இந்தியாவில் உள்ள மர்மங்கள் நிறைந்த குகைகள்!

Caves full of mysteries
mysteries

இந்தியாவில் ஏராளமான குகைகள் இருக்கின்றன அதில் மர்மங்கள் நிறைந்த குகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

1. போரா குகைகள்

போரா குகைகள்
போரா குகைகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தகிரி மலைகளில் 800 முதல் 1300 மீட்டர் உயரத்தில் 150 ஆண்டு கால பழமையான விசித்திரமான சுண்ணாம்பு வடிவ குகைகளுக்கு பெயர் பெற்றபோரா குகைகளில் பல புராணக் கதைகள் இருக்கிறது.

குகையின் உச்சியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு குகைக்குள் விழுந்தபோது குகையையும் கண்டுபிடித்து லிங்கம்போல ஒரு கல்லையும் கண்டுள்ளனர். இதனை நம்பியுள்ள அங்குள்ள கிராம மக்கள் குகைக்கு வெளியே கோயிலை கட்டி வழிபடுவதாக கூறப்படுகிறது.

2. பீம்பேட்கா குகைகள்

பீம்பேட்கா குகைகள்
பீம்பேட்கா குகைகள்

மத்திய பிரதேசம், ராய்சன் மாவட்டத்தில் அமைந்துள்ள தொல்லியல் மற்றும் பாரம்பரிய களமாக உள்ள, பீம்பேட்கா பாறை வாழிடங்கள் வரலாற்றுக்கு முந்தைய கால இந்தியாவில் மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக அமைந்துள்ளது. முந்தைய கால மக்களின் நடனம் மற்றும் வேட்டையாடுதல்  முறையை தெரிந்துகொள்ள உதவுகிறது. இங்குள்ள தடயங்களும், அடையாளங்களும் இன்றும் பல மர்மங்களை கூறுவதாக சொல்லப்படுகிறது.

3. அமர்நாத் குகைகள்

அமர்நாத் குகைகள்
அமர்நாத் குகைகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 3888 மீட்டர் உயரத்தில் ஸ்ரீ நகரிலிருந்து கிட்டத்தட்ட 141 km தூரத்தில் அமைந்துள்ள இந்து குடைவரை கோவில்தான் அமர்நாத் குகைகள். அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை  மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் உருப்பெறுகிறது.

4. உண்டவல்லி குகைகள்

இதையும் படியுங்கள்:
பூமியின் கடைசி நாடு எங்க இருக்கு தெரியுமா?
Caves full of mysteries
உண்டவல்லி குகைகள்
உண்டவல்லி குகைகள்

ஆந்திரப் பிரதேசம், குண்டூர் மாவட்டத்தில் விஜயவாடாவிற்கு தென்மேற்கு குண்டூர் நகரத்திற்கு வடகிழக்கு 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உண்டவல்லி குகைகள். இது, குப்தா பாணியில் பாறையில் வெட்டப்பட்ட கட்டிடக்கலையில் செதுக்கப்பட்டுள்ள வியக்க வைக்கும் பாறை கட்டிடங்கள் மற்றும் பண்டைய இந்தியர்களின் கைவினை திறன் மற்றும் கலைத்திறனுக்கு சான்றாக இந்த இடம் உள்ளது.

5. எலிபண்டா குகைகள்

எலிபண்டா குகைகள்
எலிபண்டா குகைகள்

மஹாராஷ்டிரா, மாநிலத்தின் மும்பைத் துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள காராப்புரி (Gharapuri) தீவில் எலிபண்டா குகைகள் அமைந்துள்ளன. இங்குள்ள சிற்பங்களை துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இலக்காக போர்ச்சுகீசியர்கள் பயன்படுத்தியதால் பல சிற்பங்கள் சிதைக்கப்பட்டு இருந்தாலும் இங்கிருக்கும் திருமூர்த்தி சிலை எனப்படும் சிவ சிவன் சிலையில் மூன்று முகங்கள் பிரம்மா விஷ்ணு சிவன் ஆகியோரை குறிப்பதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com