தாய்லாந்து, ஃபூகெட்டின் (Phuket) 10 அழகான கடற்கரைகளை சுற்றிப் பார்ப்போமா?

Beautiful beaches
Thailand beaches

தாய்லாந்தில் உள்ள ஃபூகெட் நகரம் பிரமிக்க வைக்கும் கடற்கரைகளைக் கொண்டது. இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள். தனித்துவம் வாய்ந்த 10 கடற்கரை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. படோங் கடற்கரை: Patong Beach

Patong Beach
Patong Beach

இது மிகவும் பரபரப்பான பிரபலமான கடற்கரையாகும். இது ஃபூக்கெட்டின் முக்கியமான சுற்றுலா மையமாகும். இங்கு தங்குமிடம் உணவு ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் நிறைய இருக்கின்றன. ஏராளமான நீர் விளையாட்டுகள் நிறைந்தது. ஜெட்-ஸ்கீயிங், பாராசெயிலிங் போன்றவை இங்கு பிரபலமாக இருக்கின்றன. இந்த கடற்கரைக்கு சற்று தொலைவில் உள்ள பங்களா சாலை ஃபூக்கட்டின் இரவு வாழ்க்கையின் மையப் பகுதியாக விளங்குகிறது.

2. கட்டா கடற்கரை & கட்டா நொய் கடற்கரை: Kata Beach & Kata Noi Beach

Kata Noi Beach
Kata Noi Beach

இரண்டும் வெகு அருகே அமைந்துள்ளன.  குடும்பங்கள் மற்றும் தம்பதிகளுக்கு பிரபலமானது. இங்குள்ள மென்மையான வெள்ளை மணல் மற்றும் அமைதியான நீர், நல்ல உணவகங்கள் போன்றவை மக்களை ஈர்க்கின்றன. மழைக்காலங்களில் கூட இங்கே நீச்சல்  மற்றும் சர்ஃபிங் செய்யலாம். இந்தக் கடற்கரையில் உள்ள ஒரு சிறிய தீவு நண்டு தீவு என அழைக்கப்படுகிறது. சூரிய அஸ்தமன நேரத்தின் போது மிக அழகாக காட்சி அளிக்கும்.

3. கரோன் கடற்கரை: Karon Beach

Karon Beach
Karon Beach

இது ஃபூக்கெட்டின் மூன்றாவது மிக நீளமான கடற்கரை. இந்த கடற்கரை மணலில் நடக்கும் போது தனித்துவமான ஒரு சத்தத்தை எழுப்பும். இதில் உள்ள குவார்ட்ஸ் உள்ளடக்கம் காரணமாக இந்த சத்தம் எழும்புகிறது. இந்த கடற்கரை நீந்துவதற்கு ஏற்றது.

4. ஃப்ரீடம் பீச்: Freedom Beach

Freedom Beach
Freedom Beach

நீண்ட வால் படகில் செல்லக்கூடிய ஒரு அழகான ஒதுக்குப்புறமான சொர்க்கமாக இந்த பீச் கருதப்படுகிறது. இங்கு அழகிய மணலும் நீல நிற நீரும் பிரபலம். இது ஒதுக்குப்புறமான கடற்கரை என்பதால் மறைக்கப்பட்ட ரத்தினம் என்கிற பெயரும் இதற்கு உண்டு. தெளிவான, அமைதியான நீர், துடிப்பான பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுடன் ஸ்நோர்கெலிங்கிற்கு சிறந்தது. மிகவும் பிரபலமான கடற்கரையைப் போல இல்லாமல், அமைதியான அனுபவத்தை வழங்குகிறது.

5. நை ஹார்ன் கடற்கரை: Nai Harn Beach

Nai Harn Beach
Nai Harn Beach

இது நீச்சல் மற்றும் சூரிய குளியலுக்கு மிகவும் பெயர் பெற்றது. சர்ஃபிங் செய்யவும் ஏற்றது. பசுமையான மலைகளால் சூழப்பட்ட அழகிய குதிரை லாட வடிவ விரிகுடா இது. குறைவான வணிகமயமாக்கல் காரணத்தால் அதிகமான இயற்கை உணர்வைப் பேணுகிறது.

6. கமலா கடற்கரை: Kamala

 Kamala Beach
Kamala Beach

அமைதியான கடற்கரை கிராமம் இது. நிதானமான அமைதியான சூழ்நிலையை வழங்குகிறது. மணல் பகுதியில் நல்ல உணவகங்கள் கொண்ட கடற்கரை இது.

7. பேங் தாவோ கடற்கரை: Bang Tao Beach

 Bang Tao Beach
Bang Tao Beach

ஃபூகெட்டின் மிக நீளமான கடற்கரைகளில் ஒன்று, ஆடம்பரமான ரிசார்ட்டுகளுக்கு தாயகமாகவும், மிகவும் அமைதியான அனுபவத்தை வழங்குவதாகவும், சூரிய அஸ்தமன நிகழ்வை கண்டு ரசிக்க ஏற்றதாகவும் உள்ள கடற்கரை இது.

இதையும் படியுங்கள்:
பவேரியா ஆல்ப்ஸில் (BAVARIAN ALPS) உள்ள 'ராஜாவின் ஏரி' 'கோனிக்ஸீ' (KONIGSSEE) - பார்ப்போமா?
Beautiful beaches

8. மை காவோ கடற்கரை: Mai Khao Beach

Mai Khao Beach
Mai Khao Beach

பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், துடிப்பான இரவு வாழ்க்கை முதல் கலாச்சார தளங்கள் மற்றும் சாகச நடவடிக்கைகள் வரை பல்வேறு வகையான ஈர்ப்புகளை வழங்குகிறது. ஃபூகெட்டின் மிக நீளமான கடற்கரை. ஃபூகெட் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும்போது தலைக்கு மேல் தாழ்வாகப் பறக்கும் இடமாக இது பிரபலமானது. மற்ற கடற்கரைகளை விட இங்கு மணல் கரடுமுரடாக இருக்கும்.

9. சுரின் கடற்கரை: Ao Surin

Ao Surin Beach
Ao Surin Beach

அதன் ஆடம்பரமான ரிசார்ட்டுகளுக்கும் "மில்லியனர்கள் வரிசை" உணர்விற்கும் பெயர் பெற்றது. தெளிவான, பிரகாசமான நீல நீர் மற்றும் மெல்லிய வெள்ளை மணலைக் கொண்டுள்ளது. இங்கு கடற்கரை கிளப்புகள் பிரபலமானவை.

10. ஆவோ சேன் கடற்கரை: Ao sane

Ao sane Beach
Ao sane Beach

மூன்று சிறிய விரிகுடாக்களைக் கொண்ட ஒரு சிறிய, பாறைக் கடற்கரை.  சிறந்த ஸ்நோர்கெலிங்கிற்கு பெயர் பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com