மேகங்கள் தொடும் குந்தாத்ரி மலை: அகும்பே அருகே ஒளிந்திருக்கும் சொர்க்கம்!

அகும்பே அருகே பசுமை காடுகள், பாறை குளங்கள், 360 டிகிரி வியூபாயிண்ட், வாராகி அணை காட்சி என இயற்கை ஆர்வலர்களை கவரும் குந்தாத்ரி சுற்றுலா சொர்க்கம்
A top view of kundadri hill|குந்தாத்ரி மலை
குந்தாத்ரி மலைAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் அகும்பே அருகே அமைந்துள்ள குந்தாத்ரி மலை, இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அழகை ரசிக்கவும், ஆன்மீக அமைதியைத் தேடுபவர்களுக்கும் ஒரு சிறந்த இடமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் உள்ளது. பசுமையான காடுகள் மற்றும் பழமையான சமணக்கோவிலைக் கொண்டுள்ள இந்த மலை, இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மலையேற்ற பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும்.

குந்தாத்ரி மலைகள் அகும்பெயிலிருந்து சுமார் 17 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பயண வழியே ஒரு சிறந்த தனி அனுபவமாகும். இந்தச்சாலை மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடர்ந்த மழைக் காடுகளின் ஊடாக வளைந்து செல்கிறது. இந்த ரம்யமான மலை பாதையில் வாகனம் ஓட்டுவது சிறந்த அனுபவமாக இருந்தாலும் சாலைகள் கரடு முரடாகவும், அதிகாலையில் மூடுபனிகள் நிறைந்த வானிலையும், கூர்மையான வளைவுகளும் இருப்பதால் கவனம் தேவை.

புனித யாத்திரை மேற்கொண்டாலும் சரி அல்லது ஒரு சாகசப் பயணத்தின் மூலம் அப்பகுதியின் இயற்கை அழகை ரசிக்க விரும்பினாலும் சரி குண்டாத்ரி ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலையேற்றப் பயணங்களுக்கு பெயர் பெற்ற குன்று இந்த குண்டாத்ரி மலை. இங்கு பார்க்க வேண்டிய இடங்கள்:

ஸ்ரீ பார்ஷ்வநாதர் ஜெயின் கோவில்:

மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க கோவில் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் ஜைனர்களின் 23வது தீர்த்தங்கரரான பார்ஷ்வநாதரின் திருவுருவம் அமைந்துள்ளது. இங்குள்ள இயற்கை எழிலும், அமைதியும் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும்.

a beautiful pond|குந்தாத்ரி மலை
குந்தாத்ரி மலைAI image

இயற்கை குளங்கள் (பாறை குளங்கள்):

கோவிலுக்கு அருகில் பாறைகளால் உருவான இரண்டு சிறிய இயற்கையான குளங்கள் இந்த மலையின் அழகை மேலும் கூட்டுகின்றன. இந்த இயற்கைக் குளங்களில் அழகிய தாமரை மலர்களையும் மீன்களையும் கண்டு ரசிக்கலாம்.

சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்:

மலை உச்சி 360 டிகிரி கோணத்தில் பரந்து விரிந்தக் காட்சிகளை வழங்குவதால், ஒரே இடத்தில் சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

வாராகி அணையின் நீர்த்தேக்கம்:

மலை உச்சியில் நின்றபடி வாராகி அணையின் நீர்த்தேக்கப் பகுதியையும், சுற்றிலும் உள்ள பசுமையான பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம்.

மலையேற்றம் (Trekking):

சாகசப் பிரியர்களுக்காக அடிவாரத்தில் இருந்து அடர்ந்த காடுகளின் வழியாக மலை உச்சிக்குச் செல்லும் மலையேற்ற பாதைகளும் உள்ளன. அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் கரடுமுரடான கற்கள் நிறைந்த பாதைகள் மலையேற விருப்பம் உள்ளவர்களுக்கு ஏற்றவை. அதிகாலையில் மலையேற்றத்தை தொடங்குவது உகந்தது.

360 டிகிரி வியூபாயிண்ட்:

கடல் மட்டத்திலிருந்து 3,200 அடி உயரத்தில் இருப்பதால் சுற்றிலும் உள்ள பசுமையான காடுகள், பள்ளத்தாக்குகள் மற்றும் மலைகளின் முழுமையான காட்சியை இங்குள்ள Kundadri Betta Viewpoint பகுதியில் இருந்து கண்டு ரசிக்கலாம்.

அருகில் பார்க்க வேண்டிய இடங்கள்:

பர்கானா நீர்வீழ்ச்சி (Barkana Falls) குந்தாத்ரி மலையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பசுமையான காடுகளுக்கு நடுவே காணப்படும் இந்த அருவி சிறந்த ஒரு சுற்றுலாத்தலமாகும்.

அகும்பே மழைக்காடுகள் (Agumbe Rainforests):

'தென்னிந்தியாவின் சிரப்புஞ்சி' என்று அழைக்கப்படும் அகும்பே, அடர்ந்த மழைக்காடுகள், வளைந்து செல்லும் பாதைகள் மற்றும் பரந்த பள்ளத்தாக்கு காட்சிகள் போன்றவற்றால் பெரிதும் அறியப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
மிசோரம்; கடுகு ஏரி முதல் ஃபாங்புய் சிகரம், ஃபல்கான் கிராமம் வரை இயற்கையும் கலாச்சாரமும்!
A top view of kundadri hill|குந்தாத்ரி மலை

செல்வதற்கு ஏற்ற காலம்:

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் குந்தாத்ரி மலைக்குச் செல்ல ஏற்றவை. மலைக்கோவில் காலை 6 மணிக்குப் பிறகே திறக்கப்படும். அதிகாலை பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக வாகனம் ஓட்டுவது அவசியம்.

எப்படிச் செல்வது?

அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையமாகும். இது சுமார் 126 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ரயிலில் செல்வதாக இருந்தால் ஷிமோகா ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தீர்த்தஹள்ளிக்கு செல்லும் பேருந்தில் ஏறி மலையேற்றப் பாதையை அடையலாம்.

இந்த வழிகாட்டியை வாசிப்பதன் மூலம், அன்றாட நகர வாழ்க்கையின் அழுத்தங்களில் இருந்து விடுபட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் மன அமைதியையும் ஆன்மீகப் புத்துணர்ச்சியையும் பெறுவதற்கான ஒரு தெளிவான பயணத் திட்டத்தை நீங்கள் வடிவமைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com