

சென்னைக்கு தெற்கு 60 கிலோ மீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது மகாபலிபுரம். பல்லவ மன்னர்களின் கலைத் திறனுக்கு சான்றாக விளங்கி வருகிறது. இது முற்காலத்தில் திருக்கடல் மல்லை என அழைக்கப்பட்டது. ஏழாம் நூற்றாண்டின் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்ம வர்மன் மாமல்லன் என அழைக்கப்பட்டவன். எனவே இந்த ஊர் மாமல்லபுரம் என அழைக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இது மகாபலிபுரம் என மருவி அழைக்கப்பட்டது.
இங்கு கிரானைட் கற்களால் கட்டப்பட்ட கடற்கரை கோவில் ஐந்து தனித்தனி பாறைகளில் செதுக்கப் பட்டுள்ள பஞ்சரதங்கள் உள்ளன. அர்ஜுனன் தவசு கோவில் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி சிற்பமாகும் வராக குகை மகிஷாசுரமர்த்தினி குகை இவை புகழ்பெற்றவை 1984 இல் உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட இடமாகும்.
இந்த இடங்களுக்கு அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். புராண கதைகள் காவியப் போர்கள் பேய்கள் கடவுள்கள் விலங்குகள் அனைத்து உருவங்களும் சுவர்களில் கண்ணைக் கவரும் விதத்தில் வரையப்பட்டுள்ளது.
பல்லவ மன்னர்கள் ஜைன மதத்தை பின்பற்றி வந்தனர். ஆனால் மகேந்திர பல்லவன் வைணவத்தை பின்பற்றியதால் சிவன் விஷ்ணு ஆலயங்கள் கட்டப்பட்டது. இங்குள்ள காதல் சிற்பங்கள் தாஜ்மஹாலை நினைவுபடுத்துகிறது. சூரிய ஒளியில் இந்த இடங்கள் அற்புதமாக காட்சியளிக்கிறது
குகை கோவில்கள்
மாமல்லபுரத்தில் ஒன்பது குகை கோவில்கள் உள்ளன. இந்து புராணப்படியும் உண்மை சம்பவங்கள நிறைந்துள்ளது. இந்தக் குகை கோவில்களில் ஓய்வெடுக்கும் வசதியும் உள்ளது. கிருஷ்ணன் குகை சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது விஷ்ணு உறங்குவதைப் போல உள்ள சிலை பார்க்க மிகவும் அழகாக உள்ளது. இவை மகிஷாசுரமர்த்தினி குகையில் உள்ளது. இங்கு துர்கா தேவி சிலை எருமை மாட்டின் தலையுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார்
இவை அனைத்தும் திராவிட கலையை பெருமைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடற்கரை கோவில் பிரம்மிக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது. மகாபலிபுரம் யாத்திரிகர்களை வரவேற்கும் விதத்தில் இருந்தாலும் ஓய்வெடுக்க சிறந்த இடமாகும் கண்கவர் கடற்கரைகள் மனதை கொள்ளை கொள்கின்றன.
அர்ஜுனன் தவம்
இதைக் கண்டால் பிரமிப்பாக இருக்கும். திறந்த வெளியில் 29 மீட்டர் நீளம் 13 மீட்டர் உயரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ளது. புனித கங்கை வானத்திலிருந்து பூமிக்கு இறங்கிய கதையை விவரிக்கிறது சிறந்த பாறை சிற்பமாகும்.
கிருஷ்ணரின் வெண்ணெய் பந்து
பிரம்மாண்டமான கிரனைட் கற்களால் உருவாக்கப்பட்ட பாறை ஆகும். ஆறு மீட்டர் உயரம் ஐந்து மீட்டர் அகலம் 250 டன் எடை கொண்டது. இந்த வட்ட பாறை உலக அதிசயமாக காணப்படுகிறது. 1908 ஆம் ஆண்டில் சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் என்பவர் இந்த வெண்ணைப்பந்து கல்லை ஏழு யானைகளைக் கொண்டு இழுக்க முயற்சி செய்தார். அவரால் முடியவில்லை.
அருங்காட்சியகம்
இது புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே சென்று சுற்றி பார்க்க நுழைவு கட்டணம் பெறவேண்டும். பழைய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலங்கரை விளக்கத்தில் உள்ள பழங்கால பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. கடல்சார் கல்விக்கு மிகவும் பயனுள்ளதாக இந்த அருங்காட்சியகம் உள்ளது.
கலங்கரை விளக்கம்
ஐந்து ரதம் செல்லும் வழியில் உள்ளது. மலை மீது அழகாக அமைந்துள்ளது. இதன் அருகில் மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. எதிர்ப்புறம் ரங்கநாதர் சயன காட்சி தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரமர்த்தினி மகிஷாசுரர்கள் போரிடும் காட்சியும் அருமையாக செதுக்கப்பட்டுள்ளது.
ஐந்து ரதம்
மாமல்லபுரம் எல்லை முடிவில் இந்த ஐந்து ரதம் உள்ளது பேருந்து நிலையத்திலிருந்து தொலைவில் இருப்பதால் ஆட்டோ மூலம் செல்லலாம். இதற்கு பார்வையிட தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிங்கம் யானை சிலைகள் நம்மை வரவேற்கின்றன. மகாபாரதத்தில் உள்ள பஞ்சபாண்டவர்கள் தர்மன் அர்ஜுனன் பீமன் சகாதேவன் நகுலன் ஆகிய பெயர்களில் ஐந்து ரதங்கள் சிறப்பான வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.
கடற்கரை கோவில்
பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பல இயற்கை பேரிடர்களை தாங்கி தலை நிமிர்ந்து நிற்கிறது இதைச் சுற்றி பார்க்க நுழைவு கட்டணம் உண்டு பச்சை புல்வெளிகள் அழகாக உள்ளன. இங்கு மிகவும் தொன்மையான சிவன் கோவில் உள்ளது. கடற்கரைக்குச் சென்று கடலின் அழகை ரசிக்கலாம். .
.எண்ணற்ற சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டு பயணிகளும் அதிக அளவில் வருகை தருகிறார்கள். கட்டிடக்கலைக்கும் சிற்பக் கலைக்கும் பெயர் பெற்று விளங்குகிறது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும்.