
பேருந்து ரயில் பயணங்களைவிட விமானப் பயணம் செல்வது சற்று பட்ஜெட் அதிகமாக காணப்படும் என்பதால் அதன் மீதான ஆவலும், மக்களுக்கு மற்ற பயணங்களைவிட அதிகமாகவே இருக்கிறது. விமானத்தைப் பற்றி தெரிந்து கொள்வதே பலருக்கு மகிழ்ச்சிகரமான விஷயமாக இருக்கிறது. அந்த வகையில் விமானத்தில் உள்ள ஹாரன் குறித்து இப்பதிவில் காண்போம்.
ஹாரன் என்பது பொதுவாக விபத்தை தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக அனைத்து வாகனங்களிலும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானோர் ஹாரனை அடித்து கூப்பிடுவது, அடுத்தவரை பயமுறுத்துவது, வண்டியை முந்தி செல்ல அனுமதி கேட்பது போன்றவற்றிற்காக பயன்படுத்துகிறார்கள்.
ஹாரன்களின் ஓசைகள் அவரவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக கூட வைத்துக் கொள்கிறார்கள். "SOUND HORN" என்ற சொல் அனைத்து வாகனங்களில் பின்னாலும் அவசியம் எழுதப்பட்டிருக்கும்.
இதேபோல விமானங்களிலும் ஹாரன் இருக்கிறது. ஆனால் அவற்றிற்கான காரணங்கள் மற்றும் சற்று வித்தியாசமாக இருக்கின்றன. விமானம் புறப்படுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின்போது இந்த பயன்படுத்தப்படுகிறது.
அதாவது விமானம் வானத்தில் பறக்கும்போது அதன் வெளிப்புறத்தில் எரியும் விளக்குகள் மிகவும் முக்கியமானவை. இவை அனைத்தும் புறப்படுவதற்கு முன்பாக ஆய்வு செய்யப்படும் அப்படி ஆய்வு செய்யும் ஊழியர்களுடன் தொடர்புகொள்ள இந்த ஹாரன் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் விமானத்தின் ஹைட்ராலிக் அழுத்தம் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்கவும் ஹாரன் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தவிர விமானத்திற்கு கீழே இருக்கும் ஊழியர்களை விமானி அழைக்க வேண்டும் என்றாலும் ஹாரன் பயன்படுத்துவார்.
ஹாரன் சத்தம் ஒவ்வொரு விமானத்திலும் ஒவ்வொரு விதமாக வித்தியாசமாக இருக்கும். நம்மூரில் உள்ள ரூட்டு பஸ்ஸின் ஹாரன்போல, 'ரம்பப ரம்பப ரம்பப' என்று அலராது. மாறாக, நோக்கியா 1100 மொபைலில் வரும் ரிங்டோன்போல இருக்கும். கேட்பதற்கு சிரிப்பாக இருக்கும். ஏர்பஸ், போயிங் என ஒவ்வொரு விமானத்திற்கும் இந்த ஹாரன் சத்தம் வித்தியாசமாக இருக்கும்.
இனிமேல் விமானத்தில் பயணம் செய்தாலோ அல்லது பயணிகளை ஏற்றி விட சென்றாலோ இந்த ஓசைகளை வைத்து கூறியது சரிதானா என தெரிந்துகொள்ளுங்கள்.