
யப்பான் அல்லது சப்பான் என்பது ஆசியக்கண்டத்திலுள்ள பல தீவுகளால் சூழப்பட்ட ஒரு நாடு. இது பசிப்பிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் உள்ளது. இது 'சூரியன் உதிக்கும் நாடு' என்றும் அழைக்கப்படுகிறது. மொத்தம் 6852 தீவுகளை உள்ளடக்கியது. ஒக்கைடோ, ஒன்சு, சிகொக்கு, கியூசூ ஆகியன ஜப்பான் நாட்டிலுள்ள 97 சதவிகித நிலப்பரப்பை உள்ளடக்கிய நான்கு பெரிய தீவுகளாகும். மக்கள் தொகையில் உலகில் 11ஆவது இடத்தைப் பெற்று உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும் திகழ்கிறது ஜப்பான்.
யப்பானிய மொழியில் அந்நாட்டின் பெயர் 'நிகோன்கொகு' அல்லது 'நிப்பொன்கொகு' என உச்சரிக்கப்பட்டது. இதன் ஆங்கிலப்பெயர் ஜப்பான். ஜப்பான் மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நிறையத் தொடர்புகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டு மொழிகளும் ஒரே மாதிரியான இலக்கணக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன என்று சொல்லப்படுகிறது.