கோவாவின் இந்த ரகசியப் பாதை கோட்டைக்குள் ஒளிந்திருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

Goa tourist places
Goa tourist places
Updated on

கோவாவிற்கு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றால் அங்குள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க குறைந்தது 2 நாட்களாவது ஒதுக்கிவைத்து சென்று பாருங்கள்.

கோவா: முதலில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும். பகல் நேரத்தில் இந்த அழகிய கடற்கரை அதன் பளபளக்கும் வெண்மணல், நிறைய நீர் விளையாட்டுகள், உணவு வகைகள், மாலை நேரத்தில், இரவு நேரத்தில் கோவாவை  பார்க்க  வெகுவாகக் கவரும். ஒவ்வொரு புதனன்றும் இங்கு நடைபெறும் சந்தை மிகவும் பிரபலமானது.

கலங் கூட் கடற்கரை: கோவாவின் கடற்கரைகளின் ராணி என்ற புகழைப் பெற்றது கலங் கூட் கடற்கரை. அழகிய வெண்மணல் கடற்கரை, கோவாவில் வேகப்படகு சவாரி, பனானா ரைடு பாராசெய்லிங், வாட்டர் சர்ஃபிங், பல சாகச நீர் விளையாட்டுகளில் ஈடுபட விரும்பும் மக்களுக்கு இது ஒரு சொர்க்கம் ஆகும். இரவு நேரங்களில் கடற்கரையில் கொண்டாட்டங்கள் ரசிக்க வைக்கும்.

அகுவாடா கோட்டை: மண்டோவி ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள அகுவாடா கோட்டை ஒரு கம்பீரமான காட்சியை நமக்கு அளிக்கிறது 1612 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பிரம்மாண்டமான கோட்டை கோவாவின் மிகவும் புகழ் பெற்ற கோட்டைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தக்கோட்டை அரபிக்கடலில் மயக்கம் காட்சியால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. கோட்டையில் ஒரு பழைய கலங்கரை விளக்கம் சிறை அறைகளும் அமைந்துள்ளன. இவை அதன் முக்கிய சிறப்பு அம்சங்களில் ஒன்றாகும். கோட்டைக்குள் ஒரு ரகசிய பாதை இருப்பது அதன் கவர்ச்சியை மேலும் கூட்டுகிறது.

பலோலம் கடற்கரை: பசுமையான பனை மரங்களும், வண்ண மயமான கடற்கரை குடிசைகளும் நிறைந்த கண்ணை கவரும் தங்க நிற மணல் பரப்புதான்  பலோலம் கடற்கரை.

நாள் முழுவதும் ஓய்வெடுக்கவும், சாகசநீர் விளையாட்டுகள், பழைய சந்தையில் பொருட்கள் வாங்கவும், கடற்கரையோர உணவகங்களில் உணவு அருந்துதல் என தெற்கு கோளாவில் சுவாரஸ்யமான விஷயங்கள் இங்கு உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:
கேரள பயணத்தில் தவற விடக்கூடாத இடங்கள்!
Goa tourist places

கோல்வா கடற்கரை: கோல்வா கடற்கரையை விவரிக்க சொன்னால் அது அற்புதம் என கூறலாம். கோவாவில் வேடிக்கையாகப் பொழுதைக்கழிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த  இடமாகும். பலவிதமான உற்சாகமான நீர் விளையாட்டுக்கள், ஓய்வெடுப்பது, மக்கள் நடமாட்டத்தை பார்த்து ரசிப்பது. விடுமுறையில் குடும்பத்தினருடன் இரவில் நன்றாக ரசித்து கொண்டாடலாம்.

துத்சாகர் நீர்வீழ்ச்சிகள்: துத்சாகர் என்றால் இந்தியில் பால் கடல் என்று பொருள். பசுமையான பின்னணியில் ஆர்ப்பரித்து விழும் நீர், பால் நதி ஒன்று பெருக்கெடுத்து ஓடுவது போன்ற தோற்றத்தை  தரும். 1017 அடி உயரத்தில் இருந்து விழும் நான்கு அடுக்கு நீர்வீழ்ச்சியைக்காண அற்புதமாக இருக்கும்.

இந்திய கடற்படை அருங்காட்சியகம்: நாட்டில் கடற்படை விமான போக்குவரத்து வரலாறு மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றி சில விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம் இந்திய கடற்படை விமான போக்குவரத்து அருங்காட்சிகைளை குடும்பத்தினருடன் இங்கு மகிழ்ச்சியாக கழிக்கலாம். இந்த இடம் கடற்படை விமானப் போக்குவரத்து தொடர்பான பல கலைப் பொருட்களையும் இயந்திரங்களை பார்க்கலாம்.

இங்கு மினி திரையரங்கமும் உள்ளது .கடற்படை விமான போக்குவரத்து தொடர்பான ஆவணப் படங்களையும், திரைப்படங்களையும் பார்க்கலாம்.

கோவாவில் விடுமுறையில் சென்றால் பார்க்காத மற்ற இடங்களையும் சென்று பார்த்து வரலாம்.

Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News

Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook

Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram

Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter

Add KalkiOnline as a preferred source on Google... Click Here

logo
Kalki Online
kalkionline.com