2024 சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு... யாருக்கு தெரியுமா?

Sahitya Akademi Award
Sahitya Akademi Award
Published on

2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு, புகழ்பெற்ற சாகித்ய அகாடமி விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இளைஞர்களின் சிறந்த படைப்புகளுக்கும் (யுவ புரஸ்கார்), சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்கும் (பால சாகித்ய புரஸ்கார்) சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

தமிழ் மொழியில் விஷ்ணு வேந்தர் என்ற சிறுகதை தொகுப்பிற்காக லோகேஷ் ரகுராமனுக்கு 2024ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ரகுராமன் மே 23 ஆம் தேதி 1990 பிறந்தவர். இவர் இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரது முதல் சிறுகதை தொகுப்பு 'விஷ்ணு வந்தார்'. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார்.

தமிழ், பெங்காலி, ஆங்கிலம்,அசாமி, குஜராத்தி, இந்தி, கன்னடம், கஷ்மீரி, கொங்கனி, மைத்திலி, மலையாளம், ராஜஸ்தானி, உருது, தெலுங்கு, உள்ளிட்ட 23 மொழிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழிக்கான விருது பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
"பாக்கியா வரக்கூடாது" கடுப்பான ராதிகாவிற்கு கிடைத்த பரிசு... பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
Sahitya Akademi Award

இதேபோல யுமா வாசுகி எழுதிய தன்வியின் பிறந்த நாள் என்ற கதை தொகுப்பிற்காக தமிழ் மொழிக்கான பால சாகித்ய புரஷ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் யூமா வாசுகி. இவரது இயற்பெயர் தி.மாரிமுத்து. மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர். 2017-ம் ஆண்டு, மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கிண்ட இதிகாசம் நூலை தமிழில் மொழிபெயர்ப்பு செய்ததற்காக சாகித்ய அகாடமி விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

ஏற்கனவே, மலையாள எழுத்தாளர் ஓ.வி.விஜயன் எழுதிய கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை 'கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார் யூமா வாசுகி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com