

இந்த கட்டுரை இந்தியாவின் முக்கிய வரலாற்றுச் சின்னங்கள், மத, கல்வி மற்றும் கட்டிடக்கலைச் சின்னங்களை ஒருங்கே அறிமுகப்படுத்துகிறது. தாஜ்மஹாலின் பளிங்கு அழகு, ஹம்பியின் விஜயநகரச் சாம்ராஜ்யச் சுவடுகள், கஜுராஹோ சிற்பங்கள், கோனார்க் சூரிய கோவில், பொற்கோவில், சரவணபெலகுலா, நாளந்தா பல்கலைக்கழகம், அஜந்தா–எல்லோரா குகைகள் ஆகியவை சுற்றுலா மற்றும் ஆய்வுக்குப் பொருத்தமான இடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
கொணராக்கோவில், கஜுராஹோ கோவில், நாளந்தா பல்கலைக்கழகம், அமிர்தசரஸ் பொற்கோவில் போன்றவை முக்கியமாக கருதப்படுகிறது. அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
1. கஜுராஹோ
இன்பத்தின் கோவில் என அழைக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் சத்தப்பூர் மாவட்டத்தில் உள்ளது 950 இல் இருந்து ஆயிரத்தி ஐம்பது ஆண்டுக்குள் வாழ்ந்து வந்த சந்திலே அரசர்களால் கட்டப்பட்டது.
இது 20 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. ஆரம்பத்தில் 85 கோவில்கள் இருந்தது. படையெடுப்பின் காரணமாக பல கோவில்கள் அழிக்கப்பட்டு தற்போது 20 கோவில்களே உள்ளன. இங்கு உள்ள சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.
2. ஹம்பி
உலகப் புகழ்பெற்ற வரலாற்று தொன்மையான இடம். கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது இந்த இடம். விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கி வந்தது. எங்கு பார்த்தாலும் பறந்து விரிந்து கிடக்கும் சிற்பங்களைக் காணலாம். கட்டட கலைக்கு பெயர் பெற்ற இடமாகும்.
3. தாஜ்மஹால்
உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஷாஜகான் தன் மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட பளிங்கு கல்லறை மாளிகை ஆகும். இது பாேர்சியா மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான பளிங்கு கல் மாளிகையாகும். இதன் அழகும் சிறப்பும் இந்திய நாட்டவரையும் வெளிநாட்டவரையும் ஈர்த்து வருகிறது.
4. கோனாருக்சூரிய கோவில்
இந்தியாவில் சூரியனுக்காக அமைக்கப்பட்ட கோவில். இவற்றில் எஞ்சி இருப்பது சூரிய கோவில் மட்டும்தான். 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிவப்பு மணல் பாறைகளாலும் கருப்பு கிரானைட் கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்டமான தேர் வடிவம் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இதனை 1984 ஆம் ஆண்டு யுனெஸகோ பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
5. ஹர் மந்திர் சாஹிப்
சீக்கியர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இது பொற்கோவில் எனவும் அழைக்கப்படுகிறது. கோவில் முழுவதும் தங்கத்தால் ஆனது.இந்த கோவில் நான்கு வாயிலை கொண்டுள்ளது. இந்த கோவிலுக்கு சர்வ மதத்தினரும் தடையின்றி வரலாம் என்பது கூடுதல் சிறப்பு. சார் மந்திர் சாகிப் என்பது தற்போது பொற்கோவில் என அழைக்கப்பட்டு வருகிறது. நான் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள்.
6. சரவணபெலகுலா
கோமதீஸ்வரர் என்னும் பாகுபலி சிலை இந்த பிரிவில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. சமணர்களின் நினைவுச் சின்னங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சரவணபெலகுலா தென்னிந்தியாவின் உள்ள புகழ் பெற்ற புனித யாத்திரை ஸ்தலமாகும்.
7. நாளந்தா பல்கலைக்கழகம்
இந்த பல்கலைக்கழகம் 800 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த நாளந்தா பல்கலைக்கழகம். இங்கு சீனர்கள், கிரேக்கர்கள், பெர்சியர், திபெத்தியர்கள் என பல நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் பயின்ற இடமாகும். உலக அளவில் பல அறிஞர்களை உருவாக்கியுள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் உலக அளவில் உயர் பதவியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. அஜந்தா எல்லோரா குகைகள்
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி நகரில் உள்ளது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சார்ந்த குகைகள். இரண்டும் ஒன்றுக்கொன்று 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இரண்டும் புகழ்பெற்ற குகை கோவில் ஆகும்.
அழகிய ஓவியங்கள் பாறை கற்களில் செதுக்கப் பட்டுள்ளன. கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அஜந்தாவில் 30 குகைகள்உள்ளன. அனைத்தும் புத்த மதத்தைச் சார்ந்தது. எல்லோராவில் 34 குகைகள் உள்ளன. இது இந்து பௌத்தம் சமணம் ஆகிய மூன்று மதங்களின் கலவையாக உள்ளது.
மேற்கண்ட இடங்கள் அனைத்தும் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக உள்ளது மேலும் அனைத்து இடங்களும் அறிவியல் பூர்வமாகவும் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், இந்தியாவின் பழமையான கட்டிடக்கலை, மதக் கலாச்சாரம் மற்றும் கல்வி மையங்களின் வரலாற்றுத் தரவுகளைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு, உங்கள் அடுத்த வரலாற்றுப் பயணத்தை மிகச் சிறப்பாகத் திட்டமிட முடியும்.