மேகங்கள் முத்தமிடும் மலைக்கிராமம்: காந்தலூர் பயண அனுபவம்!

Kandalur travel experience
Kandalur travel experience
Published on

சுற்றுலா என்றாலே பசுமையான, குளுமையான, இயற்கையோடு இணைந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்றே மனம் விரும்பும். அப்படி ஒரு இடம் தான் காந்தலூராகும். (Kandalur travel experience) இவ்விடத்தை ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ என்றும் அழைப்பதுண்டு. 12 வருடத்திற்கு ஒரு முறையே பூக்கக்கூடிய நீலக்குறிஞ்சி மலருக்கும் இவ்விடம் பிரசித்தி பெற்றதாகும்.

காந்தலூர் கிராமம், கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலுள்ள தெய்விக்குளம் தாலுக்காவில் உள்ளது. இந்த கிராமம் மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விடத்தின் வானிலையும் மற்றும் அழகிய காட்சிகளும் நிறைய சுற்றுலாப்பயணிகளை இவ்விடத்திற்கு கவர்ந்திழுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. செப்டெம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் இந்த கிராமத்திற்கு வருவது சிறந்ததாகும். அந்த சமயத்தில் கந்தலூர் கிராமம் மிக அழகாகவும், ரம்மியமாகவும் காட்சித்தரும் என்று கூறுகிறார்கள்.

காந்தலூர் அதிகப்படியாக பயிர் விளைவிப்பதற்கு பிரசித்தி பெற்ற இடமாகும். தென் இந்தியாவில் ஆப்பிள் விளைவிக்கும் ஒரே இடம் காந்தலூர் மட்டுமேயாகும். அது மட்டுமில்லால் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்ச், பிளம்ஸ், நெல்லிக்காய், பீச் போன்ற பழங்களை உற்பத்தி செய்கிறது.

காந்தலூர்- மறையணூர்-மூணார்  தேசிய நெடுஞ்சாலை NH 85யுடன் இணைக்கிறது.

காந்தலூர் கிராமம் மழை மறைவு பிரதேசமாகும். இது மறையூரில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலையிலே உள்ளது. காந்தலூர் பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கேரளாவின் மற்ற பகுதிகளில் கூட விளையாத பழங்கள் இங்கே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனைமுடி சோலை தேசிய பூங்கா அல்லது மன்னவன் சோழா என்று அழைக்கப்படும் பசுமைமாறக்காடு இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டிச்சேரி அணை, குலச்சிவயல் பாறை, கீழந்தூர் அருவி, இரச்சில்பாறை அருவி மற்றும் ராமர் குகைக்கோவில் பிரசித்தி பெற்ற இடங்களாகும்.

காந்தலூரில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் என்றால், அது புத்தூர் கிராமத்தில் உள்ள பொன்னம்மாவின் கடையேயாகும்.  இங்கே இன்னமும் பண்டம் மாற்றும் முறையிலே வியாபாரம் நடக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

இஞ்சி, கடுகு, பூண்டு, கொத்தமல்லி போன்றவற்றை வாங்கி கொண்டு அதற்கு பதில் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுப்பது வழக்கமாகும். 2016ல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடந்தபோது பொன்னம்மாவின் கடையால் இங்கிருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்புகள் ஏற்றடவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது.

இங்கே தனிச்சிறப்புடைய பழங்கள், காய்கறிகள், பூக்களை பயிரிடுகின்றனர். சுற்றுலாப்பயணிகளை தங்கள் தோட்டத்துக்குள்ளே அனுமதிக்கின்றனர். அவர்களின் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு பழம், காய்கறிகளை சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

ஆர்கானிக் காய்கறி வகைகளான பிரக்கோலி, தக்காளி, முட்டைகோஸ், காலிப்பிளவர், கேரட், பீன்ஸ் போன்றவையும் பயிரிடப்படுகின்றது.

இங்கே இருக்கும் பூண்டு அதன் சுவைக்காக பெயர் போனதாகும். இவ்விடத்தை ‘கேரளாவின் ஆப்பிள் கிராமம்’ என்று அழைப்பார்கள். இங்கிருந்தே பெரிய நகரமான கோழிக்கோடு, கொச்சின் போன்ற இடங்களுக்கு காய்கறிகளும், பழங்களும் கொண்டு செல்லப் படுகின்றது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள காந்தலூர் கிராமம் மழை மறைவு பிரதேசமாகும். இது மறையூரில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலையிலே உள்ளது. காந்தலூர் பழம் மற்றும் காய்கறிகளை உற்பத்தி செய்வதற்கு பிரசித்தி பெற்ற இடமாகும். கேரளாவின் மற்ற பகுதிகளில் கூட விளையாத பழங்கள் இங்கே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படியுங்கள்:
விசாகப்பட்டினத்தின் அழகிய கடலோரப் பயணம்!
Kandalur travel experience

ஆனைமுடி சோலை தேசிய பூங்கா அல்லது மன்னவன் சோழா என்று அழைக்கப்படும் பசுமைமாறக்காடு இங்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பட்டிச்சேரி அணை, குலச்சிவயல் பாறை, கீழந்தூர் அருவி, இரச்சில்பாறை அருவி மற்றும் ராமர் குகைக்கோவில் பிரசித்தி பெற்ற இடங்களாகும்.

காந்தலூரில் மிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் என்றால், அது புத்தூர் கிராமத்தில் உள்ள பொன்னம்மாவின் கடையேயாகும்.  இங்கே இன்னமும் பண்டம் மாற்றும் முறையிலே வியாபாரம் நடக்கிறது என்பது மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

இஞ்சி, கடுகு, பூண்டு, கொத்தமல்லி போன்றவற்றை வாங்கி கொண்டு அதற்கு பதில் அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுப்பது வழக்கமாகும். 2016ல் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடந்தபோது பொன்னம்மாவின் கடையால் இங்கிருக்கும் மக்களுக்கு பெரிதாக பாதிப்புகள் ஏற்றடவில்லை என்பது ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது.

இங்கே தனிச்சிறப்புடைய பழங்கள், காய்கறிகள், பூக்களை பயிரிடுகின்றனர். சுற்றுலாப்பயணிகளை தங்கள் தோட்டத்துக்குள்ளே அனுமதிக்கின்றனர். அவர்களின் தோட்டத்தை சுற்றி பார்த்து விட்டு பழம், காய்கறிகளை சுற்றுலா பயணிகள் வாங்கி செல்கின்றனர்.

ஆர்கானிக் காய்கறி வகைகளான பிரக்கோலி, தக்காளி, முட்டைகோஸ், காலிப்பிளவர், கேரட், பீன்ஸ் போன்றவையும் பயிரிடப்படுகின்றது.

இங்கே இருக்கும் பூண்டு அதன் சுவைக்காக பெயர் போனதாகும். இவ்விடத்தை ‘கேரளாவின் ஆப்பிள் கிராமம்’ என்று அழைப்பார்கள். இங்கிருந்தே பெரிய நகரமான கோழிக்கோடு, கொச்சின் போன்ற இடங்களுக்கு காய்கறிகளும், பழங்களும் கொண்டு செல்லப் படுகின்றது.

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கந்தலூரில் பட்டிச்சேரி அணை உள்ளது. பட்டிச்சேரி அணை பம்பர் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நோக்கம் என்னவென்றால், பம்பர் ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

இரச்சில்பாறை அருவி கோவில்கடவு என்னும் இடத்தில் இருக்கிறது. இந்த அருவியிலிருந்து தண்ணீர் 300 அடி உயரத்திலிருந்து வந்து விழுகிறது. இந்த அருவியில் குளிப்பது மழையிலே குளித்த அதே உணர்வை கொடுக்கும். இங்கே வருவது நம் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

ஆனைமுடி சோலை தேசிய பூங்கா அங்கிருக்கும் எண்ணற்ற தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பெயர் போனதாகும்.

62 மர வகைகளும், 174 செடி வகைகளும், 39 கொடி வகைகளும், 13 வகை பறவைகள், 100 வகை பட்டாம்பூச்சிகள் என இங்கே உள்ளது.

இதையும் படியுங்கள்:
விடுமுறையை இனிதாக்கும் விசாகப்பட்டினம்!
Kandalur travel experience

மேலும் காந்தலூர் இங்கேயிருக்கும் ஸ்ரீ ராமரின் குகை கோவிலுக்கு பிரசித்தி பெற்றதாகும். இங்கே ஸ்ரீ ராமரின் கால் தடம் பொறிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இக்குகையின் நுழைவாயிலில் அனுமனின் சிலை குகையை தாங்கிப்பிடிப்பது போல அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சில நாட்களில் மட்டுமே பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையை மறந்து சில நாட்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்குக்கெல்லாம் ஏற்ற இடமாக காந்தலூர் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். காந்தலூரில் பட்டிச்சேரி அணை உள்ளது. பட்டிச்சேரி அணை பம்பர் ஆற்றில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் நோக்கம் என்னவென்றால், பம்பர் ஆற்று நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

இரச்சில்பாறை அருவி கோவில்கடவு என்னும் இடத்தில் இருக்கிறது. இந்த அருவியிலிருந்து தண்ணீர் 300 அடி உயரத்திலிருந்து வந்து விழுகிறது. இந்த அருவியில் குளிப்பது மழையிலே குளித்த அதே உணர்வை கொடுக்கும். இங்கே வருவது நம் மனதிற்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.

ஆனைமுடி சோலை தேசிய பூங்கா அங்கிருக்கும் எண்ணற்ற தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும் பெயர் போனதாகும்.

62 மர வகைகளும், 174 செடி வகைகளும், 39 கொடி வகைகளும், 13 வகை பறவைகள், 100 வகை பட்டாம்பூச்சிகள் என இங்கே உள்ளது.

இதையும் படியுங்கள்:
பகல் நேர ரயில்களை விட இரவு ரயில்கள் வேகமாக செல்வதன் காரணம் என்ன?
Kandalur travel experience

மேலும் காந்தலூர் இங்கேயிருக்கும் ஸ்ரீ ராமரின் குகை கோவிலுக்கு பிரசித்தி பெற்றதாகும். இங்கே ஸ்ரீ ராமரின் கால் தடம் பொறிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இக்குகையின் நுழைவாயிலில் அனுமனின் சிலை குகையை தாங்கிப்பிடிப்பது போல அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு சில நாட்களில் மட்டுமே பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறையை மறந்து சில நாட்கள் இயற்கையோடு இயற்கையாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்குக்கெல்லாம் ஏற்ற இடமாக காந்தலூர் இருப்பது சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

-நான்சி மலர்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com