கிரீன்லாந்தில் சாலைகள் தண்டவாளங்கள் இல்லாததன் காரணம் தெரியுமா?

greenland
greenland
Published on

ரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சாலை போக்குவரத்தும், ரயில் போக்குவரத்தும் நடுத்தர மக்களின் அன்றாட வாழ்வில் முக்கிய இடம் பிடித்துள்ளன.  ஆனால் பிரிட்டனை விட பத்து மடங்கு பரப்பளவில் பெரிய நாடாக, ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவான கிரீன்லாந்தில் சாலைகளும் இல்லை: தண்டவாளங்களும் இல்லை . இத்தீவு உலகின் ஒரு கண்டமாக கருதப்படாத மிகப்பெரிய தீவாகும். பொதுவாக 57 ஆயிரம் மக்கள் மட்டுமே இங்கு வசிக்கின்றனர். பகலிலும் சரி இரவிலும் சரி: சூரியன் தெரியும் நாடான கிரீன்லாந்தில் மக்கள் எந்த வகையான போக்குவரத்தை பின்பற்றுகிறார்கள் தெரியுமா?

சாலைகள், ரயில் பாதைகள் இல்லாத நாடுதான்  கிரீன்லாந்து. இந்த நாட்டின் பொதுவான போக்குவரத்தாக பார்க்கப்படுவது, ஹெலிகாப்டர் விமான போக்குவரத்து தான். இந்த நாட்டில் சிவப்பு விளக்குகள் உள்ள ஒரே நகரம் நுக்.

நுக் நகரம் நாட்டின் தலைநகரமாக உள்ளது. இங்கு மட்டுமே நமக்கு சாலைகள் தென்படுகின்றன. மீதமுள்ள பகுதியில் இல்லை.

greenland
greenland

பரப்பளவில் உலகின் 12வது பெரிய நாடாக இருந்த போதும் , ஏன் சாலைகள் அல்லது நெடுஞ்சாலைகள் கட்டப்படவில்லை என்ற கேள்விக்கு ஒரு காரணம் இருக்கிறது. உண்மையில், கிரீன்லாந்தின் காலநிலையே இங்கு போக்குவரத்து அமைப்பை இப்படி மாற்றியுள்ளது. இந்த நாட்டின் 80 சதவீத நிலப்பரப்பு பனியால் மூடப்பட்டுள்ளது. கிரீன்லாந்தில்  உள்ள ஐஸ்கட்டிகள் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லாந்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகினால் உலகின் கடல் மட்டம்23 அடிகள் உயரும் என்று அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

இங்குள்ள சவாலான வானிலை காரணமாக சாலைகள் அமைப்பது கடினம். தார் போட முடியாத அளவுக்கு இங்கு குளிர் அதிகமாக இருக்கும். எனவே, மக்கள் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருந்தால், அவர்கள் ஸ்னோமொபைல் அல்லது நாய் சறுக்கு போன்ற வழிகளைப் பயன் படுத்துகின்றனர். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக இங்கு விமானங்கள், ஹெலிகாப்டர்களும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடல் வழியாக பயணிக்கக்கூடியவர்களுக்கு கோடை காலத்தில் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
மனதைப் பற்றிய சில தகவல்களும் - பொன் மொழிகளும்!
greenland

சுற்றுலாப் பயணிகளுக்கு கிரீன்லாந்து மிகவும் பிரபலமானது. இங்குள்ள மக்களுக்கு புவியியல் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. உலக நாடுகளைச் சேர்ந்த பலர் இப்பகுதிக்கு வருகிறார்கள். இங்கு இரண்டு மாதங்கள் (மே 25 முதல் ஜூலை 25 வரை) சூரியன் மறையாது. பகலிலும் இரவிலும் சூரியன் வானில் தெரியும். இதுவே கிரீன்லாந்தின் மற்றொரு சிறப்பு.

ஆனால் புவி வெப்பமடைதல் காரணமாக, கிரீன்லாந்தின் காலநிலை வேகமாக மாறி வருகிறது. இங்கு பனி வேகமாக உருகுகிறது. பசுமை தெரிய ஆரம்பித்துவிட்டது. இதன் காரணமாக மக்கள் இந்த நாட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். சுற்றுலாவைப் பொறுத்தவரை, கிரீன்லாந்து மிகவும் விலை உயர்ந்தது. ஏனென்றால், இங்கு ரயில்வே, நெடுஞ்சாலைகள், சாலைகள் இல்லாததால், ஹெலிகாப்டர், விமானம் அல்லது படகு ஆகியவை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு ஹோட்டல் கட்டணங்களும் அதிகம். இதனால் இந்தப் பகுதி பணக்காரர்களுக்கு ஒரு சிறப்பு சுற்றுலாத் தலமாக உள்ளது.

பணத்தை கொஞ்சம் அதிகமாக சேர்த்து வைத்துக் கொண்டு இரவிலும் சூரியன் தெரியும் நாடான கிரீன்லாந்தை ஒருமுறை பார்த்து வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com