
மேகாலயாவில் உள்ள 24.5 கி.மீ நீளம் உள்ள கிம்புரி என்ற Sand stone குகை தான் உலகிலேயே நீளமான குகையாகும். சாகஸ பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்த இடம் சிறந்த இடமாகும். இது ஷில்லாங்கில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள Mawsynram எனும் இடத்தில் உள்ளது. மேகாலயாவில் கிழக்கு பகுதியில் உள்ள இந்த இடத்தில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. காடுகள், நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் என்று இந்த இடம் சொர்க பூமியாக திகழ்கிறது.
இந்த கிம்புரி குகையின் நுழைவாயில் குறுகியதாக உள்ளது. கதைகளில் வரும் குகை போன்ற அமைந்து கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இருக்கும் இடங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் குழுக்களாக இந்த குகைக்குள் செல்கிறார்கள். மேலும் தேவையான உபகரணங்களோடு செல்கிறார்கள்.
இந்த இடத்தில் தவளைகள், ஹண்டர்ஸ் Spiders, வௌவ்வால், மீன் இவற்றோடு 76 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய டயானோசரின் படிமங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள பெரிய பாறை வெள்ளை திமிங்கல பாறை என அழைக்கப்படுகிறது. அது திமிங்கல தோற்றத்தை ஒத்து இருக்கிறது.
ஆபத்தான பாறைகள் இருப்பதால் உள்ளே செல்வது கடினமாக உள்ளது. வெளியே எப்படிப்பட்ட சீதோஷ்ண நிலை இருந்தாலும் இதன் உள்ளே எப்போதும் 16 டிகிரி செல்சியஸ் தான் இருக்கும். ஆனால், பல துளைகள் இருப்பதால் காற்று வருவதால் பிராண வாயுவுக்கு குறையில்லை. மணல் கற்குகைகள் இங்கு காணப்படுவதற்கு காரணம் இங்கு அதிக அளவில் பெய்யும் மழை தான்.
இந்த குகையில் புகைப்படங்கள் எடுக்கக் கூடிய இயற்கை அழகு, மற்றும் பலவிதமான பறவைகள் நிறைந்துள்ளன. இந்த இடத்தின் அருகே பழங்குடி இனமான காசி மற்றும் ஜங்டியா இன மக்கள் வாழ்கிறார்கள்.
கிம்புரி அருகில் உள்ள இடங்கள் இயற்கை அழகு நிறைந்த க்ரெங் க்ரெங் நீர்வீழ்ச்சி, Mawjymbuin குகை. இந்த குகையின் உள்ளே இருக்கும் புற்றுப்பாறை சிவலிங்கத்தை போன்ற தோற்றத்தை ஒத்து இருக்கிறது.
சாகஸ பயணம் மேற்கொள்பவர்களுக்கு கிம்புரி ஒரு சிறந்த இடமாகும்.