குறைந்த செலவில் ஒரு குளு குளு சுற்றுலா! கைலாசகோனா அருவி - ஒரு மினி குற்றாலம்!


Payanam Articles
Kailasakona Falls
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

மிழ்நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த சித்தூர் மாவட்டத்தில் தலகோணா அருவி, தடா அருவி, ஆகாச கங்கா அருவி, கைலாசகோனா அருவி என பல அருவிகள் அமைந்துள்ளன. சென்னையிலிருந்து சுமார் எண்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இத்தகைய அருவிகளுக்கு சென்னையிலிருந்து காலையில் புறப்பட்டு அருவிகளில் நீராடி மாலை திரும்பிவிட இயலும் என்பது சிறப்பு.

சென்னையிலிருந்து குற்றாலம் சென்று திரும்ப இரண்டு நாட்களாகும். மேலும் செலவும் அதிகம் பிடிக்கும். சென்னையிலிருந்து இரண்டு மணி நேரப்பயண தூரத்தில் அமைந்துள்ளது கைலாசகோனா அருவி.

கைலாசகோனா அருவி 1980 களில் பிரபலமடையத் தொடங்கி தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த அருவிக்கு வருகை தந்து குளித்து மகிழ்ச்சியோடு திரும்புகிறார்கள்.

Payanam Articles
கைலாசகோனா அருவி

சுமார் 30 மீட்டர் உயரம் கொண்ட இந்த அருவி பல வழித்தடங்களைக் கடந்து வருவதால் மருத்துவ குணம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இந்த அருவியின் சிறப்பு என்னவென்றால் வருடத்தில் அனைத்து நாட்களிலும் தண்ணீர் கொட்டியபடியே இருப்பதுதான். ஒரு சமயத்தில் இருபது பேர்கள் வரை குறிக்க இயலும்.

இப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாத ஸ்வாமி கோயிலுக்கு அருகில் பிரதான அருவி அமைந்துள்ளது. இந்த கைலாசகோனா அருவியைத் தவிர இப்பகுதியில் இரண்டு சிறிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. இந்த இரண்டு நீர்வீழ்ச்சிகளை அணுக சரியான பாதைகள் இல்லை.

இதையும் படியுங்கள்:
பசிபிக் கடலின் ரகசிய சொர்க்கம்: டோங்கா தீவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!

Payanam Articles

கைலாசகோனா சென்னையிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ஊத்துக்கோட்டை நாகலாபுரம் மார்க்கமாகச் சென்றால் கைலாச கோனா அருவியை அடைந்துவிடலாம்.

அருவியின் நுழைவாயிலின் முன்னால் கார் மற்றும் பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது. அருவி பகுதிக்குச் செல்ல ஒரு நபருக்கு பத்து ரூபாய் நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. நுழைவாயிலிலிருந்து ஐந்து நிமிட நடை பயணத்தில் அருவியை அடைந்துவிடலாம். நுழைவாயில் அருகில் சிறு சிறு கடைகள் உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com