Kolabha fort: அரேபியன் கடற்கரையில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோட்டை!

Kolabha fort
Kolabha fort
Published on

அரேபியன் கடற்கரையில் உள்ள மலைக்கருகில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட கோட்டைதான் கொலாபா கோட்டை. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோட்டை தற்போது பலரும் விரும்பி செல்லும் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது.

பண்டைய காலத்து இராணுவ கோட்டையாக விளங்கிய இந்தக் கோட்டைக்கு கொலாபா கோட்டை, குலாபா கோட்டை மற்றும் அலிபாக் கோட்டை போன்ற பெயர்கள் உள்ளன. இந்தக் கோட்டை மும்பையிலிருந்து சுமார் 35கிமீ தொலைவில் மகாராஷ்திராவின் கொங்கன் கடற்கரையில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோட்டை மராட்டிய மன்னன் சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் முக்கிய கடற்படை நிலையமாக இருந்துள்ளது.

ஆகையால், போர் காலங்களில் மராட்டியர்களுக்கு இந்தக் கோட்டையே மிகவும் முக்கியத்தளமாக இருந்திருக்கிறது. முக்கியமாக கடல் வழி போர்களுக்கு. இந்தக் கோட்டையின் சுவர் சுமார் 25 அடி உயரம் கொண்டது. இங்கு 1759ம் ஆண்டு சித்திவிநாயக கோவிலும் கட்டப்பட்டது. அதேபோல் ஹஜி கமலுதின் என்ற தர்காவும் கோட்டையை ஒட்டி கட்டப்பட்டுள்ளது.

சரியாக 1680ம் ஆண்டு இந்தக் கோட்டை கட்டும் பணி சிவாஜியால் தொடங்கப்பட்டது. ஆனால், 1681ம் ஆண்டு ஜுன் மாதம் சிவாஜியின் தந்தையின் இறப்பினால், இந்தக்கோட்டை கட்டும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் 1713ம் ஆண்டு பேஷ்வா பாலாஜி விஷ்வநாத்துடன் போட்ட ஒரு ஒப்பந்தத்தால், இந்த கோட்டை Sarkhel Kanhoji Angre –டம் கைமாற்றப்பட்டது.

அதன்பின்னர் அந்தக் கோட்டை பிரிட்டிஷார்களின் பல தாக்குதல்களை எதிர்க்கொண்டது. குறிப்பாக 1721ம் ஆண்டு பிரிட்டிஷார்களும் போர்த்துகீசியர்களும் இணைந்து அந்தக் கோட்டையைத் தாக்கினார்கள். இந்தத் தாக்குதலில் சுமார் 6 ஆயிரம் போர்த்துகீசியர்களுடன் 3 பிரிட்டிஷ் கப்பல்கள் இணைந்து அந்தக் கோட்டையை தாக்கினார்கள். ஆனால், அப்போதும் அந்தக் கோட்டையை அவர்களால் கைப்பற்றவே முடியவில்லை.

அதன்பின்னர் 1787ம் ஆண்டு எரிபொருட்களைப் பயன்படுத்தி கோட்டையை சிதைக்கத் திட்டமிட்டனர். அதன்விளைவாக கோட்டையின் ஒரு பகுதி முற்றிலும் சேதமானது. அந்த கோட்டையிலிருந்து அவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட மரச்சாமான்களையும், விலைமதிப்பற்ற கற்களையும் அவர்கள் ஏலத்தில் விற்று காசுப் பார்த்தார்கள்.

இதையும் படியுங்கள்:
2024 சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு... யாருக்கு தெரியுமா?
Kolabha fort

கோட்டையிலிருந்து கடலுக்கு செல்லும் வழிகளும் மழைக்காலங்களில் இடுப்பளவு நீர் தேங்கும் பகுதிகளும் உள்ளன. இந்தக் கோட்டையின் சுவர்களில் மயில், யானை, புலி போன்ற சிற்பங்களைப் பார்க்கலாம்.

இப்போது இது பலரும் விரும்பிச் செல்லும் சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. அந்தக் கோட்டையில் இருக்கும் பிரிட்டிஷார்களின் பீரங்கிகள், கோட்டை சுவற்றின் சிற்பங்கள், கடலின் அழகான காட்சி, சேதமாக்கப்பட்ட கட்டடங்களின் அழகு ஆகியவை இன்னும் சுற்றுலா வாசிகளை கவர்ந்து வருகிறது.

மழைக்கால நேரங்களில் இந்தக் கோட்டைக்கு செல்வது மிகவும் புதுமையான மற்றும் அழகான அனுபவமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com