ஹைதராபாத்தில் நான் ரசித்த சுற்றுலாத்தலங்கள்..!

ஹைதராபாத் சுற்றுலா பயணம்...
ஹைதராபாத் சுற்றுலா பயணம்...

சுற்றுலா பயணம் மேற்கொள்வது என்பது எல்லோருக்கும் தேன் சாப்பிடுவது போன்றது. பயணம் மேற்கொள்ள போகிறோம் என்றால் டிக்கெட் புக் செய்ததிலிருந்து ரயில் ஏறும் வரை எல்லோருக்கும் ஒரே குதூகலம்தான். ஹைதராபாத்தில் நான் ரசித்த இடங்களை பகிர்ந்து கொள்கிறேன். 

ஹைதராபாத் பத்து மாதம் இதமான காலநிலை நிலவும். இரண்டு மாதங்கள்தான் சுட்டெரிக்கும் வெயில். சுவற்றில் கூட கை வைக்க முடியாத அளவுக்கு பொசுக்கி எடுத்து விடும். ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் மழை பெய்யும். பிறகு அடுத்த சீசன் தொடங்கும். ஹைதராபாத் முத்துக்களின் வியாபாரத்திற்கு பெயர் போன இடம். அதேபோல் சார்மினார் பக்கம் போனால் வளையல் அழகை கண்டு ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அழகழகான வளையல் விற்பனைகளை பார்த்து ரசித்து பேரம் பேசி வாங்குவதில் ஒரு அலாது இன்பம் கிடைக்கும். அங்கு சென்று வளையல் வாங்காமல் திரும்பும் பெண்களை பார்க்கவே முடியாது. வளையலில் அப்படி ஒரு கலை வண்ணம் . 

ஹைதராபாத் ஆந்திர பிரதேசமாக பிளவுபடாமல் இருந்த வரையில் அதன் தலைநகரம். இன்னும் சொல்லப் போனால் ஆந்திர மாநிலமும் தெலுங்கானா மாநிலமும் உரிமை கொண்டாடிய தலைநகர். இன்று தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர்.

இதையும் படியுங்கள்:
இளநீர் தாகம் தணிக்க மட்டும்தானா?
ஹைதராபாத் சுற்றுலா பயணம்...

முகமது குலி குதுப்ஷா இந்த நகரத்தை நிர்மாணித்த பிறகு பாக்யவதி என்னும் பஞ்சார இளம்பெண்ணைக் காதலித்து மணந்து அந்நகரத்திற்கு பாக்கிய நகரம் என்ற பெயரைச் சூட்டினார் .பாக்யவதி இஸ்லாமிய பெண்ணாக மாறிய பின் அவர் தன் பெயரை ஐதர் மஹால் என மாற்றினார். இதனால் என் நகருக்கு உறுதுச் சொல்லாகிய ஐதர் ஆ பாத் என்பவற்றைக் கொண்டு ஹைதராபாத் என்னும் பெயரை சூட்டினார் எனவும் கூறுவர். 

சுற்றுலா தலங்கள்: பிர்லா மந்திர், சார்மினார், கோல்கொண்டா, ராமோஜி திரைப்பட நகரம், லும்பினி பார்க், சாலார்ஜங் மியூசியம். 

1. பிர்லா மந்திர்

பிர்லா மந்திர்
பிர்லா மந்திர்

ஹைதராபாத் நகரில் நடுவில் உள்ள வெங்கடேஸ்வரர் கோவிலான பிர்லா மந்திர் 250 அடி உயரமுள்ள நவ்பத் காத் என்னும் குன்றில்13 ஏக்கர் பரப்பில்  வெள்ளை சலவை கல்லினால் கட்டப்பட்ட வெங்கடாசலபதி ஆலயம் ஆகும். இது உசேன் சாகர் ஏரியின் தென்கரையில் உள்ள குன்றின் மேல் எழுந்துள்ளது. கோவிலின் மேல் தளத்திலிருந்து நகரின் முழு தோட்டத்தையும் காணலாம். மூலவர் திருப்பதியில் உள்ளது போன்ற பெருமாள். முழு கோவிலும் நுட்பமான கலைநயமிக்க சிற்பங்களால் நிறைந்துள்ளது. மகாபாரதம், ராமாயணம் முதலியவற்றை நினைவூட்டுவதாக அமைந்துள்ளன. அதன் அருகில் பிர்லா கோளரங்கமும், அறிவியல் காட்சியமும் உள்ளன. லும்பினி பூங்காவும் அருகில் உள்ளது. ஹைதராபாத் ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது .மாநில சட்டசபையும், அருங்காட்சியகம் காணத்தத்தன. 

2. சார்மினார்

சார்மினார்
சார்மினார்

சூலிப்பட்டினத்தையும் கோல் கொண்டாவையும் இணைக்கும் சாலையில் சார்மினார் உள்ளது. உருது வார்த்தையான சார்மினார் நான்கு கோபுரங்கள் என்பதே சார்மினார் என பெயர் கொண்டுள்ளது. நிஜாம் காலத்தில் இங்கு அதிகமாக காலரா என்னும் நோய் ஏற்பட்டதால் நிஜாம் நான்கு மினார் என்னும் கோபுரங்கள் வைத்து ஊர் நடுவில் கட்டிடம் கட்டி வழிபாடு செய்தார் என்பர். சார்மினார் ஏறிச் சென்று காணத்தக்க மினார்கள் உடையது இல்லை .இது ஒரு பெரிய அழகிய கட்டிடம் சுற்றிச் சுற்றி வரத்தக்க அளவிற்கு ஊரின் நடுவே அமைந்திருக்கிறது. 

சார்மினாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் வண்ணமயமான கடைத் தெருக்களில் விதவிதமான கண்ணாடி, முத்து வளையல்கள் கிடைக்கும். வளையல்களுக்கு என்று ஒரு தெருவே இருக்கிறது. முத்துக்கள் இஸ்லாமியரின் பாரம்பரிய திருமண ஆடைகள், அழகு சாதனப் பொருட்கள், தங்கமுலாம் பூசிய அலங்கார பொருட்கள், வாசனை செண்டுகள் என பலப்பல கடைகள் மாலைப்பொழுதின் ஒளிவிளக்கில் அந்த பகுதியே மின்னும். நன்றாக பேரம் பேசி பொருட்களை வாங்கலாம். பெண்களின் பிரத்யேக ஷாப்பிங் சென்டர் இதுதான். 

3. கோல் கொண்டா

கோல் கொண்டா
கோல் கொண்டா

லகில் முதன் முதலில் வைரங்கள் கண்டெடுத்த பகுதியாக கோல் கொண்டாவை கூறுவர். கோட்டை முன் வாசல்களின் அருகே கைதட்டினால் 300 அடி உயரக்கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் ஒரு சிறந்த ஒளி அமைப்பு உள்ளது. இது கோட்டையில் இன்றும் காணும் அதிசயம் ஆகும். கோல்கொண்டாவில் 87 அரை வட்ட கொத்தலங்களுடனான 10 கிலோமீட்டர் நீள வெளிச்சவர்கள் உடைய நான்கு தனித்தனி கோட்டைகள் உள்ளன. கொத்தளங்கள் சிலவற்றில் இன்றும் பீரங்கிகள் பொருத்தியுள்ளனர் .கோட்டையில் எட்டு நுழைவாயில்கள் உள்ளன. ஏராளமான அரண்மனைக்குடியிருப்புகள், அரங்குகள், கோவில்கள், மசூதிகள் ஆகியவை உள்ளன. கோட்டைக்குள் மாகாளி கோவில் உள்ளது போனா திருவிழா இங்கு தொடங்குகிறது. 

கோட்டையின் காற்றோட்ட அமைப்புகள் அற்புதமான வடிவமைப்பு கொண்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த காற்றின் இதத்தை அனுபவிக்காமல் செல்வதில்லை. ஹைதராபாத்திற்கு முன்பு கோல் கொண்டா தான் ஆந்திராவின் தலைநகராக விளங்கியது. 

4. ராமோஜி திரைப்பட நகரம்

ராமோஜி திரைப்பட நகரம்
ராமோஜி திரைப்பட நகரம்

லகிலேயே மிகப்பெரிய திரைப்படத்தளம், விளையாட்டுப் பூங்கா ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இதன் பரப்பளவு எட்டு கிலோமீட்டர். இது ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்கள் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாகும். இது ஹைதராபாத் -விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ளது.  ராமோஜி பிலிம் சிட்டியில் எல்லா இடங்களிலும் போட்டோ எடுத்து அசத்தலாம். அங்கு நடைபெறும் ஷூட்டிங்கை சென்று பார்க்கலாம். சாலை, கிராம அமைப்பு, கோர்ட்டு அனைத்தையும் எப்படி கட்டி இருக்கிறார்கள் என்பதை ரசித்து சிரிக்கலாம். ஏரோபிளேனில் ஏறி பார்க்கலாம். குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான இடம் இதுதான். இப்படி நாள் முழுவதும் கண்டுபிடிப்பதற்கான சிறந்த இடம் ராமோஜி திரைப்பட நகரம். 

5. சாலார்ஜங் மியூசியம்

சாலார்ஜங் மியூசியம்
சாலார்ஜங் மியூசியம்

ரே மனிதன் தனியாக சேகரித்த உலக தொல்பொருட்களின் மிகப்பெரிய அருங்காட்சியகம் இது. இங்கு 'தி ஒயில்டு ரெபெக்கா' சிலையின்  நுணுக்கமான முக்காட்டு மடிப்பின் வடிவமைப்பை சிலாகிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வுலக சேகரிப்பு களில் பல நூற்றாண்டு பழமை வாய்ந்த தொல்பொருட்களின் சேகரிப்புகளும் உள்ளன. வகை வகையான கடிகாரங்களும் இங்கு பிரசித்தி பெற்றவை. அதனை  ஒரு மனிதன் வந்து ஆட்டி விடுவது போல் வடிவமைத்திருக்கும் அந்த கடிகார ஓசையை கேட்பதற்காக  பகல் 12 மணிக்கு ஓரிடத்தில் வந்து நிற்போம். அந்த அறை முழுதும் கூட்டத்திற்கு இடையில் அதன் ஓசையை கேட்பது தனித்துவம் மிகுந்ததாக இருக்கும். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்து இருப்பதுதான் அந்த கடிகாரத்தின் சிறப்பு. ஒவ்வொரு மணி ஓசையையும் கேட்கலாம் என்றாலும் 12 மணிக்கு கூட்டம் அலைமோதும் 12 முறை கேட்கலாம் அல்லவா? 

6. லும்பினி பார்க்

லும்பினி பார்க்
லும்பினி பார்க்

சைன் சாகர் ஏரி, அதனுள் ஒளிரும் புத்தர் சிலை. ஏரிக்கரை யில் இருக்கும் லும்பினி பார்க்,  நெக்லஸ் ரோடு இவையெல்லாம் கண்டு களிக்க வேண்டிய இடங்கள். உசேன் சாகர் ஏரியில் படகு பயணம் சென்று வருபவர்கள் உண்டு. அது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு நிகழ்வு. 

ஹைதராபாத் என்ற பெயர் வந்ததே ஒரு காதல் கதையால் தான். ஆதனால் காதலர் தினத்திற்கு கணவன் மனைவி, அவரவர் இணையுடன் சென்று வர ஏற்ற இடம் இதுவே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com