மாலத்தீவுக்கெல்லாம் ஏன் இவ்ளோ செலவு பண்றீங்க.. கம்மி பட்ஜெட்டில் இலங்கையில் உள்ள இந்த சொர்க்கத்துக்கு கிளம்புங்க!

Madiha Beach
Madiha Beach
Published on

தினசரி வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து தப்பிக்க விடுமுறை நாட்களில் எங்காவது தூரமாகப் பயணம் செல்வது பலருக்கும் வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக இதமான கடல் காற்றை சுவாசிக்க கடற்கரைகளை நோக்கியே பலரும் படையெடுப்பார்கள். ஆனால் பிரபலமான இடங்களுக்குச் சென்றால் அங்கே நிம்மதியாக ஓய்வெடுக்க முடியாத அளவுக்கு மக்களின் கூட்டம் அலைமோதும். 

சென்னையில் இருந்து விமானத்தில் சென்றால் மிகக் குறுகிய நேரத்தில், யாருக்கும் அதிகம் தெரியாத ஒரு அற்புதமான, அமைதியான வெளிநாட்டுத் தீவு இருக்கிறது என்றால் அது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்தான். அதுதான் இலங்கையில் ஒளிந்திருக்கும் மடிஹா கடற்கரை (Madiha Beach). 

அமைதியோ அமைதி!

இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் மாத்தறை மாவட்டத்தில் தான் இந்த அழகிய கிராமம் அமைந்துள்ளது. பொதுவாக இலங்கை சுற்றுலா செல்பவர்கள் மிரிஸ்ஸா மற்றும் வெலிகம போன்ற இடங்களுக்குத் தான் அதிகம் விசிட் அடிப்பார்கள். அங்கே எப்போதுமே வணிகமயமாக்கப்பட்ட ஒரு இரைச்சல் இருந்துகொண்டே இருக்கும்.

ஆனால் அந்த பரபரப்புகளில் இருந்து தப்பித்து, இயற்கையின் மடியில் தனிமையை ரசிக்க நினைப்பவர்களுக்கு இந்த மடிஹா ஒரு மாபெரும் வரப்பிரசாதம் ஆகும். மாசுபடாத தங்க நிற மணல் மற்றும் கண்ணாடியைப் போல மின்னும் தெளிவான கடல் நீர் என இது பார்ப்பதற்கு ஒரு அழகிய ஓவியம் போல காட்சியளிக்கும்.

சாகசப் பிரியர்களின் சொர்க்கம்!

இந்த இடத்தின் மிகப்பெரிய சிறப்பம்சமே இங்குள்ள சர்ஃபிங் விளையாட்டு தான். மடிஹா ரைட் என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்த குறிப்பிட்ட கடல் பகுதி, உலகெங்கிலும் உள்ள சாகசப் பயணிகளைக் காந்தம் போல இழுக்கிறது. புதிதாக சர்ஃபிங் கற்றுக்கொள்பவர்கள் முதல் பல வருட அனுபவம் வாய்ந்தவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையிலான சீரான அலைகள் இங்கு வருவது இதன் தனிச்சிறப்பு. 

இதையும் படியுங்கள்:
நீல நிறத்தில் ஏன் விலங்குகள் இல்லை... அறிவியல் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
Madiha Beach

அதுமட்டுமில்லாமல், மிகத் தெளிவான இந்த நீல நிறக் கடலில் எந்த ஒரு பயமும் இல்லாமல் பாதுகாப்பாக நீச்சல் அடிக்கலாம். ஆங்காங்கே தென்படும் அரிய வகை கடல் ஆமைகளை மிக அருகில் பார்த்து ரசிப்பது மனதுக்கு ரொம்பவே உற்சாகத்தைக் கொடுக்கும்.

உணவு, தங்கும் வசதி!

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடற்கரை ஓரங்களில் சின்ன சின்ன அழகிய தங்கும் விடுதிகள் மற்றும் மாடர்னான கஃபேக்கள் முளைத்துள்ளன. இங்கு கிடைக்கும் காரசாரமான பாரம்பரிய இலங்கை உணவுகளோடு, பல வெளிநாட்டு உணவுகளும் நாவின் சுவையைத் தூண்டும் வகையில் பரிமாறப்படுகின்றன. உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தர பல யோகா மையங்களும் இங்கு மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. இங்கிருந்து ரொம்பவே சுலபமாக பொல்ஹேனா போன்ற மற்ற பிரபலமான சுற்றுலா மையங்களுக்கும் சென்று வர முடியும்.

இயற்கையை அதன் அசல் வடிவில் எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் ரசிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இயற்கை விரும்பிக்கும் இது ஒரு மிகச்சிறந்த சாய்ஸ். தெற்கின் சொர்க்கம் என பலரால் வர்ணிக்கப்படும் இந்த அமைதியான கடற்கரை, இன்னும் சில வருடங்களில் ஆசியாவின் டாப் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக மாறப்போவது உறுதி. 

இதையும் படியுங்கள்:
மன ஆரோக்கியத்தைக் காக்கும் சில வழிமுறைகள்!
Madiha Beach

வேலைப்பளு, மன அழுத்தத்தைக் குறைத்து, உங்களின் குடும்பம் அல்லது நண்பர்களுடன் ஒரு நிம்மதியான, மறக்க முடியாத ட்ரிப் செல்ல பிளான் செய்தால், உங்களின் அடுத்த பயணத் திட்டம் நிச்சயமாக இந்த மடிஹா கடற்கரையாகத் தான் இருக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com