கோடை வெயிலை தணிக்க தமிழகத்தில் இருக்கும் இந்த தீவுக்கு போகலாம் வாங்க!

குருசடை தீவு
குருசடை தீவு

ந்த கோடை வெயிலை சமாளிக்க குடும்பத்துடன் ‘குளுகுளு’ இடத்திற்கு போகணுமா? அதுவும் உங்க பட்ஜெட்ல இருக்கணும்னு நினைக்கிறீங்களா?  மாலத்தீவு, லட்சத்தீவுலாம் அதிக பட்ஜெட்டாக இருக்கும். நமக்கு ஏத்த மாதிரி ஏதாவது தீவு பக்கத்துல இருந்தால் நல்லாயிருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவில் நான் சொல்ல போகிற தீவு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். வாங்க அந்த தீவு எங்க இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.

நம்ம தமிழ்நாட்டில் காடுகள் நிறைந்த இந்த தீவுக்கு பெயர் குருசடை தீவு. மன்னார் வளைகுடாவில் இருக்கும் 21 தீவுகளில் இந்த தீவும் ஒன்றாகும். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாம்பன் பாலம் பக்கத்தில் குந்துக்கால் பீச்சிலிருந்து தான் இந்த தீவுக்கு போக முடியும். இது தமிழக வனத்துறையினரால் தீவிரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிருக்கும் 21 தீவுகளில் இந்த தீவை மட்டும் தமிழ்நாடு வனத்துறை சுற்றுலாத்தீவாக மாற்ற முயற்சித்து கொண்டிருக்கிறது.

இந்த தீவுக்கு சென்றுவர ஒரு நபருக்கு ரூபாய் 300 வசூலிக்கிறார்கள். காலை 7A.M to மதியம் 2 P.M வரை திறந்துள்ளது. இங்கு செவ்வாய் கிழமை விடுமுறை தினம். மழை, புயல் அல்லது வானிலையில் மாற்றம் ஏற்பட்டாலும் விடுமுறை அளித்து விடுவார்கள்.

இந்தத் தீவில் நிறைய அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது. இந்த தீவிற்கு டால்ஃபினை பார்ப்பதற்காகவே சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அதிர்ஷ்டம் இருந்தால் கண்டிப்பாக டால்ஃபின் கூட்டங்களை பார்க்க முடியும். இங்கே உலகில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட மெரைன் ரிசர்ச் சென்டர் (Marine Research Centre) உள்ளது . இந்த தீவில் நிறைய பவளப்பாறைகள் இருக்கிறது. அதெல்லாம் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு உதவுகிறது. மேசிவ் கோரல் (Massive coral) மற்றும் பிரேன்சிங் கோரல் (Branching coral) ஆகிய இரண்டு வகை பவளப்பாறைகளும் இங்கே அதிக அளவு உள்ளதால் மண் அரிப்பை தடுத்து பாதுகாக்கிறது.

குருசடை தீவு
குருசடை தீவு

இந்த குருசடை தீவில் கடல் உயிரினங்களினுடைய எலும்புகளை வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு காட்டுகிறார்கள். திமிங்கலத்துடைய எலும்புகளும் இங்கே இருக்கிறது. சங்குகளில், ஐவிரல் சங்கு போன்றவை இருக்கிறது. கடலிலே மிதக்க கூடிய கல் இருக்கிறது. அதை சுற்றுலாப்பயணிகள் தண்ணீரிலே போட்டு பரிசோதித்தும் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 10 உபயோகமான டிப்ஸ்!
குருசடை தீவு

இங்கிருக்கும் மெரைன் ரிசர்ச் சென்டரில் கடல்வாழ் உயிரினங்கள் கண்ணாடியில் பதப்படுத்தி வைக்கப் பட்டுள்ளது.

பிறகு அங்கிருந்து 1 கிலோ மீட்டர் நடந்து சென்றால், அந்த தீவினுடைய பின்பக்கத்தில் அழகான கடற்கரை இருக்கிறது. இந்த தீவில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், 7 வகை கடல் ஆமையில் 5 வகை இங்கு இருக்கிறதாம். அதனால் இந்த இடம் மிகவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் ரொம்ப குறைஞ்ச பட்ஜெட்டில் ஒரு அழகான தீவிற்கு குடும்பத்தோடு சென்று வர வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக குருசடை தீவுக்கு சென்று வரலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com