

“என்ன பாஸ், சும்மா லோக்கல் டூர் அடித்து போர் அடிச்சு போச்சா? அப்ப வாங்க, நான் சொல்ற நாடுகளுக்கு ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வரலாம்… அதிக அளவில் செலவு செய்யவேண்டியதில்லை!
இப்ப எல்லாம் பட்ஜெட் டூர் அதிகமா இருக்கு தெரியுமா உங்களுக்கு? அதனால இப்போது வெளிநாட்டு பயணம் முன்பைவிட எளிதாகி விட்டது. நம்ம இந்தியர்களுக்கு ரொம்ப பாப்புலரா இருக்கும் முதல் டூரிஸ்ட் இடம் இன்னும் தாய்லாந்துதான். பீச் ரிசார்ட்ஸ், நைட் லைஃப், ஷாப்பிங், சுவையான ஸ்ட்ரீட் ஃபுட் — இதெல்லாம் யூத்துக்கு ரொம்ப அட்ட்ராக்ட் ஆகுது.
பிரபல இடங்கள்:
பாங்காக்
பட்டாயா
புகெட்
50 ஆயிரம் முதல் 85 ஆயிரம் ரூபாய்க்குள்ளே சும்மா ஈசியா சுற்றி வரலாம். அதுமட்டுமில்லாம, விசா ஆன் அரைவல் இருக்கே — அதுவும் பெரிய அட்வான்டேஜ்!
**************
மத்திய ஆசியால ரொம்ப அமைதியான, நேச்சுரல் பியூட்டியோட இருக்கும் நாடு கஜகஸ்தான்.
பிரபல இடம்:
அல்மாட்டி
மலைகள், ஏரிகள், பசுமையான இடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கும் — அதனால டூரிஸ்ட்ஸை ரொம்ப ஈர்க்குது.
**************
அதே மாதிரி, ஐரோப்பிய கலாச்சாரமும் ஆசிய டச்-உம் கலந்த ஒரு சூப்பரான நாடு அசர்பைசான்.
பிரபல இடம்:
பாக்கு
பாக்கு நகரம் ரொம்ப மாடர்னா இருக்கும், காஸ்பியன் கடற்கரை, அங்குள்ள பாரம்பரிய உணவு — இதெல்லாம் டூரிஸ்ட்ஸை ரொம்ப ஈர்க்கும். 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் ரூபாய்க்குள்ளே நல்லா சுற்றி வரலாம்.
**************
இந்தியாவுக்கு ரொம்ப அருகில இருக்குற இலங்கை கூட லோ பட்ஜெட்டுல செம ட்ரிப் கொடுக்கும்.
பிரபல இடங்கள்:
நுவரெலியா
கண்டி
எல்லா
யாலா தேசிய பூங்கா
யானைகள், கடற்கரை இடங்கள் — நேச்சர் லவர்ஸ்க்கு செம்ம. 50 ஆயிரம் ரூபாய்க்குள்ளே ஈசியா சுற்றி வரலாம்.
**************
கஜகஸ்தான் பற்றி சொல்லணும்னா — இந்தியன்ஸ்க்கு 14 நாள் விசா இல்லாம போகலாம். 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ரூபாய்க்குள்ளே நல்லா எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.
வியட்நாம் இப்போ ரொம்ப வேகமா பாப்புலர் ஆகுது.
பிரபல இடங்கள்:
ஹாலோங் பே
ஹோ சி மின் சிட்டி
ஹனாய்
லோ காஸ்ட்ல அதிக அனுபவம் கிடைக்கும். 1 லட்சம் ரூபாய்ல ரொம்ப கம்ஃபர்ட்டா ட்ரிப் பண்ணலாம்.
**************
இதுக்கு மேலா இந்த நாடுகளும் லோ பட்ஜெட்டுல சூப்பரா இருக்கும்:
நேபாளம்
பூடான்
பாலி
மலேசியா
கம்போடியா
முக்கிய ஹைலைட்ஸ்:
பாலி பீச்சுகள்
கோலாலம்பூர் மாடர்ன் சிட்டி
அங்கோர் வாட் கோவில்
ஒவ்வொன்றும் தனித்தனி அனுபவம் தரும்!
**************
மொத்தத்துல பார்க்கும்போது, சரியா பிளான் பண்ணி, முன்பதிவு செய்து, ஆஃபர்ஸ்லாம் யூஸ் பண்ணினா 1 லட்சம் ரூபாய்க்குள்ளே வெளிநாடு போய் வர்றது இப்போ ரொம்ப ஈசியா ஆகிடுச்சு.
பிளைட் டிக்கெட், லோக்கல் டிரான்ஸ்போர்ட், ஸ்டே எல்லாத்தையும் முன்னாடியே பிளான் பண்ணிட்டீங்கனா செலவையும் இன்னும் குறைக்கலாம். இந்த சம்மர்ல உங்க ட்ரீம் ஃபாரின் ட்ரிப்பை பிளான் பண்ணி அனுபவிக்க இது தான் பெஸ்ட் டைம்!
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here