கடற்கரை பிரியர்களுக்கான ஏற்ற இடம்தான், ஜப்பானில் உள்ள இந்த Hokkaido கடற்கரை. இந்த கடற்கரையில்தான் மணல், பனி மற்றும் கடல் ஆகிய மூன்றும் சந்தித்துள்ளது. இந்த சொர்க்க கடற்கரைப் பற்றி மேலும் சுவாரசியமான விஷயங்கள் பார்ப்போம்.
சாதாரணமாக கடற்கரையுடன் சூரியன் சேர்ந்தாலே, கோடி அழகாக இருக்கும். அத்துடன் சில மாயாஜாலம் சேர்ந்தால், சொல்லவா வேண்டும். பொதுவாக மணல் முடியும் இடத்தில் கடலின் கரை இருக்கும். அதுவும் இல்லையென்றால், பனியும் கடலும் சேரும். ஆனால், இந்த மூன்றும் சேர்ந்தால், எப்படியிருக்கும்? வெள்ளை பனி, மணல், நீல கடல் மூன்றையும் ஒரே இடத்தில் பார்க்கும்போது அதைக் காண இரு கண்கள் போதுமா என்ன?
அப்படியொரு கடற்கரைதான் Hokkaido. இது ஜப்பானின் மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு கியோகாமிசாகி கேப், கியோட்டோவில் இருந்து மேற்கு ஹகுடோ வரை நீண்டுள்ளது. இங்கு ரியா வகை கடற்கரைகள், மணல் திட்டுகள், எரிமலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற புவியியல் அம்சங்களையும் காணலாம். அதேபோல் இந்த இடத்தில் அரிய தாவரங்களையும் பார்க்கலாம். இந்த கடற்கரை அருகே உள்ள மூன்று நகரங்களில் சுமார் 4 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இந்த இடத்தில் இதுவரை மூன்று முறை பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளதால், அங்கு எப்போதும் மக்கள் எச்சரிக்கையாகவே இருப்பார்கள்.
இந்த நிகழ்வு ஜனவரி கடைசி நாட்களிலிருந்து பிப்ரவரி மாதத்தின் தொடக்கம் வரை நடக்கும். அந்த சமயங்களில் மட்டும் உலகம் முழுவதிலுமிருந்து பல சுற்றுலா பயணிகள் இந்த கடற்கரைக்கு வருவார்கள்.
பனி சூரியனின் ஒளியை வாங்கி எதிரொலிக்கும். அந்தசமயத்தில் கடலும் அடர்ந்த நீலத்தில் இருக்கும். சூரியன் மறைய மறைய சிவப்பு வானம் தோன்றும் அந்த சமயத்தில் அந்தக் காட்சியைப் பார்க்க ஏராளமான மக்கள் அங்கு செல்வார்கள். மேலும் இந்த இடத்திற்கு வர ஒரே ஒரு தடையுள்ளது. ஆம்! அங்கு எப்போதும் இயல்பைவிட அதிகமான குளிர் இருக்கும். ஆகையால், சிலர் இங்கு செல்வதை தவிர்த்துவிடுவார்கள். மேலும் சிலர், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துக்கொண்டு செல்வார்கள்.
ஜப்பான் சென்றால், இந்த அதியசத்தைப் பார்க்க மறந்துவிடாதீர்கள். பின் பெரிய Loss தான் Boss.