
குளிர்காலங்களில் சுற்றுலா செல்லும்போது நமக்கு வரும் சந்தேகங்களையும் குளிர்கால சுற்றுலாவில் வரும் சிக்கல்களை எளிதில் தீர்க்கும் ஐடியாக்களையும் இதில் பார்ப்போம்.
குளிர்காலம் வந்தாலே போர்வை இழுத்து மூடிட்டு காலையில 11:00 மணி வரைக்கும் நல்ல தூங்கி எழுந்திருக்கலாம் போல இருக்கும். ஆனால் அதுக்காக குளிர்காலத்தில் போகிற சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்க முடியுமா? குளிர்காலங்களில் இந்தியாவில எங்கெல்லாம் சுற்றமுடியுமோ அங்கெல்லாம் ஒரு ரவுண்டு போயிட்டு வருவோம் வாங்க.
உங்களுடைய சுற்றுலா பயணத்தின் போது செய்ய வேண்டிய பேக்கிங்கில் முதலில் இடம்பெற வேண்டியது நிச்சயம் காலணிகள்தான். குளிர்கால சுற்றுலாக்களின் போது கதகதப்பான காலணிகளை எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். அது உயர் ரக ஹீல்ஸ் அல்லது சமதளமாக இருக்கும் காலணி எதுவாக இருந்தாலும் கதகதப்பான காலணிகளின் இன்றி உங்க குளிர்கால சுற்றுலாவை தயார் பண்ணாதீர்கள்.
தெர்மல்ஸ் என்று அழைக்கப்படும் குளிர் கால உடைகளை உங்கள் சுற்றுலா பேக்கின் போது எடுத்துச் செல்லுங்கள். அது உடலை ஒட்டி உங்களை கதகதப்பாக வைத்திருக்கும்.
மிக அதிக குளிரான இடங்களுக்கு பயணிக்கும்போது உங்களுக்கு கையுறைகள் அவசியம் தேவைப் படுகின்றன. ஹாட் ஹேண்ட்ஸ் தெரியாமல் கூட இருந்திருக்கலாம் அல்லது புதிதாக தோன்றலாம். இவை காற்றினால் சூடாகி உங்கள் கைகளை கதகதப்பாக வைத்துக் கொள்ள உதவும் இவற்றை உங்கள் கையில் வைத்துக் கொள்ளலாம்.
அழகிய ஜெர்கின் குளிருக்காக மட்டுமில்லாமல் உங்களுடன் அழகிய ஆடையாகவே இதை பயன்படுத்தலாம். ஸ்டைலான ஒரு குளிர் தாங்கி கோட்டை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் இந்த குளிர்கால சுற்றுலாவை ஜமாய்க்கலாம்.
மெலிதான பல ஆடைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் உங்களின் சுற்றுலாவின் போது மிக பயனுள்ளதாக இருக்கும் ஒன்றின் மேல் ஒன்றாக போட்டுக் கொள்ளும் விதமாக அழகிய பல மெலிதான ஆடைகள் வாங்கி வைத்துக் கொள்வது சிறந்தது.
குட்டி குடை குளிர்கால பயணித்தின்போது உங்களுக்கு குடை நிச்சயமாக தேவைப்படும் குளிர் காலங்களில் சில சமயம் மழை கூட பெய்யலாமே அதனால் முன்னெச்சரிக்கையாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கதகதப்பான தொப்பி பல நிறங்களில் கிடைக்கும் தொப்பிகளை வாங்கி வைத்துக்கொண்டால் குளிர் அடிக்கும் நேரங்களில் போட்டுக்கலாம்.
கண்ணாடி பனிக்காலங்களில் பயணிக்கும் போது பனிபுகை போன்றவை இருக்கும். அதனால உங்களோட பார்வை தடைபடும். அதுக்கு ஏத்த போல கண்ணாடி வாங்கி அணிந்து கொண்டு சென்றால் சிறப்பாக இருக்கும்.
சிறப்பான சூட்கேஸ் கம்பர்ட்டாக ஒரு சூட்கேஸை தேர்ந்தெடுத்துக் கொள்வது உங்கள் பயணத்தின் போது தூக்கிக் கொண்டு செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.