
உயரமான மலைப்பாதைகளில் உள்ள சாலைகளில் வாகனம் ஓட்டும்போது பனி முடிய சிகரங்கள், திடீர் நிலச்சரிவுகள், குறுகிய பாதைகள், ஒழுங்கற்ற வானிலை போன்ற காரணங்களால் பொறுமை துணிச்சல் மிகவும் அவசியம். அந்த வகையில் இந்தியாவில் மலைகளில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஆபத்தானதாக கருதப்படும் 10 சாலைகள் குறித்து காண்போம்.
கர்துங்லா, லடாக் (5,359 மீட்டர் உயரம்)
ஆண்டு முழுவதும் பனி மற்றும் பனிக்கட்டி இருப்பதோடு, நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படக்கூடிய உலகின் மிக உயரமான வாகனம் ஓட்டக்கூடிய சாலைகளில் ஒன்றான கர்துங்லா, நுப்ரா மற்றும் ஷியோக் பள்ளத்தாக்குகளுடன் லேவை இணைக்கும் இந்த சாலை 5,359 மீட்டர் உயரம் கொண்டதால் ஆபத்தான சாலையாக உள்ளது.
லிபுலேக் கணவாய், உத்தராகண்ட் (5,334 மீட்டர் உயரம்)
5,334 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரை பாதை மற்றும் வர்த்தக பாதை இரண்டையும் இணைக்கும் குறுகலான லிபுலேக் கணவாய் சாலை செங்குத்தானதோடு, நிலச்சரிவுகளால் பாதிக்கப்படக் கூடியதாக இருப்பதால் அபாயகரமான சாலையாக கருதப்படுகிறது.
பரலாச்சா லா, இமாச்சலப் பிரதேசம் (4,890 மீட்டர் உயரம்)
லே-மணாலி நெடுஞ்சாலையில் 4890மீ உயரத்தில் அமைந்து ஒழுங்கற்ற வானிலை மற்றும் பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்டுள்ள பரலாச்சா லா சாலையில் அடிக்கடி பனிச்சரிவுகள் ஏற்படுவதால் ஆபத்தானது.
நாதுலா கணவாய், சிக்கிம் (4,310 மீட்டர் உயரம்):
திபெத்தையும் சிக்கிமையும் இணைக்கும் கடல் மட்டத்திலிருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய் சாலையில் பனி மூடியிருப்பதோடு ,வலுக்கலான செங்குத்தான திருப்பங்களைக் கொண்டுள்ளதால் அபாயகரமானதாக இந்த சாலை உள்ளது .
சீலா பாஸ், அருணாச்சலப் பிரதேசம் (4,170 மீட்டர் உயரம்)
4,170 மீட்டர் உயரமுள்ள சீலா கணவாய் மூலம் இணைக்கப்பட்டுள்ள இந்த சாலை தவாங் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பிறபகுதிகள் ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டு ஆபத்தானதாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருக்கும்.
NH-22 (இந்துஸ்தான் - திபெத் சாலை), இமாச்சலப் பிரதேசம் (4,000 மீட்டர் உயரம்)
மலைகளைக் குடைந்து உருவாக்கப்பட்டு 4000 மீஉயரம் கொண்ட இந்துஸ்தான் திபெத் சாலையின் ஒருபுறம் பாறைகள், மறுபுறம் ஆழமான பள்ளத்தாக்குகளுக்கும் இடையில் கூர்மையான வளைவுகள் மற்றும் மேல்நோக்கிச் செல்லும் விளிம்புகள் காரணமாக மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக உள்ளது.
ரோஹ்தாங் கணவாய், இமாச்சலப் பிரதேசம் (3,978 மீட்டர் உயரம்)
லாஹௌல் மற்றும் ஸ்பிதியை குலு பள்ளத்தாக்குடன் இணைக்கும் 3978மீ உயரத்தில் உள்ள ரோஹ்தாங் கணவாய் கடுமையான பனிப்பொழிவு, அடர்ந்த மூடுபனி மற்றும் ஒழுங்கற்ற வானிலைக்கு பெயர் பெற்றதால் முதல்முறையாக இங்கு வருபவர்களுக்கு வாகனம் ஓட்டுவது கடினமாக இருக்கும்.
ஸ்பிதி பள்ளத்தாக்கு சாலை, இமாச்சலப் பிரதேசம் (3,800 மீட்டர் உயரம்)
ஸ்பிட்டி பள்ளத்தாக்கு சாலை, பாறைகள் பாதைகள் மற்றும் கூர்மையான வளைவுகளால் 3800மீ உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் பனிப்பொழிவு காரணமாக வாகனம் ஓட்டுவது இங்கு ஆபத்தானது.
ஜோஜிலா பாஸ், ஜம்மு & காஷ்மீர் (3,528 மீட்டர் உயரம்)
ஜோஜிலா பாஸ் 3,528 மீ உயரத்தில் அமைந்து ஸ்ரீநகரையும் லேவையும் இணைக்கும் ஆபத்தான கணவாயாக இருப்பதோடு இந்த சாலை சேறும் சகதியுமாக, குறுகலாகவும், அடிக்கடி பனியால் மூடியும் நிலச்சரிவுகள் அடிக்கடி ஏற்படுவதால் கடினமான பாதைகளில் ஒன்றாக உள்ளது .
கிஷ்த்வார் கைலாஷ் சாலை, ஜம்மு & காஷ்மீர் (2,525 மீட்டர் உயரம்)
ஆபத்தான மலை விளிம்புகளைக் கொண்ட 2,525 மீ உயரமுள்ள இந்த சாலை, குறுகியபாதை, கூர்மையான வளைவுகள் மற்றும் தடுப்புகள் இல்லாததால், மிகவும் பயங்கரமான இந்திய சாலைகளில் ஒன்றாக உள்ளது .
மேற்கூறிய 10 மலைச்சாலைகளில் வாகனம் ஓட்டும்போது திரில்லான அனுபவம் ஏற்படுவதோடு மிகவும் கடினமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.