பசிபிக் கடலின் ரகசிய சொர்க்கம்: டோங்கா தீவின் பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயங்கள்!

Payanam Articles
டோங்கா தீவு

தென் பசிபிக் கடலில் உள்ள டோங்கா(Tonga) நாட்டின் முக்கிய தீவான டோங்காதாபு (Tongatapu) அந்நாட்டின் தலைநகரான நுகுஅலோபா (Nukualofa) அமைந்துள்ள மையப் பகுதியாகும். டோங்காவின் முக்கிய தீவான டோங்காதாபு டோங்காவின் தீவுகளில் மிகப்பெரியது. அத்துடன் நாட்டுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும் உள்ளது. பழங்கால புதைகுழிகள் (உள்ளூரில் லாங்கி என்று அழைக்கப்படுகிறது), பிரமிக்க வைக்கும் கடலோர காட்சிகள் மற்றும் வெப்ப மண்டல பழங்களை விற்பனை செய்யும் சந்தைகள் நிறைந்த இடமாகும். இங்குள்ள அழகிய கடற்கரைகளில் ஸ்நோர்கெல்லிங் செய்யலாம்; பண்டைய மன்னர்களின் கல்லறைகளை பார்க்கலாம்.

இத்தீவு பசிபிக் பெருங்கடலின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும். இது இயற்கை அதிசயங்கள் மற்றும் கலாச்சார வரலாற்று இடங்களுக்கு பெயர் பெற்றது. டோங்காதாபுவில் பார்க்க வேண்டிய சில முக்கியமான இடங்கள்:

1. மாபு ஆ வேயா ப்ளோஹோல்ஸ் - Mapu'a a Vaea Blowholes

Payanam Articles
Mapu'a a Vaea Blowholes

ஹூமா (Houma) கிராமத்திற்கு அருகில் கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு இயற்கை அதிசயம். கடல் அலைகள் பாறைகளுக்கு இடையே உள்ள துவாரங்கள் வழியாகப் பாயும் பொழுது நீர் ஊற்று போல 30 மீட்டர் உயரம் வரை பீச்சியடிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். 

2. அனஹுலு குகை - Anahulu Cave

Payanam Articles
Anahulu Cave

இது ஒரு நிலத்தடி சுண்ணாம்புக்கல் குகை. உள்ளே அழகான ஸ்டாலக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலக்மைட்டுகள் இருப்பதுடன் உள்ளே உள்ள தெளிவான நன்னீர் குளத்தில் நீந்தவும் செய்யலாம். அருகே அனாஹூலு கடற்கரையும் உள்ளது. இப்பகுதி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது.

3. ஹா அமோங்கா ஆ மௌய் - Ha'amonga'a Maui Trilithon

Payanam Articles
Ha'amonga'a Maui Trilithon

"பசிபிக் பெருங்கடலின் ஸ்டோன்ஹெஞ்ச்" என்று அழைக்கப்படும் இது 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு பண்டைய கல் நினைவுச் சின்னமாகும். தல 30-40 டன் எடையுள்ள 3 பிரம்மாண்டமான பவளப்பாறை தூண்களால் ஆனது. இது பழைய டோங்கன் கலாச்சாரத்தின் பொறியியல் திறமையை பறைசாற்றும் அடையாளமான பிரம்மாண்டமான கல் நுழைவாயிலாகும்.

4. அரச அரண்மனை - Royal Palace

Payanam Articles
Royal Palace

நூக்குவாலோபா(Nukualofa) நகரில் அமைந்துள்ள இது டோங்கா மன்னரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும். 1867ல் கட்டப்பட்ட இந்த விக்டோரியன் பாணி அரண்மனை பழமையான மற்றும் அற்புதமான அரச வசிப்பிடம் இது.

இதையும் படியுங்கள்:
வெயிலுக்கு முன் ஒரு ஜாலி ட்ரிப்: மார்ச் மாதத்தை அழகாக்கும் இடங்கள்!
Payanam Articles

5. ஹூபங்காலுபே இயற்கை தரைப்பாலம் - Hufangalupe Natural land bridge

Payanam Articles
Hufangalupe Natural land bridge

பாறைகளுக்கு இடையே கடல் அரிப்பால் உருவான ஒரு அழகான இயற்கை பாலம் இது. இயற்கை அன்னை உருவாக்கிய கடலுக்கு மேலே அமைந்துள்ள ஒரு அழகான நிலப் பாலம். இதன் கீழே அலைகள் மோதுவதை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

6. தலமாஹு - Talamahu சந்தை

Payanam Articles
Talamahu

தலைநகர் நுகுஅலோஃபாவில் உள்ள இந்த சந்தையில் உள்ளூர் மக்கள், புதிய பழங்கள், காய்கறிகள் மற்றும் கைவினை பொருட்களை வாங்கும் பரபரப்பான சந்தை இது.

7. மூன்று தலை தென்னை மரம் - 3 headed coconut tree

Payanam Articles
3 headed coconut tree

இயற்கையின் ஒரு விசித்திரமான படைப்பான மூன்று தலைகளைக் கொண்ட ஒரு தென்னை மரம், Kolovai  பகுதிக்கு அருகில் உள்ளது.

8. பங்காயிமோட்டு - Pangaimotu தீவு

Payanam Articles
Pangaimotu தீவு

ஸ்நோர்கெலிங் மற்றும் நீச்சலுக்கு ஏற்ற ஒரு சிறிய அமைதியான தீவு, டோங்காதாபுவில் இருந்து படகுமூலம் செல்லலாம்.

9. ஹம்ப்பேக் - Humpback திமிங்கலங்களைப் பார்ப்பது

Payanam Articles
Humpback

ஜூலை முதல் அக்டோபர் வரை இந்தப் பகுதியில் திமிங்கலங்களுடன் நீந்தும் தனித்துவமான அனுபவத்தைப் பெறலாம்.

10. Royal Tombs - Mala'ekula

Payanam Articles
Royal Tombs - Mala'ekula

டோங்கா அரசு குடும்ப உறுப்பினர்கள் அடக்கம் செய்யப்பட்ட புனித இடம் இது. முஆ(Mu'a) பகுதியில் உள்ள லபாஹா கிராமத்தில் பண்டைய அரசர்களின் பிரமிடு போன்ற அடுக்கு கல்லறைகளைக் காணலாம். இது நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வெளியில் இருந்து மட்டுமே பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

டோங்காதாபுவின் அமைதியான, நிதானமான வாழ்க்கை முறை மற்றும் அதன் தனித்துவமான கலாச்சாரத்தை அனுபவிக்க இந்த இடங்கள் சிறந்த தேர்வாகும். மே முதல் அக்டோபர் வரையிலான வறண்ட காலமே இந்த தீவிற்கு செல்ல சிறந்த நேரமாகும்.

எப்படி செல்வது?

நியூசிலாந்து (ஆக்லாந்து), ஆஸ்திரேலியா (சிட்னி), பிஜி அல்லது சமோவா வழியாக விமானம் மூலம் செல்வதே சிறந்த வழியாகும். பிரதான தீவான டோங்காதாபுவில் உள்ள புவாமோட்டு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி பின்னர் உள்நாட்டு விமானங்கள் அல்லது படகுகள் மூலம் மற்ற தீவுகளுக்கு செல்லலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com