ஆன்மீகமும் சுற்றுலாவும் இணையும் மகிழ்ச்சியின் நகரம்: கொல்கத்தாவில் தரிசிக்க வேண்டிய தலங்கள்!

கொல்கத்தாவின் காளி கோவில்கள், பேளூர் மத், ஜெயின் ஆலயம் முதல் விக்டோரியா நினைவிடம், இந்திய அருங்காட்சியகம், எக்கோ பார்க் வரை ஆன்மீகமும் வரலாறும் நவீன சுற்றுலாவும் கலந்த அனுபவப் பயணம்.
kolkata-spiritual-tourism
kolkata-spiritual-tourism
Updated on

ந்தியாவின் மகிழ்ச்சியின் நகரம் என்று அழைக்கப்படும் கொல்கத்தாவின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. அங்கு நீங்கள் கட்டாயம் தரிசிக்க வேண்டிய ஆன்மீகத்தலங்கள்  மற்றும் சுற்றுலாத்தலங்கள் இவை. 

தட்சினேஸ்வர் காளி கோவில் (Dakshineswar Kali Temple)
​இது கொல்கத்தாவின் மிக முக்கியமான ஆன்மீக அடையாளம். 1855-ஆம் ஆண்டு ராணி ராஷ்மோனியால் கட்டப்பட்டது. ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் 12 சிவன் சன்னதிகளும், கிருஷ்ணர்-ராதைக்கான ஆலயமும் உள்ளன. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இங்குதான் அர்ச்சகராக இருந்து தனது ஆன்மீகத் தேடலைத் தொடங்கினார்.

பேளூர் மத் (Belur Math)
​தட்சினேஸ்வர் கோவிலுக்கு நேர் எதிரே நதியின் மறுபுறம் அமைந்துள்ள இது, ராமகிருஷ்ண மிஷனின் தலைமையகம் ஆகும். சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட இந்த மடம், அனைத்து மதங்களின் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் இந்து, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ கட்டிடக்கலை பாணிகளின் கலவையாகக் கட்டப்பட்டுள்ளது. மிகவும் அமைதியான மற்றும் தியானத்திற்கு ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது.

காளிகாட் காளி கோவில் (Kalighat Kali Temple) இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சதி தேவியின் வலது கால் விரல்கள் விழுந்த இடமாக இது நம்பப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகள் பழமையான தற்போதைய கோயில், கொல்கத்தாவின் மிகவும் சக்திவாய்ந்த வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

பிர்லா மந்திர் (Birla Mandir)
​வெள்ளை பளிங்கு கற்களால் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட இந்த ஆலயம், கிருஷ்ணர் மற்றும் ராதைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இரவு நேரங்களில் விளக்கு ஒளியில் இந்த கோயில் மிக அழகாகக் காட்சியளிக்கும். இதன் கட்டிடக்கலையும், தூய்மையும் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

பரேஷ்நாத் ஜெயின் கோவில் (Pareshnath Jain Temple)
​வண்ணமயமான கண்ணாடி வேலைப்பாடுகள், அழகிய தோட்டங்கள் மற்றும் சிற்பங்களுடன் காட்சியளிக்கும் இந்த சமணக் கோவில் கொல்கத்தாவின் ஒரு ரகசிய பொக்கிஷம் போன்றது. இங்கு நிலவும் நேர்மறை ஆற்றல் மனதிற்கு மிகுந்த அமைதியைத் தரும்.

இந்திய அருங்காட்சியகம் (Indian Museum)
​இங்கு பண்டைய சிற்பங்கள், ஓவியங்கள், புதைபடிவங்கள் மற்றும் எகிப்திய மம்மி (Mummy) கூடக் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆர்வலர்களுக்கு இது ஒரு சொர்க்கம்.

இதையும் படியுங்கள்:
இமயமலையின் சொர்க்கம்: பூட்டானில் நீங்கள் தரிக்க வேண்டிய ரம்யமான இடங்கள்!
kolkata-spiritual-tourism

விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial)
​வெள்ளை பளிங்கு கற்களால் ஆன இந்த பிரமாண்டமான கட்டிடம் கொல்கத்தாவின் அடையாளமாகும். 1921-ல் திறக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், பிரிட்டிஷ் காலத்து ஓவியங்கள், சிலைகள் மற்றும் வரலாற்று ஆவணங்களைக் கொண்டுள்ளது. இதன் சுற்றியுள்ள பூங்காக்கள் நடைப்பயிற்சிக்கு மிகச்சிறந்தவை.

எக்கோ பார்க் (Eco Park)
​நவீன கொல்கத்தாவின் முக்கியமான சுற்றுலாத் தலமான இங்கு உலகின் ஏழு அதிசயங்களின் மாதிரிகள் (7 Wonders), ரோஜா தோட்டம் மற்றும் ஏரியில் படகு சவாரி செய்யும் வசதிகள் உள்ளன.

சயின்ஸ் சிட்டி (Science City)
அறிவியல் தொடர்பான பல்வேறு சோதனைகள், விண்வெளி தியேட்டர் மற்றும் டைனோசர் பூங்கா போன்றவை இங்கு மிகவும் பிரபலம்.

பிரின்செப் காட் (Prinsep Ghat)
​ஹூக்ளி நதிக்கரையில் அமைந்துள்ள இது ஒரு அழகான மாலை நேரச் சுற்றுலாத்தலம். இதன் அருகில் இருந்து 'வித்யாசாகர் சேது' பாலத்தின் அழகை ரசிக்கலாம். 

Payanam Articles
Victoria Memorial Hall

​பயணக் குறிப்பு:
தட்சினேஸ்வர் கோவிலில் இருந்து பேளூர் மத் செல்வதற்கு ஹூக்ளி நதியில் படகுப் பயணம் (Ferry ride) மேற்கொள்வது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். 

​கொல்கத்தாவில் பாரம்பரியமாக ஓடும் டிராம் (Tram) வண்டியில் பயணம் செய்வது ஒரு தனித்துவமான அனுபவமாகும். பார்க் ஸ்ட்ரீட் (Park Street) பகுதி உணவகங்களுக்கும் இரவு நேர கொண்டாட்டங்களுக்கும் பெயர் பெற்றது.

logo
Kalki Online
kalkionline.com