

கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூனாறு ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரத்தில் உள்ளது இந்த இடம் தென்னகத்தின் காஷ்மீர் என அழைக்கப்படுகிறது. தேயிலை உற்பத்தியில் முக்கிய தொழிலாகும்
இந்தப் பகுதியில் பிரிட்டிஷ்காரர்கள் கோடை வாசஸ்தலமாக பயன்படுத்தி வந்தார்கள். பரந்த தேயிலை தோட்டங்கள் அழகிய நகரங்கள் முறுக்கு பாதைகள் மற்றும் ஏராளமான விடுதிகள் உள்ளன. புகழ்பெற்ற ஓய்விடங்கள் உள்ளன. இங்கு காணப்படும் நீலக்குறிஞ்சி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும்.
தென்னிந்தியாவில் உயரமான ஆனைமுடி சிகரம் 2695 மீட்டர் உயரம் உள்ளது. மலையேற்றத்திற்கு பொருத்தமான இடமாகும்.
இரவிகுளம் தேசிய பூங்கா மூணாறு பகுதியில் முக்கிய இடம் வகிக்கிறது. இந்தப் பகுதியில் வரையாடுகள் அதிகம் காணப்படுகிறது. 97 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பட்டாம்பூச்சிகள் வனவிலங்குகள் பறவை இனங்கள் வாழ்விடமாக உள்ளது. நீலக்குறிஞ்சி மலர்கள் சரிவு பகுதிகளில் நீலகம்பளம் விரித்தது போன்று அருமையாக காணப்படுகிறது. இதை பார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும் இந்தப் பகுதியில் ஆண்டு முழுவதும் குறிஞ்சி பூக்கள் பூக்கும்.
ஆனைமுடி சிகரம்
இரவிகுளம் தேசிய பூங்கா உள்ளே அமைந்துள்ள பகுதி ஆனைமுடி சிகரம் ஆகும். தென்னிந்தியாவின் மிக உயரமான பகுதியாக காணப்படுகிறது. 2700 மீட்டர் உயரம் கொண்ட இந்த இடத்தில் வனவிலங்குகள் அதிகமாக உள்ளது.
மாட்டுப் பெட்டி
இந்த இடம் மூணாறில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பகுதியாகும். கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த இடம் ஏரிக்காக புகழ்பெற்ற இடமாகும். இங்குள்ள ஏரியில் ஆனந்தமாக படகு சவாரி செய்யலாம். பெரிய ஏரியாக இருப்பதால் படகு சவாரி செய்ய அனைவரும் ஆர்வமுடன் செல்வார்கள்.
பள்ளிவாசல்
மூணாறு சித்திபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கேரளாவின் முதல் நீர்மின் திட்டம் தொடங்கப் பட்ட பகுதி ஆகும். பார்வையாளர்களுக்கும் முக்கியமான பிக்னிக் இடமாக கருதப்படுகிறது.
சின்னக்கனால் ஆணை இரங்கல்
இதுவும் மூணாறு பகுதியில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் அருவிகளும் பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. இங்கிருந்து கொண்டு மேற்கு தொடர்ச்சி மலையின் அழகை கண்டு ரசிக்கலாம். ஆணை இரங்கல் பகுதியில் தேயிலை தோட்டங்கள் அதிகம் காணப்படுகிறது. பசுமையான காடுகள் அடர்த்தியான மரங்கள் உள்ள வனப்பகுதியாகும்
டாப் ஸ்டேஷன்
மூணாறில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இந்தப் பகுதியில் உள்ளது. உயரமான மலைப்பகுதி உள்ள இடம் ஆகும். இங்கிருந்து தமிழ்நாட்டின் முழு அழகையும் ரசிக்கலாம். இந்த இடத்திலும் நீல குறிஞ்சி மலர்கள் அதிகமாக காணப்படுகிறது. கண்ணை கவரும் நிறத்தில் குறிஞ்சி மலர்கள் பார்ப்பதற்கு ரம்யமாக உள்ளது.
தேயிலை அருங்காட்சியகம்
இந்தப் பகுதியில் மூணாறு டாடா டீ .எஸ்டேட் செயல்பட்டு வருகிறது. டாடா நிறுவனம் தனக்கென ஒரு அருங்காட்சியாயத்தை இந்த பகுதியில் ஏற்படுத்தி உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் தேயிலை சம்பந்தப்பட்ட பொருட்கள் புகைப்படங்கள் கலைப் பொருட்கள் முதலியன அழகுபட அமைத்துள்ளார்கள். டாட்டா நிறுவனம் இங்கு தேயிலை உற்பத்தி செய்து வருகிறது.
மூணாறு
புகழ்பெற்ற மலைவாசஸ்தலம். நீர்வீழ்ச்சிகளும் நீரோடைகளும் அதிகம் காணப்படுகிறது. மூணாறு என்றால் மூன்று ஆறுகளை குறிக்கும். முத்திரப்புலா நல்ல தண்ணி குண்டலா மூன்றும் சேர்ந்த பகுதிதான் மூணாறு. கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் உள்ளது. அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்களின் ஓய்விடமாக இருந்தது. பள்ளத்தாக்குகள் மலைகள் நீரோடைகள் நீர்வீழ்ச்சிகள் தேயிலை தோட்டங்கள் வளைந்து செல்லும் நடைபாதைகள் என பார்ப்பதற்கு கண்களுக்கு குழுமையாக இருக்கும்.
உதகமண்டலம் கொடைக்கானல் இவற்றிற்கு அடுத்தபடியாக மூணாறு மூன்றாவது புகழ்பெற்ற கோடைவாசல் ஸ்தலமாக உள்ளது என்றால் மிகையாகாது. உள்ளூர் மக்கள் தவிர பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். மூணாறு தென்னகத்தின் காஷ்மீர் என அழைப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.