குளிர்காலத்தில் இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள்!

இந்திய சுற்றுப்பயணம் என்றால் நமது மனதில் முதலில் தோன்றும் ஒரு விஷயம் பணம் அதிகமாகுமே என்றுதான். அந்த பிரச்சனைக்கு சுலபமான பதில்தான் இது. மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதுவும் குளிர்காலத்தில் எந்தெந்த இடங்களுக்குச் செல்லலாம் என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்...
Five places to visit in India in winter
Five places to visit in India in winter

1. ’தங்க நகரம்’ ஜெய்சால்மர்:

ராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் ‘தங்க நகரம்’ என அழைக்கப்படுகிறது. இது மணல் சார்ந்த இடம் என்பதால் வெப்பம் சற்று கூடுதலாக இருக்கும். அதனால் குளிர்காலத்தில் ஜெய்சால்மர் செல்வது மிக அற்புதமான அனுபவமாக இருக்கும். இந்த நகரத்தின் கட்டட அமைப்பு மற்றும் வடிவமைப்பு மிகவும் பாரம்பரியமானதாக இருக்கும். இரவு நேரங்களில் ‘தங்க நகரம்’ என்பதற்கேற்ப அந்நகரமே தங்கம் போல் ஜொலிக்கும்.

2. கர்நாடகாவின் கலைநயம் ஹம்பி:

யற்கை மற்றும் கலை மேல் ஆர்வம் உள்ளவர்கள் நிச்சயம் கர்நாடகாவில் உள்ள ஹம்பி கோவிலுக்கு அக்டோபர் முதல் ஜனவரி மாதத்திற்குள் செல்ல வேண்டிய இடமாகும். இந்த கோவில் விஜயநகர காலத்தில் கட்டிய மிகப் பழமையான கலைநயமிக்க கோவிலாகும். ஹம்பி கோவிலைச் சுற்றி மலைகளும் காடுகளும் நிறைந்தவை. ஆகையால் குளிர்காலத்தில் அந்த இடங்களின் காட்சிகள் அழகுமிக்கவையாக இருக்கும். அதுமட்டுமின்றி ஹம்பி கோவிலே பாறைகள் மற்றும் கற்கள் பயன்படுத்திக் கட்டியது. ஆகையால் பசுமை,மலை மற்றும் அந்த பிரம்மாண்டமான கற்கோவிலைக் குளிர்காலத்தில் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
குளிர் காலத்தில் சுற்றுலா போக ஆசையா? தமிழ்நாட்டில் பார்க்கவேண்டிய ஐந்து சுற்றுலாத்தளங்கள்!
Five places to visit in India in winter

3. கனவு தேசம் கோவா:

கோவா என்றால் இப்போது அனைத்து இளைஞர்களுக்குமே தனது வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாகும். அந்த கனவைக் குளிர்காலத்தில் நிறைவேற்றினால் நீங்கள் எதிர்ப்பார்த்தைவிட அதிக அளவிற்கு வித்தியாசமான மற்றும் அழகான அனுபவமாக இருக்கும். கோவா என்றாலே அழகுதான் அதிலும் வட கோவா மிகவும் அழகு வாய்ந்தது. குறிப்பாக கலங்குட் கடற்கரை, கண்டோலிம் கடற்கரை, பாகா கடற்கரை, பணாஜி கடற்கரை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள்.

4. கோவில்களும் இயற்கையும் ஒன்றிணைந்த மணாலி:

மாச்சல் பிரதேசத்தில் உள்ள வெள்ளை பனிகளால் சூழப்பட்ட மணாலி இந்தியாவில் அதிகம் பேர் செல்ல ஆசைப்படும் ஒரு இடமாகும். முக்கியமாக மணாலியில் மலை சிகரங்களில் இருந்து பார்க்கப்படும் அந்த சீனரியை பார்க்க பல பேர் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஹடிம்பா கோயில், அடல் சுரங்கப்பாதை, இமயமலை நிங் மாபா ஆகியவை மணாலி செல்ல விருப்பம் உள்ளவர்கள் கண்டிப்பாகக் குளிர்காலத்தில் சென்றால் இன்னும் அழகான அனுபவமாக இருக்கும்.

5. இயற்கையின் இருப்பிடம் கூர்க்:

ர்நாடகா மாவட்டத்தில் உள்ள கூர்க் தென்னிந்தியாவில் அதிகம் பிரசித்துப்பெற்ற இடமாகும். இந்த இடத்தில் எப்பி நீர்வீழ்ச்சி இயற்கையின் முழு அழகையும் அடங்கியதாக இருக்கும். குளிர்காலத்தில் தலகாவேரி, Raja’s seat என்ற இடத்தில் சூரியஸ்தமனம் போன்றவற்றை கட்டாயம் பார்க்க வேண்டும்.இந்த இடங்கள் குறைந்த பட்ஜெட்டில் குளிர்காலங்களில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய இடமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com