'கோல்டன் சிட்டி' ஜெய்சல்மருக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க!

Golden city Jaisalmer
Golden city JaisalmerImage Credits: South China Morning Post
Published on

பாலைவனத்தில் சஃபாரி போக வேண்டும் என்றால் துபாய்க்கு போக வேண்டிய அவசியமில்லை. இந்தியாவிலேயே பாலைவன சஃபாரி செல்வதற்கு இடம் இருக்கிறது. அதை பற்றித்தான் விரிவாக இந்த பதிவில் காண உள்ளோம்.

‘தங்க நகரம்’ என்று அழைக்கப்படும் ஜெய்சல்மர் பாகிஸ்தான் பார்டருக்கு அருகிலே அமைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தார் பாலைவனத்தின் அருகிலே இருக்கிறது. இங்குள்ள ஜெய்சல்மர் கோட்டையை ‘தங்க கோட்டை’ என்றும் அழைப்பார்கள்.

இங்கே பாலைவன சஃபாரி, பாராகிளைடிங் போன்ற சாகசங்களை செய்யலாம். இங்கே நடக்கும் Desert festival சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒட்டகத்திற்கு நடுவே நடத்தப்படும் ரேஸ், ராஜஸ்தானி உணவுகள், ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் என அசத்தலாக இருக்கும்.

ஜெய்சல்மரில் இருக்கும் கோட்டை இன்னமும் Living fort ஆகவேயிருக்கிறது. இரவில் இந்த கோட்டை தகதகவென்று மின்னும். இதனாலேயே இந்த இடத்தை ‘தங்கநகரம்’ என்று அழைக்கிறார்கள்.

தீரன் படத்தில் வந்த குல்தாரா கிராமம் இங்கிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலே அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் இநேத கிராமத்தில் இருந்த மக்கள் அனைவரும் இரவோடு இரவாக இந்த கிராமத்தை காலி செய்துவிட்டு சென்றுவிட்டார். அதற்கான காரணம் இன்றுவரை சரியாக தெரியவில்லை. இந்த இடத்தை ‘கோஸ்ட் டவுன்’ என்றும் கூறுவார்கள்.

இந்த இடம் இந்தியா-பாகிஸ்தான் பார்டர் அருகில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்சல்மரை பார்வையிடுவதற்கு சிறந்த மாதம் அக்டோபர் முதல் மார்ச் வரையாகும். இது ஒரு பாலைவன நகரம்  என்பதால், 10°C முதல் 27°C வரை வெப்பம் இருக்கும். அதனால் குளிர்க் காலங்களில் இந்த இடத்திற்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும். இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் நல்ல காற்றோட்டம் தரக்கூடிய காட்டன் உடையை அணிந்து வருவது சிறந்ததாக இருக்கும். ஜெய்சல்மரில் Star gazing செய்யலாம். அருகிலேயே தார் பாலைவனம் இருப்பதால், இங்கிருந்து வானத்தில் உள்ள Milky way வை நன்றாக காணமுடியும்.

இதையும் படியுங்கள்:
அசாமின் நதி தீவு, மஜூலிக்கு ஒரு பயணம் போகலாம் வாங்க!
Golden city Jaisalmer

இங்கே Ghotua Ladoo என்னும் இனிப்பு மிகவும் பிரபலமாகும். இவ்விடம் இங்குள்ள மார்க்கெட் மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் போனதாகும். இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தையும் Yellow stone பயன்படுத்திக் கட்டப் பட்டிருப்பதால், பார்ப்பதற்கு தங்கம் போலவே இருக்கும். அதனால், இவ்விடத்தை தங்கநகரம் என்று அழைக்கிறார்கள். ராஜஸ்தானில் உள்ள பாதுகாக்கப்பட்ட பழைமையான நகரத்தில் ஜெய்சல்மரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com