
ஐரோப்பாவில் கப்பல் பயணம் (River Cruise) மேற்கொள்வது ஐரோப்பிய கண்டத்தின் கலாச்சாரம், வரலாறு மற்றும் இயற்கை அழகை ரசிப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். ஐரோப்பாவில் கப்பல் பயணங்களுக்கு ஏற்ற சிறந்த ஆறுகள் சிலவற்றை பார்க்கலாமா?
இங்கிலாந்தின் லண்டன் வழியாகப் பாயும் தேம்ஸ் நதி ஐரோப்பாவில் கப்பல் பயணங்களுக்கு மிகவும் பிரபலமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நதியாகும். இது லண்டன் கண்(London Eye), பிக் பென் (Big Ben), டவர் பாலம் போன்ற சின்னங்களை சுற்றிப் பார்க்க, இரவு உணவுப் பயணம் மற்றும் பகல் நேர சுற்றுலா பயணங்களுக்கு ஏற்றது.
சுவிட்சர்லாந்திலிருந்து தொடங்கி ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வழியாகச் செல்கிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள், திராட்சை தோட்டங்கள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் நிறைந்த இந்த நதி ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான பயணப் பாதையாகும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான 'மேல் மத்திய ரைன் பள்ளத்தாக்கு'(Upper Middle Rhine Valley) மற்றும் இடைக்கால கோட்டைகள் முக்கிய ஈர்ப்பாகும்.
எல்பே நதியின் ஆழம் குறைவாக இருப்பதால் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சிறிய வகை கப்பல்கள் இங்கு பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. "தங்க நகரம்" என்றழைக்கப்படும் செக் தலைநகரமான பிராக் (Prague), "எல்பேயின் புளோரன்ஸ்" என்று புகழப்படும் கலாச்சார நகரமான டெரெஸ்டன்(Dresden), உலகப் புகழ் பெற்ற பீங்கான் பாத்திரங்களுக்கு பெயர் பெற்ற மைசென்(Meissen), மார்ட்டின் லூதர் கற்பித்த வரலாற்று இடமான விட்டன்பெர்க் (Wittenberg) ஆகிய அழகான இடங்களைக்காணலாம்.
பிரான்சின் தெற்கே பாய்ந்து ஆலிவ் மரங்கள், லாவெண்டர் வயல்கள் மற்றும் இயற்கை அழகுகளை கண் குளிர காண முடிகிறது. பிரான்சின் பர்கண்டி மற்றும் புரோவென்ஸ்(Provence) பகுதிகள் வழியாகச் செல்கிறது. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற லியோன், அவிஞான் (Avignon) மற்றும் ஆர்லெஸ் (Arles) போன்ற இடைக்கால நகரங்கள் மற்றும் ரோமானிய காலத்து நினைவுச் சின்னங்களைக் காணலாம். திராட்சை மது (wine) சுவைத்தல் மற்றும் கலாச்சாரப் பயணங்களுக்கு மிகவும் சிறந்தது.
ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் வழியாக பாய்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட டூரோ பள்ளத்தாக்கின் வழியே வளைந்து நெளிந்து செல்லும் இந்த நதி, மலைகளில் செதுக்கப்பட்ட செங்குத்தான படிக்கட்டு வடிவ திராட்சை தோட்டங்கள், கிரானைட் பாறை முகடுகள், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற டூரோ பள்ளத்தாக்கு மற்றும் நிதானமான வாழ்க்கை முறை ஆகியவற்றால் அதிகம் கவரப்படுகிறது
ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் வழியே பாய்ந்து, கோப்லென்ஸ் நகரில் ரைன் நதியுடன் இணைகிறது. இங்கு செங்குத்தான சரிவுகளில் உள்ள திராட்சைத் தோட்டங்கள், நதிக்கரையோரம் உள்ள திராட்சை மது உற்பத்தி கிராமங்கள் மற்றும் 700 முதல் 1,000 ஆண்டுகள் பழமையான கோட்டைகள் மற்றும் பழங்கால கட்டிடங்கள் மற்றும் ரம்யமான இயற்கை காட்சிகளைக் காணலாம்.
இத்தாலியின் வடக்கு பகுதியின் வழியாகச் செல்லும் இத்தாலியின் மிக நீளமான நதியான இந்த நதி வெனிஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள கலாச்சார பகுதிகளைப் பற்றி தெரிந்துகொள்ள தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. கிரெமோனா(வயலின் நகரம்) மற்றும் யுனெஸ்கோ தளமான ஃபெர்ராரா போன்ற இடைக்கால நகரங்களை கண்டு ரசிக்கலாம்.
செல்ல சிறந்த நேரம்:
பொதுவாக வசந்த காலம் (ஏப்ரல்-ஜுன்) மற்றும் இலையுதிர் காலம் (செப்டம்பர்- அக்டோபர்) பயணத்துக்கு ஏற்ற காலமாகும். இந்த நதிகளில் சிறிய சொகுசு கப்பல்கள் 100-200 பயணிகளுடன் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here