
தமிழ்நாட்டில் எத்தனையோ சுற்றுலா தலங்கள் உள்ளன. அவற்றில் இயற்கையாகஅமைந்துள்ள சுற்றுலா தலம்தான் முக்கொம்பு. தமிழ்நாட்டின் பெரிய சுற்றுலா தலமாக வழங்கும் முக்கொம்பு காவிரி ஆறு மூன்று பிரிவாக உள்ள இடத்தில் அமைந்துள்ளது.
திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி கம்பரசம்பேட்டை முத்தரசநல்லூர் வழியாக முக்கொம்பை அடையலாம். ரயிலில் வருவதாக இருந்தால் ஏழுமனூர் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து செல்லலாம்.
காவிரி ஆறு மேட்டூர் பவானி மாயனூர் நீர்த்தேக்கம் சந்திக்கும் இடத்தில்தான் முக்கொம்பு அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் சர் ஆர்தர் காட்டன் என்பவரால் இந்த அணை கட்டப்பட்டது.
முக்கொம்பு பகுதி புதை மணல் அதிகம் உள்ள இடம் ஆகும். சிறந்த பொழுதுபோக்கு பூங்கா சிறுவர் பூங்கா செயின்ட் வீல் ராட்டினம் சறுக்கு விளையாட்டு படகு போக்குவரத்து போன்றவை சிறந்த பொழுது போக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆடி 18 இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமங்கலி பெண்கள் திருமணம் ஆகாத பெண்கள் இந்த இடத்தில் ஒன்றுகூடி காவிரி தாய்க்கு பூஜை செய்வது சிறப்பாக கருதப்படுகிறது.
இந்த பூங்காக்களில் நிறைய கடைகள் சிற்றுண்டி வசதி உணவகம் போன்றவை உள்ளது. முக்கொம்பு அணை நீர்ப்பாசன ஆதாரமாக உள்ளது. காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை திறந்து இருக்கும். இதைச் சுற்றி பார்க்க சுமார் 2 மணி நேரம் ஆகும்.
சூரிய அஸ்தமனத்தை இங்கிருந்து பார்ப்பது ரம்யமாக இருக்கும். அருகில் ராக்போர்ட் கோவில் கல்லணை உள்ளது.
அருகில் திருச்சி ரங்கநாதர் கோவில் உள்ளது. மரங்கள் அடர்ந்த சோலைக்கு நடுவே செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பறவைகளின் ரீங்காரம் நம்மை வரவேற்கும்.
பூங்காக்களில் உள்ள மரத்தடிகளில் அமர்வதற்கு ஆங்காங்கே சிமெண்ட் பெஞ்சுகள் போடப்பட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்வது இனிமையாக இருக்கும்.
அருகில் உளள காவிரி ஆற்றில் குளித்து மகிழ்வது அதைவிட சிறப்பு சுடச்சுட மிளகாய் பஜ்ஜி டீ போன்றவை கிடைக்கும். காவிரி ஆற்றில் மீன் பிடிப்பது இங்குள்ள சிறப்பு அம்சமாகும். நமக்கு காவிரி ஆற்றில் இருந்து மீன் பிடித்து சுடச்சுட வருத்து தருவார்கள். மிகவும் சுவையாக இருக்கும். மிகக் குறைந்த விலையில் அதுவும் அவ்வளவு ருசியாக இருக்கும்.
மக்கள் சுற்றுலா இடம் தேடி எங்கெங்கோ செல்கிறார்கள். ஒருமுறை எனும் அருகிலுள்ள முக்கொம்பு சுற்றுலா சென்று வந்தால் மனதுக்கு மகிழ்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும். அப்படியே அருகில் உள்ள ராக்போர்ட் கோவில் கல்லணை திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இவற்றையும் பார்வையிட்டு திரும்பலாம்.