Confluence of nature
Mini Switzerland..

இந்தியாவின் மினி சுவிட்சர்லாந்து: அமைதி, சாகசம், மற்றும் இயற்கையின் சங்கமம்!

Published on

ஜியார் (Khajjiar) என்பது இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள டல்ஹவுசிக்கு அருகில் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். அற்புதமான சிகரங்கள், பிரகாசமான புல்வெளிகள் மற்றும் பசுமையான மரகத காடுகள் கொண்ட உல்லாசப் பயணம் செய்வதற்கு ஏற்ற இடமாகும்.

பசுமையான அழகிய புல்வெளிகள் நகரத்தின் பிரபலமான அம்சங்களில் ஒன்றாகும். இயற்கையை ரசிக்கவும், குதிரை சவாரி, பாராகிளைடிங் மற்றும் சோர்பிங் போன்ற உற்சாகமான செயல்களில் ஈடுபடவும் ஏற்ற இடம். கடல் மட்டத்திலிருந்து கஜ்ஜியார் 6,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோல்ஃப்  மைதானத்திற்கும்  பிரபலமானது. 

மினி சுவிட்சர்லாந்து 

காஜியார் ஒரு சிறந்த மலைவாச ஸ்தலமாகும். இது 'மினி ஸ்விட்சர்லாந்து' என்று அழைக்கப்படுகிறது. அழகிய பசுமையான மேய்ச்சல் நிலங்கள் மற்றும் பசுமைக்கு பெயர் பெற்ற இடம் இது. பரந்த பசுமையான வயல்கள், வளைந்து நெளிந்து ஓடும் மென்மையான ஆறுகள் மற்றும் சுற்றியுள்ள சிடார் மரங்களுடன் கூடிய இயற்கை அழகு காண்பவர்களை கண் குளிரச் செய்யும். இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த, அமைதியான மலைப் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள காஜியார் நாகா ஆலயம் மிகவும் பிரபலமானது.

கஜியார் ஏரி

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அழகிய உயரமான ஏரியாகும்.  பசுமையான புல்வெளிகள் மற்றும் தேவதாரு மரங்களின் அழகிய சூழலுக்கு பெயர் பெற்றது. இந்த ஏரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 1900 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. பரந்த புல்வெளிகளால் சூழப்பட்டு, தேவதாரு மற்றும் பிற பசுமையான மரங்களின் அடர்ந்த காடுகளுடன் காணப்படும் இந்த ஏரியின் காட்சிகளையும், சுற்றியுள்ள நிலப்பரப்புகளையும் ரசிக்கவும், சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் ஏற்ற இடமிது. கஜ்ஜியாரில் ஏரியின் மையத்தில் இரண்டு மிதக்கும் தீவுகள் உள்ளன. அவை சில நேரங்களில் அவற்றில் வளரும் உயரமான புல்லால் மறைக்கப்படுகின்றன. இந்த ஏரியில் வளரும் மூலிகைகள் மற்றும் புற்கள் மிதக்கும் தீவுகளின் தோற்றத்தை அளிக்கின்றன. மிதக்கும் தீவுகள் இந்த கஜ்ஜியார் ஏரியின் முக்கிய ஈர்ப்பாகும். இங்கிருந்து கைலாஷ் மலையின் அற்புதமான காட்சியைக் காணமுடியும்.

பாராகிளைடிங், மலையேற்றம் மற்றும் குதிரை சவாரி போன்ற செயல்களில் ஈடுபடலாம். சாகச ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்க பூமியாகும். 

இதையும் படியுங்கள்:
விமான பயணச்சீட்டுகளை மலிவான விலையில் வாங்குவது எப்படி?
Confluence of nature

கஜ்ஜி நாக் கோயில்

கஜ்ஜியார் ஏரிக்கு மிக அருகில் உள்ள மிகப்பழமையான கிபி 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தங்க கோபுரம் மற்றும் குவிமாடம் அமைந்துள்ள இக்கோவில் 'தங்க தேவி கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. நாகக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலில் பல்வேறு பாம்பு சிலைகள் மற்றும் மகாபாரதக் காட்சிகளை சித்தரிக்கும் அழகான மரச் சிற்பங்களைக் காண முடியும். இங்கு ஆடுகளை பலியிடும் பழங்கால முறை இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

கலாடாப் வனவிலங்கு சரணாலயம்

இங்கு அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை பார்க்க முடியும். இமயமலை கருப்பு மார்டன் மான்கள், லங்கூர்கள், கரடிகள், சிறுத்தைகள் போன்ற ஏராளமான விலங்குகள் மற்றும் பல வகையான பறவைகளையும் காண முடியும்.

சம்பா

ரவி நதிக்கரையில் உள்ள கவர்ச்சிகரமான சம்பா மிகவும் அழகான அடர்ந்த காடுகள் மற்றும் வசதியான வானிலை கொண்டு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு கோட்டைகள் மற்றும் கோவில்கள் நிறைந்துள்ளன.

பார்வையிட சிறந்த நேரம்

மார்ச் முதல் ஜூன் வரையிலான காலம் இங்கு வருவதற்கு ஏற்றதாகும். அச்சமயத்தில் இதமான வெப்பநிலை நிலவும். நவம்பர் முதல் மார்ச் வரை பனிப்பொழிவு இருக்கும். குளிர்கால மாதங்களில் கஜியார் பனியால் சூழப்பட்டிருக்கும். இது கொஞ்சம் கடினமாக இருந்தாலும், அதன் அழகிய அழகை ரசிக்க பயணிகள் இங்கு வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
விமான பயணச்சீட்டுகளை மலிவான விலையில் வாங்குவது எப்படி?
Confluence of nature

எப்படி செல்வது?

சம்பா மற்றும் டல்ஹௌசி ஆகிய  இரண்டிற்கும் சிறந்த போக்குவரத்து இணைப்புகளைக் கொண்டுள்ளது. கஜ்ஜியார் நகரம் சம்பா மாவட்டத்தில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் பதான்கோட் (105 கி.மீ). அருகில் உள்ள விமான நிலையம் காங்க்ரா (125 கி.மீ). டெல்லி மற்றும் சண்டிகரில் இருந்து நேரடிப் பேருந்துகள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com