
பயணம் என்பது நம் வாழ்வின் ஒர் அங்கமாகும். வீட்டில் இருந்து கடைகளுக்கு செல்வது கூட ஒரு பயணம் தான். அது நடை பயணம். இது மாதிரி பயணம் எவ்வளவு தூரம் செல்கிறோமோ அதை பொறுத்தே அளவிடப்படுகிறது. சிலருக்கு பயணம் செய்வது ரொம்ப பிடித்தமான ஒன்றாகும். அதனால் அவர்கள் அடிக்கடி பயணம் மேற்கொள்வார்கள். சிலர் வேண்டா வெறுப்பாக வீட்டில் யாருக்கோ விஷேசம், துக்க நிகழ்வு, சுற்றுலா என கட்டாயத்தின் பேரில் செல்வார்கள். எப்படியோ நம் வாழ்வில் பயணம் செய்தால் மட்டுமே ஒர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியும்.
பயணத்தின்போது, ஒவ்வொரு வாகனத்தை பொறுத்து வயிற்று பிரச்சனை ஏற்படும். சிலருக்கு பேருந்தில் சென்றால் வாந்தி வரும், சிலருக்கு விமானம் குமட்டலை உண்டாக்கும்... இது போன்று பலருக்கும் பயணத்தால் பல பிரச்சனைகள் ஏற்படும். ஆனால் நம்மால் பயணத்தை தவிர்க்க முடியாது.
பயணத்தில் ஏற்படும் உடல் பிரச்சனைகளை தீர்க்க உங்கள் உணவில் அக்கறை செலுத்து வேண்டும். அப்படி எந்த உணவு எடுத்து கொள்ளலாம், எடுக்க கூடாது என்பது குறித்து பார்க்கலாம்.
காய்கறி சாலட்:
காய்கறி சால்ட் ஒரு நல்ல உணவாகும். அதில் உள்ள நீர் சத்துக்கள் நம்மை கிரங்கடிக்காமல் இருக்கும். குறிப்பாக கேரட், பிரக்கோலியை வேகவைத்து எண்ணெய்யில் மிக்ஸ் செய்து பயணத்தின் போது எடுத்து சென்றால் அது நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
முட்டை:
நீங்கள் வெளியே கிளம்ப தயாராகும்போதே முட்டையை வேகவைத்து விட்டால் போதும். அது ஒரு 10 நிமிடங்களில் வெந்துவிடும். உடனே நீங்கள் கிளம்பியதும், அதை ஓடோடே எடுத்து செல்லலாம். கிடைக்கும் நேரத்தில் அதை உறித்து சாப்பிடலாம். அது வயிற்றையும் நிறைக்கும், மிகவும் சத்துடையதாகவும் இருக்கும்.
வெஜ் சாண்ட்விச்:
சாண்ட்விச் ஒரு எளிய டிஷ். ஈஸியாக பிரட்டை டோஸ்ட் செய்தால் போதும். அதில் சத்துக்காக பாதாம், வெண்ணெய், வெள்ளரிக்காய் போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் உங்கள் வயிறு நிரம்பும். மேலும், பாதாம், வெள்ளரிக்காய்களில் உள்ள சத்துக்களும் கிடைக்கும்.
எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?
பயணத்தின் போது பலரும் காபி, டீ குடித்து மட்டுமே அந்த நாளை கழிப்பார்கள். அது மிகவும் தவறானதாகும். வயிற்றுக்கு தேவையானதை சாப்பிட்டால் மட்டுமே நமக்கு சத்து கிடைக்கும்.
அதே போன்று பயணத்தின் போது அசைவம் சாப்பிடுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அது நமக்கு குமட்டலை ஏற்படுத்தும்.
குறிப்பாக ஹோட்டல் உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். வீடுகளில் இருந்தே சாப்பாட்டை எடுத்து செல்லுங்கள், முடியவில்லை என்றால் இது போன்று பிரட் உள்ளிட்டவற்றை கொண்டுசெல்லுங்கள். தெரியாத ஊர்களில் உள்ள ஹோட்டல்களில் சாப்பிடுவது நம் பயணத்தை அசௌகரியமாக்கும்.