சிங்கப்பூரில் இருக்கும் ‘மினி தமிழ்நாடு’!

சிங்கப்பூர்...
சிங்கப்பூர்...

சிங்கப்பூர் ஒரு பரப்பரப்பான கலாச்சாரம் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த வளமான சுற்றுப்புறத்தைக் கொண்ட நாடாகும். அதில் ‘லிட்டில் இந்தியா’ என்ற பகுதியானது இந்தியர்கள் அதிகமான எண்ணிக்கையில் வசிக்கும் ஒரு இடமாகக் கருதப்படுகிறது. இப்பகுதியானது இந்திய மக்களின் பாரம்பரியம் மற்றும் மரபுகளுக்கு ஒரு சான்றாக  நகரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
பருக்கள் நீங்கி முகம் பளபளக்க 10 உணவுகள்!
சிங்கப்பூர்...

தனித்துவமான முறையில் அமைந்துள்ள  சாலைகள் மற்றும் தெருக்கள் நமது இந்தியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பல உணர்வுபூர்வமான அனுபவத்தை வழங்குகிறது. அதோடு அப்பகுதியை சுற்றியுள்ள பரபரப்பான சந்தைகளில் இருக்கும் நறுமணமிக்க தமிழ் மனம் வீசும் மசாலா கடைகள் முதல் பிரமிக்க வைக்கும் கோயில்கள் வரை, இப்பகுதியானது இந்திய கலாச்சாரத்தின் வடிவத்தை வெளிக்காட்டுகிறது. மேலும் இது பல ஆண்டுகளாக பல்வேறு செயல்பாடுகள் மற்றும் பாரம்பரியத்தின் முக்கியப்பகுதியாகவும் உருவாகியுள்ளது.

‘லிட்டில் இந்தியாவின்’ வரலாற்று பயணம்:

லிட்டில் இந்தியாவின் வரலாற்றுப் பயணமானது 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்தே துவங்கியுள்ளது. முதன் முதலாக சிங்கப்பூரில் பணிபுரியக்கூடிய தமிழ் தொழிலாளர்கள்தான் இங்கு குடியேறியுள்ளனர். பின்னர் அப்பகுதியானது ஒரு கலாச்சாரமிக்க  வளாகமாக வளர்ந்து, மேலும் அது ஒரு குடியிருப்பு பகுதியாகவே தமிழர்களால் மாறியுள்ளது. ‘சிராங்கூன்’ என்று அழைக்கப்படும் பகுதியானது படிப்படியாக கால்நடை வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக செழித்து உயர்ந்துள்ளது. இன்றைய வளர்ச்சி அடைந்த லிட்டில் இந்தியாவின்  அடையாளத்தை வடிவமைத்ததில் தொழிலாளர்களாக குடியேறியவர் களுக்கு முக்கியப் பங்கு உண்டு.

லிட்டில் இந்தியா...
லிட்டில் இந்தியா...

கட்டிடக்கலை அற்புதங்களும் அடையாளங்களும்

லிட்டில் இந்தியாவின் கட்டடக்கலை அமைப்பானது பழைமை மற்றும் நவீன உலகின் வசீகரமான கலவையால் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள ‘ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில்’ போன்ற அலங்கரிக்கப்பட்ட இந்து கோவில்கள் இந்தியர்களின் கட்டடக்கலை பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு சான்றாக அமைந்துள்ளன. தெருக்களில் வண்ணமயமான முகப்புகள், தனித்துவமிக்க வடிவமைப்புகள் மற்றும் வரலாற்று அடையாளங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளன. அவை சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. மேலும் இதுபோன்ற பாரம்பரிய மற்றும் சமகால கட்டிடக்கலையின் வடிவமானது இந்திய மக்களின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளன.

லிட்டில் இந்தியா...
லிட்டில் இந்தியா...

உணவுப் பிரியர்களுக்கான சொர்க்க பூமி

லிட்டில் இந்தியாவின் சிறப்பம்சங்களில் ஒன்று அதன் சமையல் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள்தான். சீன உணவுகளில் துவங்கி இங்கு ஏராளமான இந்திய பாரம்பரிய உணவுகள் லிட்டில் இந்திய மக்களின் சுவையை பூர்த்தி செய்யும் வகையில்  சாலையோரைக் கடைகளில் நிறைந்து காணப்படுகின்றன. காரசாரமான உணவுகள் முதல் இனிப்பு உணவுகள் வரை கிடைக்கிறது. இப்பகுதியானது உணவு ஆர்வலர்கள் மற்றும் உணவுப் பிரியர்களுக்கு ஒரு சொர்க்கமாகும்.

சிறந்த ஷாப்பிங் அனுபவம்

லிட்டில் இந்தியாவிலுள்ள வளமான சந்தைகள் மற்றும் கடைகளில்  பாரம்பரிய உடைகளில் தொடங்கி மாடர்ன் உடைகள், கண்கவர் நகைகள், நறுமணம் மிக்க மசாலா பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளுடன் தனித்துவமான ஷாப்பிங் அனுபவத்தைத் தருகின்றன. அதோடு  பரபரப்பான தெருக்கள் இந்திய கலாச்சாரம் மற்றும் கைவினைத்திறன்களை விரும்புவோருக்கு நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும்.

கோவில்...
கோவில்...

கோலாகலப் பண்டிகைகள்

தீபாவளி, ஹோலி மற்றும் துர்கா பூஜை போன்ற பண்டிகைகளின்போது லிட்டில் இந்தியா ஒளிவீசும் மின்விளக்குகள் பொருத்தப்பட்ட சாலை எங்கும் மக்கள்  உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவர். இதுபோன்ற பண்டிகை நிகழ்வுகள் இந்திய கலாச்சாரம், மக்களின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com