E-69 நெடுஞ்சாலை - உலகின் கடைசி சாலை... தனியா மட்டும் போயிடாதீங்க!

E-69 Highway - Last road on Earth
E-69 Highway - Last road on Earth
Published on

நம்மில் பலருக்கும் பயணம் செய்வதென்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து பயணம் செய்வது என்பது யாருக்குத்தான் பிடிக்காது. சாதாரணமாக ஒரு வேலைக்குச் சென்றாலோ அல்லது வெளியில் எங்கு சென்றாலும் பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் அல்லது ரயிலின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்தவாறு ஏதோ ஒன்று நினைத்துக் கொண்டு நாம் பயணிப்போம். அப்பொழுது நம் கவலைகள் மறந்து இயற்கையை ரசித்தவாறு ஏதோ ஒன்றை நோக்கி போய்க் கொண்டே இருப்போம்.

ஆனால் ஒரு சிலர் பயணம் செய்வது மட்டுமே இலட்சியமாக வைத்துக்கொள்வார்கள். இந்த உலகம் முழுவதும் சுற்றி பார்க்க வேண்டும் அல்லது நம்மால் முடிந்த அளவிற்கு பல இடங்களை சுற்றிவர வேண்டும் என ஒரு பெரிய லட்சியத்தையே வைத்திருப்பார்கள். மேலும் மக்கள் தொகை பெருக்கம், வாகன பயன்பாட்டின் பெருக்கம், கூட்ட நெரிசல் காரணமாக 4 வழி சாலை, 6 வழி சாலை மற்றும் பசுமை வழி சாலை அமைப்பது போன்ற திட்டங்கள் எல்லாம் அவ்வப்போது நாம் கேள்விப்பட்டு வருவதும் உண்டு. அந்த வகையில் இதில் இடம்பெறும் முக்கிய விடயம் எது என்றால் சாலை.

நாம் சிறுவயதாக இருக்கும் பொழுது, 'இந்த சாலை எங்கு தான் செல்கிறது? இது எங்கு தான் முடியும்?' என நம் பெற்றோர்களிடமோ அல்லது வேறு யாரிடமோ கேட்டால், 'உனக்கு மட்டும் எப்படி இது போல தோன்றுகிறது' என கூறி, ஏதோ ஒரு பதிலை நமக்கு கூறியிருப்பார்கள். ஆனால் அதற்கான பதில் சரிதானா என நமக்கு அப்பொழுது தெரியாது. இந்த பதிவில் உலகின் கடைசி சாலையை எங்கு உள்ளது என்பதை பற்றி பார்க்கலாம் 

உலகின் கடைசி சாலை முடியும் இடம்:

உலகின் கடைசி சாலை முடியும் இடம் ஒர் அழகிய இடம் என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. உலகின் கடைசி சாலை முடியும் இடமாக ஐரோப்பாவில் உள்ள E-69 நெடுஞ்சாலை கூறப்படுகிறது. 

இது நார்வேயில் அமைந்துள்ளது. மிகவும் அழகிய சாலையாக இருக்கும் இந்த கடைசி சாலையை காண்பதற்காக உலகின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். 

இதையும் படியுங்கள்:
'கோல்டன் சிட்டி' ஜெய்சல்மருக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!
E-69 Highway - Last road on Earth

E-69 நெடுஞ்சாலை வடக்கு ஐரோப்பாவில் Nordkapp என்ற இடத்திலிருந்து நார்வேயில் Oldafevoord என்ற கிராமம் வரை செல்கிறது. மேலும் இந்த இரு இடங்களை இணைக்கும் இந்தச் சாலை சுமார் 129 கிலோமீட்டர் தூரத்தை கொண்டு இருக்கிறது. 

பூமத்திய ரேகைக்கு மேலே இந்த சாலை அமைந்துள்ளதால், வானிலையை இங்கு சரியாக கணிக்க இயலாது. அதனால் இங்கு சுற்றுலா செல்பவர்கள் வானிலை நிலவரங்களை பார்த்து செல்வது மிகவும் அவசியமாகும். 

கோடை காலங்களில் கூட இங்கு பனிப்பொழியும், புயல் காற்று அதிகம் வீசும். மேலும் இந்த இடங்களில் தங்குவதற்கு அல்லது எரிபொருள் போன்றவற்றை காரில்  நிரப்புவதற்கு சிரமங்கள் ஏற்படலாம். எனவே இந்த சாலையில் தனியாக பயணிக்க அனுமதி வழங்கப்படமாட்டாது.

மேலும் இந்த சாலையில் பயணிப்பதற்கு கோடைகாலத்தில் மட்டும் சாலையின் பகுதி திறக்கப்படும். குளிர்காலத்தில் இந்த சாலையில் பயணிக்க முடியாது. ஆனால் குளிர்காலத்தில் ஒரு கான்வாய் வழியாக பயணிக்கலாம். மேலும் கான்வாய் மூலம் பயணிப்பதற்கும் வானிலை சரியாக இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com