங்கள் 227 பறவை இனங்கள் 50 வகையான மீன் இனங்கள் 34 வகையான ஊர்வனங்கள் இங்கு உள்ளன.
இந்தியாவில் எட்டு சதவிகித யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் முதல்வர் பார்வையிட்டு யானைகளுக்கு உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தேசிய பூங்காவையும் வனச் சரணாலயத்தையும் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்காக இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது.