கேரள பயணத்தில் தவற விடக்கூடாத இடங்கள்!

கேரளத்தின் பசுமை மலைகள், பனிமூட்டம் சூழ்ந்த நீர்வீழ்ச்சிகள், அமைதியான பின்னீர்க் காட்சிகள் – இயற்கையை நேசிப்பவர்களுக்கு தவற விடக்கூடாத பயண வழிகாட்டி
kerala-travel-guide
kerala-travel-guide
Updated on

டவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் முக்கியமான சுற்றுலா ஸ்தலங்கள் நிறைய உள்ளன. மலைகள் அழகான இயற்கை காட்சிகள் கடற்கரை கோவில்கள் நினைவு சின்னங்கள் வனவிலங்கு சரணாலயம் படகு சவாரி என அனைத்து தரப்பினரையும் தன் வசம் ஈர்க்கும் தன்மைகொண்டது கேரளா. அந்த அளவுக்கு சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.

ஆலப்புழா

கொச்சியில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதை அலப்பி என்றும் சொல்வார்கள். கடற்கரை பசுமை வயல்கள் பழமையான கலங்கரை விளக்கம் சாகச பயணம் என நிறைய உள்ளது. இங்குள்ள கிருஷ்ணராயபுரம் அரண்மனை அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும்.

கொச்சி

கேரளாவில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று கொச்சி. இதை கேட் வேடூ கேரளா என அழைப்பார்கள். சிறந்த துறைமுகங்களில் ஒன்று, கொச்சி அரபிக் கடலின் ராணி என அழைக்கப்படுகிறது. ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட மிகப்பெரிய தேவாலயம் உள்ளது. இங்கு சுவையான மீன் கிடைக்கும். கடற்கரை பிரியர்களுக்கு முக்கியமான இடமாக உள்ளது.

தேக்கடி

வன உயிரினங்கள் அதிகம் உள்ளது. இயற்கை ஆர்வலர்கள் தேடிச்செல்லும் இடமாகும். இது சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. தேயிலை காப்பி தோட்டங்கள் மசாலா பயிர் தோட்டங்கள் ஏராளமாக உள்ளது. சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. படகில் சென்று வன விலங்குகளை அருகில் இருந்து பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஏற்ற இடம்.

குமரகம்

கேரளாவில் முக்கியமான இடங்களில் ஒன்று குமரகம். கொச்சியில் இருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காடுகள் பச்சை பசேல் என்று இருக்கும். குமரகத்தை சிறந்த சுற்றுலா மையம் என அழைக்கிறார்கள் வரலாற்றுச் சின்னங்கள் சுவையான உணவுகள் படகு சவாரி மீன் உணவுகள் அதிகம் கிடைக்கும். பார்த்து ரசிக்க வேண்டிய இடம் இந்த குமரகம்

திருச்சூர்

கேரளாவில் மிகச்சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்குள்ள சாவக்காடு கடற்கரை வதனப்பள்ளி கடற்கரை பெரியம்பலம் கடற்கரை என ஏராளமாக உள்ளது. தங்கம் வைர நகைகளுக்கு பெயர் பெற்ற இடம் ஆகும். இங்கு புகழ்பெற்ற குருவாயூர் கோவில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கேரளாவில் விற்பனை செய்யப்படும் நகைகளில் 75% திருச்சூரில் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பூவார் தீவு

கேரளாவின் முக்கியமான இடங்களில் ஒன்றாக உள்ளது. அமைதியான நீர்பரப்பு வனவிலங்கு உயிரினங்கள் அதிகம் உள்ளது. திருவனந்தபுரத்தில் இரந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவில் மிக அழகான இடம். கடற்கரையில் தங்கும் குடில்கள் உள்ளன. இங்கே படகு சவாரி செய்வது சுகமான அனுபவம். தேனிலவு செல்பவர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
தென்னிந்தியாவின் குட்டி கோவா! அமைதி தேடும் பயணிகளுக்கு மணப்பாடு ஒரு சொர்க்கம்!
kerala-travel-guide

மூணாறு

அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடமாக உள்ளது. பனி போர்த்தியே பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீர் ஓடைகள் பெரிய நீர்வீழ்ச்சிகள் தேயிலை தோட்டங்கள் வளைந்து நெளிந்து செல்லும் பாதை என எங்கு பார்த்தாலும் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

கோவளம்

சுற்றுலா பயணிகளை மயங்கச் செய்யும் இடம் ஆகும். திருவனந்தபுரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சூரிய உதயம் சூரிய அஸ்தமனம் போன்ற நிகழ்வுகளை அருகில் இருந்து பார்க்கலாம். யோகா பயிற்சி மையங்கள் உணவு கூடங்கள் அருங்காட்சியகம் கலைக்கூடங்கள் என பார்க்கவேண்டிய இடங்கள் நிறைய உள்ளது.

திருவனந்தபுரம்

கேரளாவின் தலைநகராகும். இங்கு கடற்கரைகள் நிறைய உள்ளன. புகழ்பெற்ற பத்மநாத சுவாமி கோவில் இங்கு உள்ளது. இந்த கோவிலில் உலகத்தில் உள்ள மொத்த கடன்களையும் அடைக்க கூடிய அளவிற்கு பொக்கிஷங்கள் பொக்கிஷ அறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அருங்காட்சியகத்தில் அரசு குடும்பத்தார் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளார்கள். கோவில்கள் புத்த சிற்பங்கள் தந்த வேலைப்பாடுகள் அதிகம் நடைபெறும் இடமாகும்.

கோழிக்கோடு

இந்தியாவில் வாஸ்கோடகாமா முதன் முதலாக அடி எடுத்து வைத்த இடம் ஆகும். இங்குள்ள துறைமுகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. கடற்கரைப் பகுதிகள் வனவிலங்கு சரணாலயம் ஆறுகள் உள்ளன. தேங்காய் மிளகு ரப்பர் காப்பி, எலுமிச்சை முந்திரி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற இடமாகும். கடற்கரையில் ஓய்வு எடுக்கலாம். இங்கும் சூரிய உதயம் சூர்ய அஸ்தமனத்தை கண்டு களிக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com