குளு குளு கும்பக்கரை அருவி!

கும்பக்கரை நீர்வீழ்ச்சி
கும்பக்கரை நீர்வீழ்ச்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. பெரிய குளத்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த அருவியில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தேனி மாவட்டத்தின் "சின்ன குற்றாலம்" என அழைக்கப்படும் கும்பக்கரை அருவி ஒரு இயற்கையான அருவியாகும். 

மூலையார் பகுதியில் தோன்றி பல இடங்களைக் கடந்து கும்பக்கரை அருவியாக வருகிறது. இங்கு மருத மரங்கள் அதிகம் காணப்படுகின்றன. சுட்டெரிக்கும் கோடை வெயிலின் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.

மலையில் பெய்யும் மழை நீர்தான் அருவியின் முக்கிய நீராதாரமாக உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த அருவி.  இங்கு தங்கும் விடுதிகளோ, உணவகங்களோ இல்லை. இந்த அருவியின் அருகே வன தெய்வ கோயில்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கோடைக்கால அலர்ஜிகளுக்கு குட்பை சொல்லுங்கள்!
கும்பக்கரை நீர்வீழ்ச்சி

இந்த அருவியில் வேறு எங்கும் இல்லாத அளவில் கஜம் என அழைக்கப்படும் இடங்கள் அதனுடைய வடிவமைப்பிற்கு ஏற்றவாறு உள்ளது. யானை கஜம், குதிரை கஜம், அண்டா கஜம் என பல கஜங்கள் உள்ளன. இதில் யானை கஜம் பகுதி மிகவும் ஆபத்தானதாகும்.

கும்பக்கரை பெயர் காரணம்:

இந்தப் பகுதியில் உள்ள வீரபுத்திரன், வைரவன், செழும்புநாட்சிி, சோத்து மாயன், கருப்பண்ணசாமி, மாட்சி நாயக்கன் ஆகிய வன தெய்வங்கள் இங்குள்ள கரையில் கும்பலாக கூடுமாம். அதனால் இது கும்பல் கரை என்று முன்னர் அழைக்கப்பட்டு நாளடைவில் கும்பக்கரை என்று மருவியதாக கூறப்படுகிறது.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி
கும்பக்கரை நீர்வீழ்ச்சி

கும்பக்கரை நீர்வீழ்ச்சி பகுதியைத் தவிர தண்ணீர் செல்லும் தடங்களிலுள்ள வழக்குப் பாறை, யானை கெஜம், உரல் கெஜம், பாம்பு கெஜம் என்று அழைக்கப்படும் பகுதிகளிலும் நீராடி மகிழலாம். சில இடங்களில் குளிப்பது ஆபத்தானது என்று தடை செய்யப்பட்டுள்ளது. அவற்றில் கவனமாக இருப்பது அவசியம். இந்த அருவியின் நீரில் மூலிகைகள் மற்றும் தாது பொருட்களின் நற்குணங்கள் நிறைந்துள்ளதால் இதில் குளிக்க பெருந்திரளான மக்கள் வந்து குவிகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பார்க்க வேண்டிய பிற இடங்கள் சுருளி அருவி, மேகமலை, வைகை அணை மற்றும் சின்ன சுருளி அருவி ஆகியவையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com