சண்டிகரை சுற்றிப் பார்க்க வேண்டிய அருமையான இடங்கள்!

chandigarh capitol complex
capitol complex
Published on

சுதந்திர இந்தியாவின் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட (114ச கி மீ) முதல் நகரமான சண்டிகர்,   பஞ்சாப், ஹரியானா  இரு மாநிலங்களுக்குத் தலைநகர் மட்டுமல்ல! இந்த தலைநகரே ஒரு யூனியன் பிரதேசமாகவும் உள்ளது!

முறையான சாலைகள், திறந்தவெளி இடங்கள், முறையான கழிவு நீர் பாதைகள், திடக்கழிவு மேலாண்மை, எல்லாத் தரப்பு மக்களும் வாழ்வதற்கான வசிப்பிடங்கள் பாதசாரிகள் நடக்க அகலமான தனி நடைமேடை என எல்லாம் முறைப்படி உருவாக்கப்பட்ட சிறந்த நகரம் சண்டிகர்!

சுற்றுலாத் தலங்கள்!

கேப்பிட்டல் காம்ப்ளக்ஸ்!

கேப்பிட்டல் காம்ப்ளக்ஸ் வளாகத்தில்  பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் சட்ட மன்றங்கள், தலைமை செயலகம் மற்றும் உயர்நீதிமன்றம் உள்ளதால் விசேஷ அனுமதி பெற்றுதான் செல்ல முடியும்

திறந்த கை நினைவுச் சின்னம்!

கேபிடல் காம்ப்ளெக்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள திறந்த கை நினைவு சின்னம் சண்டிகர் நகரின் குறியீடாக, பறக்கும் பறவையைப் போல் தோன்றும் இச்சின்னம் 26 மீட்டர் உயரத்துடன் காற்றில் சுழலுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

நேப்லி!

3245 ஹெக்டேர் நிலப்பரப்பில் நேப்லி  வனப்பகுதியில்  கழுதைப்புலி, கலைமான், மான், நரி, போன்ற விலங்குகள் வாழ்வதால் வனத்துறை அனுமதி பெற்றுதான் செல்ல முடியும்.

சுக்னா காட்டுயிர் சரணாலயம்!

2600 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள சுக்னா காட்டுயிர் சரணாலயத்தில் பாலூட்டி விலங்குகள், பூச்சி இனங்கள், மற்றும் பறவைகளும் வாழ்கின்றன.

ஜாகிர் ஹூசைன் ரோஜா தோட்டம்!

இங்குள்ள ரோஸ் கார்டனில் 50,000 ரோஜா செடிகள் வளர்க்கப்படுவதோடு பலவகையான மூலிகைத் தாவரங்களும்  வளர்க்கப்பட்டு  ஆண்டுதோறும் "ரோஜா திருவிழா' நிகழ்ச்சி நடத்தப்படும் ஆசியாவின் மிகப்பெரிய பூங்கா என்ற பெருமைக்குரியது!

மிகப்பெரிய பூங்கா
மிகப்பெரிய பூங்கா

பாறை சிற்பத் தோட்டம்!

இங்குள்ள கலை சிற்பங்கள் உடைந்த வளையல் துண்டுகள், பீங்கான் துண்டுகள், மின்கம்பிகள், உபயோகமற்ற பழைய வாகன உதிரி பாகங்கள், பழைய மின் விளக்குகள், கட்டிடக் கழிவுகள், மண்பானைத் துண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி மனித உருவங்கள், மிருகங்களின் உருவங்கள், கட்டிடங்கள் போன்ற பல்வேறு சிற்பங்களாக அழகுறக் காட்சியளிக்கின்றன.

கன்சால் வனம்!

சண்டிகர் எல்லையில் அமைந்துள்ள ரம்யமான மிகப்பெரிய புல்வெளியை அனுமதி பெற்றுதான் பார்க்க முடியும்.

தேசிய அருங்காட்சியகம்!

தேசிய அருங்காட்சியகத்தில் காந்தாரா சிற்பங்கள், ராஜஸ்தான் பாணி ஓவியங்கள், அலங்காரப் பொருட்கள்  பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. பஞ்சாப் பிரிவினையின்போது பாகிஸ்தான் வழங்கிய 40 சதவீத பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன.

வாழ்க்கைப் பரிணாம அருங்காட்சியகம்!

இங்கு மனித நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சி, விசேஷ காட்சியமைப்புகள், மற்றும் ஓவியங்கள் மூலம் சித்தரிக்கப்பட்டுள்ளன. 

இன்டர் நேஷனல் டால்ஸ் மியூசியம்!

இந்த மியூசியத்தில் 25 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பொம்மைகள் சேகரித்து வைக்கப் பட்டுள்ளதோடு,  இந்திய பொம்மைகளுக்கென்று ஒரு தனிப்பிரிவோடு, உல்லாச ரயிலும் இயக்கப்படுகிறது.

பொம்மைகள்
பொம்மைகள்Image credit - pixabay

சாத்பீர் வனவிலங்கு பூங்கா!

சாத்பீர் வனவிலங்கு பூங்காவில், 85 வகையான விலங்குகள், பறவைகள், மற்றும் ஊர்வன என 950 உயிரினங்கள் உள்ளன. நம் நாட்டிலயே ராயல் பெங்கால் புலி இங்குதான் உள்ளது.

இதையும் படியுங்கள்:
தனிமையில் இருக்கீங்களா? இந்த 5ல் கவனம் செலுத்துங்கள்!
chandigarh capitol complex

குருத்வாரா கூனி சாஹிப்!

இந்த சீக்கிய வழிபாட்டுத்தலத்தில் குரு கோவிந்த்சிங் தனது படை வீரர்களுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாக கூறப்படும் கம்பீரமும் கொண்ட ஆலயம்!

காந்தி பவன்!

மகாத்மா காந்தி தொடர்பான படிப்புகளை பயில்வதற்கான மையமாகவும், இங்குள்ள கூட்ட அரங்கம் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த சண்டிகளை அவசியம்  ஒருமுறை சென்று பார்த்து வருவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com