
தமிழ்நாட்டில் ஒரு மலை வாசஸ்தலத்தை தேடும்போது கோத்தகிரியின் ரம்யமான இயற்கை அழகை வழங்குவதோடு, மட்டுமல்லாமல் உங்களின் பயணத்திற்கும் அதிக கூட்டம் இல்லாத ஒரு சுற்றுலா தலமாக விளங்குகிறது. பசுமையான புல்வெளிகள், பரந்த தேயிலைத்தோட்டங்கள், குளிர்ச்சியான காலநிலை ஆகியவற்றால் ஒவ்வொரு பார்வையாளர்களையும், நம்மையும் ஈர்க்கும்.
கோத்தகிரியில் பார்க்க வேண்டிய சிறந்த இடங்களில் இந்த நீர்வீழ்ச்சியும் ஒன்றாகும். இதனை உயிலட்டி நீர்வீழ்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. நீலகிரியின் முதன்மையான நீர்வீழ்ச்சிகளின் இதுவும் ஒன்றாகும். பசுமையான தேயிலை, காப்பி தோட்டங்களால் சூழப்பட்ட இந்த உயர்ந்த நீர்வீழ்ச்சியின் நீர் கீழ் நோக்கிப் பாய்ந்து பிரமிக்க வைக்கும் காட்சிகளை நாம் பார்க்கலாம். மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சி முழு வீச்சில் கொட்டும். ஆரஞ்சு பூக்களால் பள்ளத்தாக்கு பூத்துக் குலுங்குவதை பார்க்க மிக அழகாக இருக்கும்.
கோத்தகிரி சுற்றுலா தலங்களில் ஒன்றான கேத்தரின் நீர்வீழ்ச்சி மைசூர் மாவட்ட ஆட்சியர் ஜி. டி. காக்பர்னின் துணைவியார் பெயரிடப்பட்டது. இது கோத்தகிரிக்கு அருகில் அமைந்துள்ளது. இது கண்கவர் நீர்வீழ்ச்சி ஆகும். 250 அடிக்கு மேல் உயரத்திலிருந்து விழும் இந்த அழகான நீர்வீழ்ச்சி நீலகிரி மலைகளின் பசுமையான பசுமைக்கு மத்தியில் ஒரு மயக்கும் காட்சியை நமக்கு வழங்குகிறது.
லாங்வுட் ஷோலா என்பது பல்வேறு தாவரங்கள், பறவைகளை, வன விலங்குகளை இங்கு பார்க்கலாம். இது ஒரு வனக்காப்பகம். அமைதியான இயற்கை சூழல் நிறைந்த இடம்.
1794 மீ உயரத்தில் அமைந்துள்ளது இந்த ரங்க சாமி தூண். இது பிரபலமான இடங்களில் இது புனிதமான இடமாக கருதப்படுகிறது. இது மலையற்றத்திற்கு ஏற்ற இடமாகும்.
கோடநாட்டில் பசுமையான பள்ளத்தாக்குகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பனிமூட்டம் சூழ்ந்த மலைகளின் பரந்த காட்சிகளை பார்க்கலாம். இயற்கையின் அழகு அதன் முழுமையாக கண்டு ரசிக்க இது ஒரு அற்புதமான இடமாக திகழ்கிறது.
கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது நேரு பூங்கா. அமைதியான மற்றும் சாந்தமான சூழலையும் அழகாக இங்கு பார்க்கலாம். அங்கே பராமரிக்கப்பட்ட புல்வெளிகள், வண்ணமயமான பூச்செடிகள் பல வகையான மரங்கள், மரம் செடிகளை கொண்ட இந்த பூங்காவை சுற்றி பார்க்கலாம்.
கோத்தகிரியில் தங்கி ஒரு நாளிலும் பார்க்கலாம். 2 அல்லது 3 நாட்களிலும் பார்க்கலாம். குடும்பத்தோடு சென்று பாருங்கள்.