ஆரோவில்.../
ஆரோவில்.../

ஆரோவில் நகரத்தில் கட்டாயம் சுற்றிப்பார்க்க வேண்டிய ஐந்து இடங்கள்!

‘விடியல் நகரம்’ என்றழைக்கப்படும் இந்த ஆரோவில் பாண்டிச்சேரிக்கு வடக்கே 10 கிமீ தொலைவில் உள்ளது. இந்த நகரத்தில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாட்டவர் கள்தான் வாழ்ந்து வருகிறார்கள். மேலும் இந்த நகரம் கட்டட கலை, விவசாயம், கைவினைப் பொருட்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. அதேபோல் ஆரோவில் நகரம் தெய்வீகமும் அமைதியும் நிறைந்த நகரம் என்பதால் பல நாடுகளிலிருந்து மக்கள் இங்கு வந்து சில நாட்கள் தங்கிவிடுவார்கள். அந்த வகையில் ஆரோவில்லில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய ஐந்து இடங்களைப் பற்றிப் பார்ப்போம்.

1. மாத்ரி மந்திர்:

மாத்ரி மந்திர்
மாத்ரி மந்திர்

துதான் ஆரோவில் நகரத்தின் ‘ஆத்மா’ என்று கூறப்படுகிறது. இது 124 நாடுகளைச் சேர்ந்த பிரதிநதிகளுடன் 1968ம் ஆண்டு திறக்கப்பட்டது. அமைதிக்கு பெயர் போன இந்த இடத்தில் பல நாடுகளிலிருந்து வந்து தியானம் செய்வார்கள். இந்த இடத்தின் மையத்தில் பக்தியின் சின்னமாக ஒரு படிக பந்து அமைக்கப்பட்டது. அமைதியை விரும்புபவர்கள் கட்டாயம் இந்த இடத்திற்கு சென்று வரலாம்.

2. ஆரோவில் பீச்:

ஆரோவில் பீச்
ஆரோவில் பீச்

கர வாழ்க்கையின் பந்தய ஓட்டத்தில் இருந்து ஒருநாள் விடுபட நினைப்பவர்கள் இந்த கடற்கரைக்கு செல்வது அவசியம். இந்த கடற்கரையை ‘ஆரோ’ என்றும் அழைப்பார்கள். மேலும் இது கிழக்கு கடற்கரை சாலையின் வலதுபுறத்தில் உள்ளது. இந்த கடற்கரையில்  நின்று கடலை ரசிப்பதற்கு என தனி இடம் அமைக்கப்பட்டுள்ளது.

3. சாவித்ரி பவன்:

சாவித்ரி பவன்
சாவித்ரி பவன்

ஸ்ரீ அரபிந்தோ மற்றும் அவரது தாய் இணைந்து உருவாக்கிய ஒரு இடம் சாவித்ரி பவன். இங்கு புகைப்படங்கள் இருக்கும் அறை, நூலகம், வாசிப்பதற்கென தனி அறை, மந்திரங்கள் ஜபிப்பதற்கான அறை என அனைத்திற்கு தனித் தனியாக அறை இருக்கிறது. மேலும் ஆண்டு முழுவதும் எண்ணற்ற தொழிற்கூடங்கள் நடத்தப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
உற்சாக ஹார்மோன்கள் ஊற்றெடுக்க உண்ண வேண்டிய உணவுகள்!
ஆரோவில்.../

4. பொட்டானிக்கல் பூங்கா:

பொட்டானிக்கல் பூங்கா
பொட்டானிக்கல் பூங்கா

ரோவில்லில் இருக்கும் இந்த பூங்கா சுமார் 44 ஏக்கர்களைக் கொண்டுள்ளது. அதேபோல் இங்கு 250 வகையான மரங்கள் இருக்கின்றன. இயற்கையையும் மனித நேயத்தையும் இணைப்பதே இந்த பூங்காவின் நோக்கமாக இருக்கிறது. அதேபோல் இங்கும் தியானம் செய்வதற்கென தனி அறையும் கல்விக்கூடமும் உள்ளன.

5. சாதனா காடு:

சாதனா காடு
சாதனா காடு

ரோவில் என்பது ஒரு காடுகள் நிறைந்த இடம். அந்த காடுகளில் மிகவும் புகழ்பெற்றது சாதனா காடு. இந்த காடுகளை மக்களே தான் பராமரித்து வருகின்றனர். அதேபோல் இந்த காட்டின் வளங்களை எந்தவித வருமானத்திற்கும் பயன்படுத்துவது கிடையாது. முழுக்க முழுக்க இயற்கையை பாதுகாப்பதற்காகவே பராமரிக்கப்படும். இந்த காட்டின் அழகை ரசிக்க கட்டாயம் செல்ல வேண்டும்.

இந்த ஐந்து இடங்கள் மட்டும் அல்லாது கலாகேந்திரா, வெரிடே கற்றல் மையம் ஆகிவையும் ஆரோவில்லில்  சுற்றிப்பார்க்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com