அரபிக் கடலில் இருக்கும் ஒரு அழகான தீவு லட்சத்தீவு. இங்கு நீங்கள் வித்தியாசமான கலாச்சாரத்தைப் பார்க்கலாம். லட்சத்தீவில் கடற்கரை, வெள்ளை மணல்கள் போன்ற இயற்கை வளங்கள் ஒரு சிறந்த அனுபவத்தை தரும்.
சென்னையிலிருந்து லட்சத்தீவு செல்ல கொச்சினைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். சில விமானங்களில் கொச்சின் வரை சென்று வேறு விமானத்தில் மாற வேண்டும். சில விமானங்கள் நேரடியாக லட்சத்தீவு செல்வதுபோலத்தான் இருக்கும். விமானத்தின் மூலம் லட்சத்தீவு செல்ல 8 ஆயிரம் முதல் விமான கட்டணம் இருக்கும். இந்த பயணம் சுமார் 2 ½ மணி நேரம் ஆகும். இதுவே நீங்கள் ரயில் மூலம் செல்ல வேண்டுமென்றால் 38,000 முதல் 40 ஆயிரம் வரையாகும். மேலும் அங்கு செல்வதற்கு 31 மணி நேரமாகும்.
லட்சத்தீவு விமான கட்டணம் 8 ஆயிரம் இல்லாமல் ஒரு முழு நான்கு பகல் மற்றும் ஐந்து இரவு பயணத்திற்கு 23 ஆயிரம் வரையாகும்.
அந்த வகையில் சென்னையிலிருந்து லட்சத்தீவிற்கு நான்கு நாள் பயணத்தைப் பற்றி பார்ப்போம்.
முதல் நாள் சென்னை விமான நிலையத்திலிருந்து அகாட்டி விமான நிலையம் சென்றடைய வேண்டும். லட்சத்தீவில் உள்ள ஒரே விமான நிலையம் அகாட்டி. அகாட்டியில் அந்த இடத்திற்கென குறிப்பிட்ட கலாச்சாரம், உணவு வகைகள் இருக்கும். முதல் நாள் முழுவதும் அகாட்டி கடற்கரையிலும் அங்குள்ள மக்களிடமும் நேரத்தை செலவிடலாம்.
இரண்டாம் நாள் காலை பங்கரம் (Bangaram) தீவுக்கு படகு மூலம் லட்சத்தீவு ஏரியின் அழகை ரசித்துக்கொண்டே செல்லலாம். ஒரு மணி நேரம் படகு சவாரி செய்தால் கடலில் இருக்கும் பல வகையான உயிரினங்களைப் பார்க்கலாம். பங்காரம் தீவில் உள்ள ப்ரிஸ்டின் கடற்கரை மிகவும் பிரபலமானது. பிறகு பங்காரத் தீவிலிருந்து படகு மூலமே தின்னக்கர் தீவுக்கு செல்லலாம். அங்கு அழகான சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்து விட்டு அகாட்டி திரும்பலாம்.
மூன்றாவது நாள் காலை அகாட்டி தீவில் நீர் விளையாட்டுகள் விளையாடிய பின்னர் மதியம் போல் கல்பேனி தீவிற்கு செல்லலாம். அங்கு செல்ல 45 நிமிடங்கள் படகு சவாரி செய்ய வேண்டும். அங்கு மாலை முழுவதும் நேரத்தை களித்துவிட்டு சூர்ய அஸ்தமனம் பார்த்துவிட்டு போட்டோ எடுத்துவிட்டு திரும்பலாம்.
நான்காம் நாள் காலை உணவுக்குப் பின் இறுதியாக நீங்கள் தங்கியிருந்த விடுதியை பார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு செல்லலாம்.
இந்த நான்கு நாள் பயணத்தில் இரண்டு நாள் நன்றாக சுற்றிப் பார்த்துவிட்டு முதல் நாள் மற்றும் நான்காம் நாள் அங்குள்ள மக்களின் கலாச்சாரத்தையும் உணவு வகைகளையும் நன்றாக தெரிந்துக்கொள்ளலாம். இந்த நான்கு நாள் பயணம் நிச்சயம் உங்களுக்கு ஒரு புது அனுபவமாகத்தான் இருக்கும்.