அனுபவச் சுற்றுலா: உள்ளூர் கலாச்சாரத்தை உள்வாங்கும் புதிய கலை!

Experiential Tourism
Experiential Tourism
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

னுபவச் சுற்றுலா (Experiential Tourism) என்பது ஒரு இடத்தை பார்ப்பதை விட அந்த இடத்தின் ஒரு பகுதியாக மாறி அந்த கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதாகும். ஒரு இடத்தின் கலாச்சாரம், வரலாறு, உணவு மற்றும் மக்களுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அந்த இடத்தை ஆழமாக உணர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஒரு சிறந்த பயணம் முறையாகும். இது வெறும் இடங்களைப் பார்ப்பது (sightseeing) மட்டுமல்ல, உள்ளூர் வாழ்க்கையில் பங்கேற்று மறக்க முடியாத இனிமையான அனுபவங்களைப் பெறுவதாகும்.

அதிகம் பிரபலம் அடையாத இடங்களுக்குச் சென்று அமைதியான, அதே சமயம் அந்த இடத்தின் உண்மையான அனுபவத்தைப் பெறுவது ஒரு சிறந்த தனித்துவமான அனுபவமாக இருக்கும்.

அந்த இடத்திலுள்ள உள்ளூர் மக்களின்  அன்றாட வாழ்க்கை முறையையும், அவர்கள் பின்பற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை பற்றியும் அறிந்து கொள்வது மிகவும் ரசிக்க கூடிய விஷயமாக இருக்கும். அப்படி உள்ளூர் கலாச்சாரத்துடன் இணைவது நமக்கு ஒரு சிறந்த அனுபவத்தைத் தரும்.

அவ்வூர் மக்களின் திருவிழாக்களில் பங்கேற்பதும், உள்ளூர் உணவுகளை ருசிப்பதும், அவற்றை கற்றுக் கொள்வதும் என உள்ளூர் மக்களின் செயல்களில் பங்கேற்பது நமக்கு  மறக்க முடியாத அனுபவத்தைத் தரும். உள்ளூர் மக்களுடன் தங்குவது, அவர்களின் பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்வது, அவர்களுடன் இணைந்து சமைப்பது அல்லது பாரம்பரியக் கலைகளை கற்றுக் கொள்வது போன்றவை அனுபவ சுற்றுலாவாக கருதப்படும். இம்மாதிரியான பயணம் வாழ்வில் நமக்கு ஒரு புதிய பாடத்தை கற்றுத் தரும் அனுபவமாக அமையும்.

உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவர்களின் கைவினைப் பொருட்களை வாங்குவதும், அவ்வூரில் வரலாற்று சிறப்பு பெற்ற இடங்களை பார்வையிடுவதும் என அந்த இடத்தின் ஒரு பகுதியாக மாறி அந்த கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதுடன், உள்ளூர் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது சிறந்ததாகும். இந்த வகையைச் சுற்றுலா பயணிகளின் மனதிற்கு திருப்தியைத் தருவதுடன் உள்ளூர் பொருளாதரத்திற்கும், கலாச்சார பாதுகாப்பிற்கும் கூட பெரிதும் உதவும்.

இதையும் படியுங்கள்:
பத்திரமணல்: இயற்கை ஆர்வலர்களுக்கான ஒரு பசுமை விருந்து!
Experiential Tourism

அனுபவச் சுற்றுலா என்பது ஒரு இடத்திற்குச் சென்று முக்கியமான இடங்களை மட்டும் பார்த்துவிட்டு வராமல் அந்த இடத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் நேரடியாக ஈடுபட்டு, உணர்வுபூர்வமாக அனுபவிக்கும் ஒரு சிறந்த பயண முறையான இதில் உள்ளூர் வாழ்க்கையை நேரடியாக அனுபவிப்பதால் அவை நமக்கு நீண்ட கால நினைவுகளை உருவாக்குகின்றன.

இது பாரம்பரிய சுற்றுலாப்போல இடங்களை புகைப்படம் எடுப்பது மட்டுமல்லாமல் அந்த இடத்தை உணர்ந்து புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதிலும் கவனம் செலுத்துகிறது. வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாமல், பயணிகளின் மனதிற்கும் உணர்விற்கும் ஒரு புதிய மாற்றத்தைத்தரும் அனுபவமாக இந்த சுற்றுலா அமைகிறது.

logo
Kalki Online
kalkionline.com