இயற்கை விரும்பிகளின் சொர்க்கம்! கர்நாடகாவின் மாகோடு நீர்வீழ்ச்சி ஏன் அவசியம்?

அடர்ந்த காடுகளுக்கு இடையே கொட்டும் நீர்வீழ்ச்சியின் பேரழகை கேமராவிலும் கண்களிலும் பதிய வைக்கத் தயாரா?
Magod Waterfalls | மாகோடு நீர்வீழ்ச்சி
Magod Waterfalls | மாகோடு நீர்வீழ்ச்சிAI Image
Updated on

ருவியின் அழகை ரசிப்பதும் அருவியில் குளிப்பதும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதுவும் அருவி இருக்கும் இடத்தை சென்றடையும் முன்பாக நம் காதுகளை வந்தடையும் அருவி விழும் சப்தத்தை கேட்டாலே அனைவரது உள்ளமும் பொங்க ஆரம்பித்து விடும். இயற்கையை ரசிக்க நினைத்து சுற்றுலா செல்பவர்களுக்கு நீர்வீழ்ச்சி இருக்கும் இடங்களுக்கு செல்வது முதன்மை தேர்வாக இருக்கும். அந்த வகையில் கர்நாடகாவில் மனதை மயக்கும் 'மாகோடு நீர்வீழ்ச்சி' குறித்து இப்பதிவில் காண்போம்.

மாகோடு நீர்வீழ்ச்சி|a beautiful waterfalls
மாகோடு நீர்வீழ்ச்சிAI image

1. மாகோடு நீர்வீழ்ச்சி அமைவிடம் மற்றும் போக்குவரத்து விவரங்கள்

நம் அண்டை மாநிலமான கர்நாடகாவின் உத்தர கனடா மாவட்டத்தின் எல்லப்பூர் (Yellapur) தாலுகாவில் மாகோடு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெட்தி நதியிலிருந்து உருவாக்கப்படும் மாகோடு நீர்வீழ்ச்சி இரு கட்டங்களாக கீழே பாய்கிறது. சுமார் 650 அடி (200மீ) உயரத்திலிருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளுக்கு நடுவே அமைந்துள்ளது. ஆக்ரோஷமான கர்ஜனையுடன் நீர்வீழ்ச்சி கீழே விழும் சத்தத்தையும், அழகையும் கண்டு ரசிப்பதற்காக நடைபாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் இயற்கையை விரும்புபவராக இருந்தாலும் சரி, சாகசப் பிரியராக இருந்தாலும் சரி, இந்த நீர்வீழ்ச்சி அனைவருக்கும் ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. எனவே, மகோட் நீர்வீழ்ச்சிக்கு ஒரு பயணத்தைத் திட்டமிட்டு, இயற்கையின் அமைதியில் மூழ்கிவிடுங்கள்.

மாகோடு நீர்வீழ்ச்சி|a family enjoying waterfalls
மாகோடு நீர்வீழ்ச்சிAI image

சிறந்த சுற்றுலா தளமாக இருக்கும் இந்த இடம் அழகாக காட்சி தருவதால் இயற்கை விரும்பிகள் மற்றும் புகைப்படக் கலைஞர்களின் சொர்க்கமாக உள்ளது. கோடைகாலத்தில் குறைந்த நீர் வரத்தைக் கொண்டிருந்தாலும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மழைக்காலத்தில் நீர் வரத்து அதிகம் காணப்பட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

எல்லப்பூர் நகரத்திலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருப்பதால் மாகோடு நீர்வீழ்ச்சியின் 'வியூ பாயிண்ட்' வரை கார் மட்டும் டாக்ஸியில் எளிதாக சென்றடையலாம். இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எளிதாக கண்டு ரசிக்கலாம். சுற்றிலும் பசுமையான காடுகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளால் சூழப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
உலகையே வியக்கவைக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி - ஒரு முழுமையான சுற்றுலா வழிகாட்டி!
Magod Waterfalls | மாகோடு நீர்வீழ்ச்சி

2. மினி நயாகரா எனப்படும் மாகோடு நீர்வீழ்ச்சி செல்ல சிறந்த பருவம்

'மினி நயாகரா' என்றழைக்கப்படும் மாகோடு நீர்வீழ்ச்சியைக் கண்டு ரசிக்க அருகிலேயே அருமையான தங்கும் விடுதிகள், ஹோம்ஸ்டேக்கள், காட்டேஜ்கள் உள்ளன. இயற்கையை ரசிக்க விரும்புபவர்களும் மன அமைதியை தேடுபவர்களும் முன்பதிவு செய்து அறைகளில் தங்கி மாக்கோடு நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

3. பிற சுற்றுலாத் தலங்கள்

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாகோடு நீர்வீச்சியை கண்டு ரசிக்கலாம். இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் கவடகெரே ஏரி, ஜேனுகல்லு குட்டா மலை, கல்லாரே நீர்வீழ்ச்சி, வனதுர்கா கோவில், சாத்தோடி நீர்வீழ்ச்சி போன்ற சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் மழைக்காலம் நெருங்க இருக்கும் இவ்வேளையில் மன அமைதிக்காக மாகோடு நீர்வீழ்ச்சிக்கு பயணம் மேற்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
உலகைச் சுற்றி வந்த அதிசயம்: தண்டவாளத்தில் பறக்கும் ஃப்ளையிங் ஸ்காட்ஸ்மேன்!
Magod Waterfalls | மாகோடு நீர்வீழ்ச்சி

மாகோடு நீர்வீழ்ச்சி ஹூப்பள்ளியில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், தாவணகெரேவில் இருந்து 166 கிலோ மீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 442 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருகிலுள்ள விமான நிலையம் ஹூப் பள்ளியாகும்.

logo
Kalki Online
kalkionline.com