
பயணம் என்பது குதூகலத்தின் ஆரம்பம். அதுவும் முதன்முதலாக வெளிநாட்டு பயணம் என்றால் அதைப்பற்றிய கற்பனைகளில் மிதக்க ஆரம்பித்து விடுவோம். இயற்கை எழில் கொஞ்சம் இடங்களின் சங்கமம் மலேசியா. மலேசியாவில் சுற்றிப் பார்த்த இடங்கள் இந்த ஐந்தும் எங்கள் குடும்பத்தாரை வெகுவாக கவர்ந்தது. நீங்களும் சென்றால் அவசியம் இவற்றைக் கண்டு களியுங்கள்.
மலேசியாவின் மிக முக்கியமான அடையாளம் என்றால் 88 மாடிகளை கொண்ட இந்த இரட்டை கோபுரங்கள்தான். ஒரு காலத்தில் உலகின் மிகஉயரமான கட்டிடமாக இருந்தது. இதனுடைய தனிச்சிறப்பு என்று பார்த்தால் 41 மற்றும் 42வது மாடிகளுக்கு இடையே உள்ள (Sky bridge) ஆகாயப் பாலம் மற்றும் 86வது மாடியில் உள்ள கண்காணிப்பு தளத்திலிருந்து கோலாலம்பூர் மாநகரத்தின் அழகை ரசிப்பது ஒரு தனி அனுபவமாக இருந்தது.
கோலாலம்பூருக்கு அருகில் அமைந்துள்ள பட்டு கேவ்ஸ் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கிறது. இதன் சிறப்பு என்னவென்றால் மலை அடிவாரத்தில் உள்ள பிரம்மாண்டமான தங்க நிற முருகப்பெருமான் சிலை உலகப் புகழ் பெற்றது. 272 வண்ணமயமான படிக்கட்டுகளை கடந்து சென்றால் இயற்கையான குகைக்குள் அமைந்துள்ள கோவிலை அடையலாம். இது ஆன்மீகம் மற்றும் இயற்கை அழகும் கலந்த கலவையாகும்.இங்கு முருகர் சிலையோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்வது அனைவருக்கும் பிடித்தமானதாக இருந்தது.
மலை உச்சியில் அமைந்துள்ள ஜென்டிங்ஹைலேண்ட் பொழுதுபோக்கின் நகரம் (City of entertainment) என்று அழைக்கப்படுகிறது. இங்கு செல்வதற்கு பயன்படுத்தப்படும் cable car (மின் தூக்கி பெட்டி) பயணம் மிகவும் சிலிர்ப்பானது .மேகங்களுக்கு இடையே பயணிப்பது போன்ற உணர்வைத் தந்தது. இங்கு தீம் பார்க் கேசினோக்கள் மற்றும் ஷாப்பிங் மால் என அனைத்தும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது சிறப்பு.
இயற்கையை நேசிப்பவர்களுக்கும் கடற்கரை பிரியர் களுக்கும் இது ஒரு சொர்க்கம் என்றால் மிகையாகாது. 99 தீவுகளின் தொகுப்பான ல்ங்காவி தீவு அந்தமான் கடலில் அமைந்துள்ளது. இங்குள்ள Lankavi sky bridge (வளைந்த ஆகாயப் பாலம்) கடல் மட்டத்திலிருந்து 700 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கிருந்து கடலையும், காடுகளையும் பார்ப்பதுதான் பிரமிக்க வைக்கும் காட்சியாக அமைகிறது. மேலும் இது ஒரு வரி இல்லாத Duty Free வணிகப் பகுதியாகும்.
இந்த மலைப்பகுதியானது குளிர்ச்சியான காலநிலை மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்குப் பெயர் பெற்றது. இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள், ஸ்ட்ராபெர்ரி பண்ணைகள், வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் மற்றும் பொவெண்டர் தோட்டங்கள் மனதிற்கு மிகுந்த அமைதியைத் தந்தது. கோடைக்கால வெப்பத்திலிருந்து தப்பிக்க இது மலேசியாவின் சிறந்த இடமாகப் போற்றப்படுகிறது. கூட்டமும் சீசனில் வழிந்து ஓடுகிறது.
ஆதலால் மலேசியா ட்ரிப் செல்பவர்கள் இந்த ஐந்து இடங்களையும் தவறாமல் கண்டுகளித்து திரும்பலாம். மனதிற்கு நல்ல உற்சாகம் கிடைக்கும். இயற்கை அழகுடன் ஆன்மீகமும் கலந்த ஒரு சுற்றுலாவாக இது அமைந்தது என்பதால் மிகவும் சந்தோஷமாக ட்டிரிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். உங்களுக்கும் அந்த நிறைவு கிடைக்கும்.