லடாக் பயண தொடர் 1 - லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை இல்லை என்பது தெரியுமா மக்களே?

Ladakh Travel Series
Ladakh
Published on

இந்தியா - வாய்பிளக்க வைக்கும் சுற்றுலாத் தலங்தளுக்குப் பஞ்சமில்லாத நாடு. மலைகள், பாலைவனங்கள், பள்ளத்தாக்குள், பனிமலைகள், காடுகள், நீர்நிலைகள் என்று 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?'

உலக அளவில் பெரிய Tourist Attraction இடமாக இந்தியா இருக்கிறது. புகழ்பெற்ற சுற்றுலா தலங்களின் பட்டியல் கொஞ்சம் நீளம்‌தான் நம்மிடம். ஆனால் இந்தக் கட்டுரை இந்தியர்களுக்கே அதிகம் தெரியாத, இந்தியர்களே அதிகம் போகாத ஒரு இடம் பற்றித்தான்

கஷ்மீரின் கிழக்குப் பகுதியாய் இருந்து 2019ல் அங்கிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு நாட்டின் எட்டாவது யூனியன் பிரதேசமாக  உருவாக்கப்பட்டிருக்கும் லடாக் பகுதியைச் சுற்றிப் பார்க்கலாமா..

Ladakh
Ladakh

லடாக் மிக நீண்ட வரலாறு கொண்ட பகுதி. புதிய கற்காலத்தில் துவங்குகிறது லடாக்கின் வரலாறு என்றால் இதன் தொன்மையைப் புரிந்து கொள்ளுங்களேன். 

1947ல் இருந்தே இப்பகுதிக்காக இந்தியா - பாகிஸ்தான் இடையே பிரச்சினை இருந்துவருகிறது. 1959ல் இருந்து சீனாவும் இப்பகுதிக்காக அவ்வப்போது நம்மோடு உரசிவருகிறது. 

கிழக்கில் திபெத்துடனும், தெற்கில் இமாச்சலப் பிரதேசத்துடனும், மேற்கில் ஜம்மு காஷ்மீருடனும், வடமேற்கில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பால்டிஸ்தானின் கில்கித் பகுதியுடனும் வடக்கில் காரகோரம் கணவாயோடும் தனது எல்லைகளைப் பகிர்கிறது லடாக். இதுவே நம் நாட்டின் மிகப்பெரிய யூனியன் பிரதேசமாகும். மிகக் குறைந்த அளவு மக்கள் வாழும் யூனியன் பிரதேசமும் இதுவே தான். துணை நிலை ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டப்பேரவை இல்லை

வடக்கில் சியாச்சின் பனிச்சிகரம் வரையிலும் தெற்கில் இமயமலை வரையிலும்  இது நீண்டிருக்கிறது. இந்திய ராணுவத்தின் திடமான இருப்பு இவ்விடம் வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கே 7 பெரிய மாவட்டங்கள் உள்ளன. லே மாவட்டமும் கார்கில் மாவட்டமும் இதன் தலைநகரங்கள். கடல் மட்டத்திலிருந்து 8370அடி உயரத்தில் ஆரம்பித்து 25400அடி உயரம் வரை லடாக் நிமிர்ந்து நிற்கிறது. 

லடாக்கி மக்களில் பெரும்பான்மையானோர் (46%) ஷியா பிரிவு முஸ்லிம்கள். அடுத்த பெரிய மதமாக திபெத்திய-பௌத்தம் இருக்கிறது (40%). இந்துக்கள் இங்கே சிறுபான்மை தான் (12%). 

இதையும் படியுங்கள்:
பூமியின் கடைசி நாடு எங்க இருக்கு தெரியுமா?
Ladakh Travel Series

லடாக்கில் லே தான் பெரிய மாவட்டம்‌. அடுத்த பெரிய மாவட்டம் கார்கில். லடாக்கி, புர்கி, பால்டி உள்ளிட்ட நான்கு மொழிகள் இங்கே புழக்கத்தில் உள்ளன. சங்-பா இன நாடோடிகள் லடாக் மலைகளின் உயரங்களில் வாழ்கிறார்கள்.

Ladakh Rivers
Ladakh Rivers

சிந்து, ஷயோக், நூப்ரா, ஸன்ஸ்கர், ஸுரூ, த்ராஸ், கால்வன் ஆகிய இமயமலை ஆறுகள் இங்கே பாய்ந்தோடுகின்றன. நாட்டின் உயரமான பீடபூமி இது தான். உயரமான பாலைவனமும் இது தான். உயரமான பள்ளத்தாக்கும், உயரமான சமவெளியும் இதுவே தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஐந்து லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து ரசித்துவிட்டுப் போகும் லடாக் பகுதியைச் சுற்றிப் பார்க்கலாமா..

சுற்றுலாவைத் துவங்கும் முன்னர் சில அதி முக்கிய மருத்துவக் குறிப்புகளைத் தெரிந்துகொண்டுவிடலாம். சுற்றுலாவுக்கு எதற்கு மருத்துவக் குறிப்புகள் என்று யோசிக்கிறீர்களா..? விஷயம் இருக்கிறது !

தொடர்ந்து பயணிப்போம்...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com