
'நிகழ்வு பயணம்' என்பது ஒரு குறிப்பிட்ட நிகழ்வில் (திருவிழா, மாநாடு, விளையாட்டு நிகழ்வு போன்றவை) பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்படும் பயணத்தை குறிக்கும். மேலும் இது நிகழ்வு சுற்றுலாவின் ஒரு பகுதியாக பொருளாதாரம் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பூமியில் உள்ள இயற்கையான மற்றும் செயற்கையான நிகழ்வுகளை பார்ப்பதற்கும், அவற்றின் கலாச்சாரம் மற்றும் சூழலைப் புரிந்து கொள்வதற்கும் பலவிதமான பயண வாய்ப்புகளை வழங்குகிறது.
ஒரு நிகழ்வில் பங்கேற்பதற்காக மட்டுமே பயணம் செய்வது நிகழ்வு ஆர்வலர்களின் பாரம்பரியமாக நீண்ட காலமாக இங்கு வருகிறது. தமிழ்நாட்டில் நடைபெறும் பொங்கல் திருவிழா, மாமல்லபுரம் சிற்ப விழா போன்ற நிகழ்வுகளைக்காண செல்வது நிகழ்வு பயணமாகும். அதேபோல் தொழில்நுட்ப மாநாடுகளில் பங்கேற்பதற்காகச் செல்வது மற்றொரு நிகழ்வு பயணத்தில் உதாரணங்களாகும்.
நிகழ்வு பயணத்தின் வகைகள்:
a) இயற்கை நிகழ்வுகள்:
சூரிய கிரகணம், எரிமலை வெடிப்பு அல்லது வனவிலங்குகளின் இடம்பெயர்வுகள் போன்ற பிரமிக்க வைக்கும் இயற்கை நிகழ்வுகளைக்காண மேற்கொள்ளும் பயணம் இது.
கலாச்சார நிகழ்வுகள்:
இசை நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், கலை கண்காட்சிகள் மற்றும் சிறப்பு சடங்குகள் போன்ற கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக மேற்கொள்ளப்படும் சுவாரஸ்யம் நிரம்பிய பயணம் இது.
வர்த்தகம் மற்றும் கல்வி நிகழ்வுகள்:
மாநாடுகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் போன்ற தொழில்முறை மற்றும் கல்வி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் பயணம் இது.
விளையாட்டு நிகழ்வுகள்:
உலகக்கோப்பை, ஒலிம்பிக்ஸ் போன்ற பெரிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை காண்பதற்காக செல்லும் பயணம் இது.
நிகழ்வு பயணம் மற்றும் பொருளாதார மேம்பாடு:
பொருளாதாரத் துறையில் ஏற்படும் மாற்றங்கள்:
நிகழ்வு பயணங்கள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்து கின்றது. நிகழ்வுகளைச் சுற்றி ஹோட்டல்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்வு சுற்றுலாக்களை ஊக்குவிப்பதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன. நாட்டின் பொருளாதாரமும் மேம்படுகின்றது.
விருந்தோம்பல் துறையின் பல்வேறு துறைகளில் தற்காலிக வேலைகள் உருவாக்கப்படுகின்றன. இதில் நிகழ்வு ஊழியர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்றவை அடங்கும்.
இந்த வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதுடன், சமூகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது. நிகழ்வில் பங்கேற்பாளர்கள் பெரும்பாலும் உள்ளூர் இடங்கள், உணவு மற்றும் ஷாப்பிங் ஆகியவற்றில் பணத்தை செலவிடுவது உள்ளூர் பொருளாதரத்தை மேம்படுத்துகிறது.