கப்பல்கள் என்னதான் கடல் வழி போக்குவரத்தின் ராஜா தான் என்றாலும். 6.4 கிமீ நீளமுள்ள ஒரே நேர் பாதையில் அமைந்துள்ள இந்த குறுகிய வழித்தடங்களை கொண்டிருக்கும் உலகின் ஆழமான கால்வாயில் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் எவ்வளவு பெரிய கப்பல்கள் என்றாலும், சரி, அவைகள் எத்தகைய தொழில் நுட்பங்களில் உருவாகி இருந்தாலும் சரி இந்த கால்வாயில் இழுவை படகுகளின் இயக்கத்தில்தான் நகர்த்தப்படுகின்றன. அது தான் கிரீஸ் நாட்டில் உள்ள கொரிந்து கால்வாய்.
கொரிந்து கால்வாய் கிரேக்க நாட்டில் செயற்கையாக 6.4 கிமீ நீளத்தில். கடல் மட்டத்தில் நீரின் மேற்பரப்பில் 21 -25 மீ அகலமும், 8 மீ ஆழமும் கொண்ட உலகின் மிக ஆழமான கால்வாய். இருபுறமும் 90 மீ உயரமுள்ள மலைப் பாறைகளின் நடுவே நேராக செல்லும் இந்த கால்வாய் கொரிந்து வளைகுடா பகுதியையும் ஏசியன் கடல் பகுதியையும் இணைக்கிறது. எந்த கடல் வழி பூட்டுகளும் இல்லாத கால்வாய்.
பண்டைய காலத்தில் கிரேக்க நாட்டிற்கு செல்ல ஏஜியன் கடலில் பயணிக்கும் கப்பல்கள் பெலோபென்னிஸ் பகுதியை வட்டமிட்டே செல்ல வேண்டிய இருந்தது. இதனால் பயண தூரமும், நேரமும் அதிகரித்து வந்தது. இதனை தடுக்க அந்நாளில் கொரிந்து பகுதியை ஆண்ட மன்னர் பெரியாண்டர்தான் கொரிந்து கால்வாய்யை தோண்டுவதற்கான யோசனையை சொன்னார். பல்வேறு தடைகளுக்கு பின்னர் 1881 ம் ஆண்டு கால்வாய் தோண்டப்பட்டு. 1898 ம் ஆண்டு ஜூலை 25 ல் பயன்பாட்டிற்கு வந்தது.
கொரிந்து தற்போது தென் கிரேக்கத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சி. இதன் கட்டுப்பாட்டில் உள்ள கொரிந்து கால்வாய் பெலோபொன்னீயைச் சுற்றி உள்ள 700 கிமீ பயணத்தை சேமிக்கிறது. மேலும் கிரேக்க நிலப்பரப்பை பெலோபொன்னீஸிலிருந்து பிரித்து ஒரு தீவாக மாற்றுகிறது இந்த கால்வாய் வழியாக நவீன சரக்கு கப்பல்கள் செல்ல முடியாது. இருப்பினும் ஆண்டுக்கு 10000க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிக்கின்றன . ஒரு வழிப்பாதை அமைப்பில் ஒரு நேரத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும். அதுவும் இழுவை படகுகளின் உதவியுடன்.
கொரிந்து கால்வாய் அதன் வட மேற்கு முனையிலுள்ள பொசிதோனியா மற்றும் அதன் தென் கிழக்கு பகுதியில் உள்ள இஸ்தமியா துறைமுகங்களை இணைக்க உதவுகிறது. அதன் மூலம் கிரீஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது. கால்வாயை கடக்கும் இரண்டு நெடுஞ்சாலைகள் ஏதென்ஸ் நகரை இணைக்கிறது.
இந்த கால்வாயின் மேல் இரு சாலைகளும், ,ஒரு ரயில்வே பாலமும் செல்கிறது. இந்த கால்வாய்யை பார்க்கவே சுற்றுலா பயணிகள் வருகிறார்கள் இந்த கால்வாய் பாலத்தின் மீதிலிருந்து சுற்றுலா பயணிகள் பங்கி ஜம்பிங் செய்து மகிழ்கிறார்கள். உலகின் அழகிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று பெரிய கப்பல்கள் செல்ல முடியாத நிலையில் 2019 ம் ஆண்டு 640 அடி நீளமும், 74 அடி அகலமும் கொண்ட ஓரியன் குரூஸ் லைனர்ஸ் பயணிகள் கப்பல் 900 பயணிகளுடன் இந்த கால்வாயில் சென்று சாதனை படைத்தது.
கொரோனா தீவிரமாக இருந்த நேரத்தில் இந்த கால்வாய் கப்பல்கள் செல்ல தடை விதித்து மூடப்பட்டது. தற்போது மராமத்து பணிகள் நடைபெற்று முடிந்து மீண்டும் கப்பல்கள் செல்ல அனுமதித்து உள்ளனர்.