விமான பயணச்சீட்டுகளை மலிவான விலையில் வாங்குவது எப்படி?

payanam articles
Airline tickets...
Published on

விமானப் பயணம் பொதுவாக செலவுமிக்கது. பயண நாளன்று விமானப் பயணச்சீட்டினை வாங்கி பயணிப்பதைவிட பயணத் தினத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்வது நம் பயணச்செலவை வெகுவாகக் குறைக்கும்.

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகள் விமான டிக்கெட்டுகளை வாங்க சிறந்த நாட்களாகும். பெரும்பாலான விமான நிறுவனங்கள் செவ்வாய்க் கிழமை மாலை 7:00 மணிக்கு தங்கள் முன்பதிவு அமைப்புகளை அமைக்கின்றன. ஏனென்றால், பெரும்பாலான பயணிகளுக்கு வார நாட்களில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய நேரம் கிடைக்கும் என்பது விமான நிறுவனங்களுக்கு நன்றாகத் தெரியும்.

புள்ளிவிவரங்களின்படி, நம்மில் பெரும்பாலோர் வெள்ளி, சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விமானப் பயணச்சீட்டின் விலைகளை பார்க்கிறோம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ள உண்மையாகும்.

அனுபவத்தின் அடிப்படையில், நமது பயணத் தேதிக்கு குறைந்தது 21 நாட்களுக்கு முன்னதாக நாம் நமது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்த கட்டணத்தில் விமானச்சீட்டை பெறமுடியும்.

பெரும்பாலான விமான நிறுவனங்கள் முடிந்தவரை அதிக டிக்கெட் விற்பனையை அடைய தங்கள் அமைப்புகளை அமைத்துள்ளன. எனவே, கணினி மிகவும் மலிவான டிக்கெட்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஒதுக்கீட்டைக் கொண்டுள்ளது. உதாரணமாக, கோலாலம்பூரில் இருந்து லண்டன் செல்லும் விமானங்களுக்கு, முதல் 20 பயணிகளுக்கு மட்டுமே குறைந்த விலையில் டிக்கட்டுகள் கிடைக்கும் விதத்தில், அதன் இணைய சேவைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

அடுத்த 200 பயணிகளுக்கு டிக்கட்டுகள் நடுத்தர விலையிலும், மீதமுள்ளவை அதிக விலையிலும் கிடைக்கலாம். சுருக்கமாகச் சொன்னால், கோலாலம்பூரில் இருந்து லண்டனுக்குப் பறக்கும்போது அவர்கள் விரும்பும் மார்ஜின் அடிப்படையில் விமானச் சேவையின் அமைப்பு டிக்கெட் விலையை நிர்ணயிக்கும்.

இதையும் படியுங்கள்:
பொருளாதார வலிமையின் சின்னங்கள்: ஆசியாவின் டாப் 5 உயரமான கட்டிடங்கள்!
payanam articles

செவ்வாய் அல்லது புதன் கிழமைகளில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிக்கலாம். பெரும்பாலான விமான நிறுவனங்கள் இந்த இரண்டு நாட்களையும் முன்பதிவு அமைப்புகளுக்கு 'குறைவான பிஸியான நாட்கள்' என அமைக்கின்றன. முன்பதிவு அமைப்பு மற்றும் விமான நிலையங்கள் மிகவும் பிஸியாக இருக்கும்போது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுடன் ஒப்பிடும்போது இந்த இரண்டு நாட்களில் விமான டிக்கட்டுகளின் விலை பொதுவாக குறைவாகவே இருக்கும்.

சர்வதேச விமானங்களுக்கான பல்வேறு விமானச் சேவைகளின் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து தேடுவது நல்லது. பெரும்பாலான விமான நிறுவனங்கள் சர்வதேச விமானங்களுக்கு 11 முதல் 12 வாரங்களுக்கு முன்னதாகவே 'சிறந்த ஒப்பந்தத்தை' வழங்கும். எனவே, இந்த காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை நாம் தவறாமல் விமான பயணச்சீட்டின் விலையை சரிபார்க்க வேண்டும்.

நாம் பயணம் செய்யும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறிய விமான நிலையங்களில் நாம் தரையிறங்க தேர்வு செய்யலாம். அந்த இலக்குக்கான 'முக்கிய விமான நிலையம்' இல்லாத விமான நிலையத்தில் தரையிறங்கும் இந்த நுட்பத்தை நாம் முயற்சி செய்யலாம்.

நாம் 30 நாட்களுக்கு முன்பு விமானத்தின் இணையதளத்திற்குச் சென்றிருந்தால், நமது லேப்டாப், ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் உள்ள குக்கீகளை அழிக்கவேண்டும். ஏனென்றால், இந்த குக்கீகள் மூலம், விமானத்தின் முன்பதிவு அமைப்பு நாம் அவர்களின் இணையதளத்தை மீண்டும் மீண்டும் பார்வையிட்டதாகக் கருதும்.

எனவே, இணையதளத்தை பலமுறை பார்வையிட்டாலும், முன்பதிவு முறை ஒரே விலையை நிர்ணயிக்கும். சில சமயம் விலை அதிகரிக்கக் கூடச்செய்யலாம்! எனவே, நமது இணைய உலாவியில் குக்கீகளை அழிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்துவது நல்லது. அவற்றை எப்படி நீக்குவது என்று நமக்குத் தெரியாத நைலையில், திரு. கூகுளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
இயற்கையோடு இணைந்து செல்லும் சிசிகுவான் மிதக்கும் பாலம்!
payanam articles

மற்ற இணையதளங்களில் நாம் விரும்பும் டிக்கெட் விலைகளை கூகிள் செய்து ஒப்பிட்டுப்பார்ப்பது நல்லது. ஒரே நிறுவனத்தின் விமானப் பயணத்தில் மட்டும் கவனம் செலுத்தக் கூடாது. சில சமயங்களில் அதே விமானப் பயணச்சீட்டு வேறு விமான நிறுவனங்களில் மலிவான விலைகளில் நமக்கு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உணடு. எனவே, ஒரு விமானப் பயணத்தினை மேற்கொள்ளும்போது முறையான திட்டமிடுதலும், சில அடிப்படை ஆராய்ச்சிகளும் நமக்கு தேவைப்படுகின்றன என்பதுவே எதார்த்தமான உண்மையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com