அடுத்த இந்தியா பயணமா? மகாராஷ்டிராவின் 7 காலத்தால் அழியாத கடல் கோட்டைகள்!

காலத்தால் அழியாத வீரத்தின் சின்னங்கள், உங்கள் அடுத்த பயணத்தை மறக்க முடியாததாக்கட்டும்!
மகாராஷ்டிராவின் 7 கடல் கோட்டைகள்
மகாராஷ்டிராவின் 7 கடல் கோட்டைகள்AI Image
Updated on

நீங்கள் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், ஒரு புதிய கலாச்சார அனுபவத்தையும், வரலாற்றின் காலச்சுவடுகளையும் தேடுகிறீர்களா? உலகின் அதிவேகமான நவீன மாற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியாவின் புகழ்பெற்ற மராட்டிய வரலாற்றின் கம்பீரத்தை பறைசாற்றும் இடங்கள் மகாராஷ்டிராவின் கடற்கரை ஓரங்களில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

அரபிக் கடலின் அலைகளைத் தழுவி நிற்கும் பிரம்மாண்டமான கடல்கோட்டைகளும், கண்களைக் கவரும் அமைதியான கடற்கரைகளும் உங்களை ஒரு காலப்பயணத்திற்கு அழைத்துச் செல்லும். வரலாற்றின் மர்மங்களைச் சுமந்து நிற்கும் இந்தக் கோட்டைகளையும், சொர்க்கம் போன்ற கடற்கரை பகுதிகளையும் நேரில் கண்டு ரசிப்பது, ஒவ்வொரு இந்தியனும் வாழ்நாளில் ஒருமுறையாவது அனுபவிக்க வேண்டிய அற்புதமான பயண அனுபவமாகும்.

மகாராஷ்டிராவின் கடற்கரை பொக்கிஷங்களை இந்த கட்டுரையின் வழி அறிந்துகொள்வோம்!

ஜஞ்ஜிரா கோட்டை 

Janjira Fort
Janjira Fort

ராய்கார்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு தீவுகோட்டை இது. எந்த மன்னராலும் வெல்ல முடியாத கோட்டை.

இதன் நான்கு புறமும் அரபிக் கடல் சூழ்ந்துள்ளது. பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஜஞ்சிராவில் உள்ள இந்த கோட்டை ஆங்கிலேயர்கள் டச்சுக்காரர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆகியோர் தாக்குதல்களை தாங்கி நீடித்து நிலைத்து வருகிறது. ஆதி காலத்தில் கற்களாலும் மரத்தாலும் கட்டப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை சேகரித்து வைக்க பயன்படுத்தப்பட்டது இந்த கோட்டை.

தவிர, சொர்ண துர்கா, விஜய் துர்கா, கொலபா கோட்டைகளும் உள்ளன. 

மகாராஷ்டிரா எல்லைகளாக மேற்கே அரபிக்கடல், வட மேற்கில் குஜராத், வடகிழக்கில் மத்திய பிரதேசம், தென்மேற்கு கோவா என காணப்படுகின்றன. இந்த கடல் கோட்டைகள் வெளிநாட்டு பயணிகளை ஈர்த்து வருகிறது. இவற்றில் பெரும்பாலான கோட்டைகள் கடலில் கட்டப்பட்டுள்ளன. 

இந்த கோட்டைகள் இன்றைய தேதி வரை தனது கம்பீரத்தை இழக்காமல் இருந்து வருகின்றன. எதிரிகளிடம் இருந்து தங்கள் துறைமுகத்தை பாதுகாக்கும் பொருட்டு அக்கால மன்னர்களால் கட்டப்பட்டன.

விஜய் துர்கா கோட்டை 

300 வருடங்களுக்கு முன்பு 17 ஆம் நூற்றாண்டில் மன்னர் சிவாஜி மூலம் கட்டப்பட்டது. அயல்நாட்டு எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தது . இந்த கோட்டை 17 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

இந்தக் கோட்டைக்குள் மூன்று அடுக்கு பாதுகாப்பு உள்ளது. பின்னர் நடந்த போரில் ஆங்கிலேயர்கள் இதனை கைப்பற்றி இந்த கோட்டைக்கு அகஸ்டஸ் கோட்டை என பெயரிட்டனர். 

உந்தேரி கோட்டை 

மும்பை துறைமுகத்தில் அருகே அமைந்துள்ளது இந்த உந்தேரி கோட்டை. 1678 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதன் உள்ளே சென்று பார்வையிட மும்பை துறைமுகம் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். துறைமுகம் அருகே அலிபாக் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த கோட்டை.

சிந்து துர்கா கோட்டை 

Sindhudurg Fort
Sindhudurg Fort

சிந்து துர்க் என்பது மராத்திய மொழியில் கடலில் கட்டப்பட்ட கோட்டை என பொருள் படும். அரபிக் கடலில் உள்ள ஒரு தீவில் மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜியால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 

ஹீரோ ஜி ஹிந்துல்கர் என்ற நிபுணர் தலைமையில் கட்டப்பட்டது. 4000 கிலோ இரும்பு உருக்கப்பட்டு அஸ்திவாரம் அமைக்க பயன்படுத்தப்பட்டது. 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 

கோட்டையை சுற்றி 9.2மீட்டர் உயரத்திலும் நாலு கிலோ மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. 

சுவர்ண துர்கா கோட்டை 

Suvarnadurg Fort
Suvarnadurg Fort

இதுவும் சிவாஜி மன்னரால் கட்டப்பட்டது. 1660 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மராட்டியர்கள் தங்க கிரீடத்தில் உள்ள சிறகு என அழைக்கப்படுகிறது. இந்த கோட்டை அரபிக் கடலின் நடுவே 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது 

கொலபா கோட்டை 

மும்பையில் இருந்து 98 கிலோ மீட்டர் தொலைவில் அலிபாக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இதுவும் சிவாஜி மன்னரால் கட்டப்பட்டது. இவரது இறுதி காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஆகும். 

இந்த கோட்டையின் உள்ளே இனிப்பான நீர் உள்ள கிணறு உள்ளது. 300 ஆண்டுகள் பழமையான கோட்டை ஆகும். கடல் அலை குறைந்த நாட்களில் நடந்து சென்று பார்க்கலாம்.

Maharashtra Beach
Maharashtra BeachAI Image

மகாராஷ்டிராவில் உள்ள இந்த கடல் கோட்டைகள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகின்றன. இவை தவிர மகாராஷ்டிராவில் எண்ணற்ற கடற்கரை பகுதிகள் அழகாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றி பார்க்கலாம் 

  • அலிபாக் கடற்கரை

  • செல்வா கடற்கரை

  • ஜூஹு கடற்கரை 

  • மரைன் டிரைவ் கடற்கரை

  • மத் தீவு கடற்கரை

  • மனொரி கடற்கரை 

  • கணபதி பூலே கடற்கரை

  • ஜன்ஜிரா கடற்கரை

  • தகானு கடற்கரை 

  • ஹெர்னாய் கடற்கரை

  • மண்ட்வா கடற்கரை

  • விஜய் துர்கா கடற்கரை 

  • ஸ்ரீ வரதன் கடற்கரை

  • சிந்து துர்கா கடற்கரை

  • கொங்கன் கடற்கரை 

  • பாசீன் கடற்கரை

என எண்ணற்ற கடற்கரை சுற்றுலா தலங்கள் உள்ளன. 

அனைத்து கடற்கரைகளும் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கு இடமாக உள்ளன. 

இந்தக் கடற்கரைகள் அனைத்தும் புனே மும்பை அவுரங்காபாத் நாக்பூர் சோலாப்பூர் ஆகிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. 

முடிவுரை:

பணிச்சூழல் மற்றும் அன்றாட இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தாய்நாட்டிற்கு நீங்கள் வருகை தரும் தருணங்களில், இந்த மகாராஷ்டிரக் கடற்கரை மற்றும் கோட்டைகளின் பயணம் உங்களுக்கு ஒரு புதிய புத்துணர்ச்சியையும், வரலாற்றுத் தேடலையும் வழங்கும் என்பது உறுதி.

அரபிக் கடலின் இரைச்சலுக்கு மத்தியில், சிவாஜி மகாராஜின் வீரத்தைப் பறைசாற்றும் இந்தக் கோட்டைகள் வெறும் கற்களால் ஆனவை மட்டுமல்ல; அவை நம் முன்னோர்களின் தியாகத்தையும், கட்டிடக்கலை நுணுக்கத்தையும் பறைசாற்றும் காலத்தின் சாட்சிகள்.

குடும்பத்துடனும், நண்பர்களுடனும் ஒரு மறக்க முடியாத பயணத்தை மேற்கொள்ள விரும்புவோருக்கு, மகாராஷ்டிராவின் இந்த வரலாற்றுச் சுற்றுலாத் தலங்கள் மிகச்சிறந்த தேர்வாகும். நீங்களும் உங்கள் அடுத்த இந்தியப் பயணத்திட்டத்தில் இந்தக் கடற்கரை ஓரத்தில் ஒரு பயணத்தைச் சேர்த்து, நம் மண்ணின் பெருமையை நேரில் கண்டு மகிழுங்கள்!

logo
Kalki Online
kalkionline.com